News Update :
Powered by Blogger.

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து

Penulis : karthik on Friday, 28 September 2012 | 23:26

Friday, 28 September 2012

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து
ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து

கொழும்பு, செப்.29-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

காம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல.

ஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 6 அல்லது 7 ஓவர் அவர் களத்தில் இருந்தாலே ஆட்டத்தின் போக்கு மாறி விடும். ஷேவாக் ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் எடுக்க கூடியவர். அவர் இல்லாததால் ஆஸ்திரேலியா எந்தவித பயமும் இல்லாமல் விளையாடி எளிதில் வெற்றி பெற்றது.

2011 உலக கோப்பைக்கு பிறகு பியூஸ்சாவ்லா இந்திய அணியில் எந்தவித முத்திரையும் பதிக்கவில்லை. இதனால் அவர் எப்படி தேர்வு பெற்றார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அவர் இடத்தில் அமித்மிஸ்ரா அல்லது ராகுல்சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
comments | | Read More...

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சென்னை, செப்.29-

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை இரவு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் வந்தனர்.

நாகாய் ஷின்சுகே (45), உன்டோஸ் யோகோ (49), வடரிடா மாகுலா (61) என்ற அந்த 3 பேரும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இடிந்தகரைக்கு செல்வதற்காக வந்துள்ளதாக மத்திய உளவுத்துறை மூலம் விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அந்த 3 பேரிடமும் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வந்த ஒரு மணி நேரத்திற்குள் இரவு 7 மணி அளவில் வேறு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொன்டெக் ரெய்னர் ஹெர்மான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தொடர்புள்ளவராக கண்டுபிடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன


புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன

புதுச்சேரி, செப்.28-

புதுவை மாநிலத்தில் நேற்று காலை லேசாக வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேகம் மூட்டமாக காணப்பட்டது. அதைத்தொடர்டந்து மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரவு 7 மணி வரை இந்த மழை நீடித்தது.

பாகூரில் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. பலத்த காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.  இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

வில்லியனூரில் திடீரென்று நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 6 மணி வரை இந்த மழை நீடித்தது. அப்போது மின்னலுடன் பயங்கர இடி இடித்தது. இதனால் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் கீழே விழுந்து விட்டன.

இதே போல் ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், மங்கலம், அரியூர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் குடிசைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். பலத்த காற்று வீசியதால் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.

நெட்டப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரு மரம் ரோட்டின் நடுவே விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த மரம் விழுந்ததால் அந்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது.
ரோட்டில் நடுவே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் ரோட்டில் நடுவே விழுந்து இருந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

மேலும் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே மின்சார கம்பம் ஒன்று அடியோடு சரிந்து ரோட்டில் விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
திருக்கனூர், திருபுவனை திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது. ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது.

இதே போல் திருபுவனையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. மேலும் திருவாண்டார் கோவில், மதகடிப்பட்டு, சன்னியாசிகுப்பம், நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மழை பெய்தது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger