News Update :
Powered by Blogger.

உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Penulis : karthik on Monday, 17 September 2012 | 23:49

Monday, 17 September 2012

உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம் உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திண்டுக்கல், செப். 18-
 உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ. 3 லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த திருட்டுக்கும்பலை பிடிக்க போலீசார் முயன்றபோது, துப்பாக்கியை காட்டி அக்கும்பல் தப்பியது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் சப்-கோர்ட்டு, வழக்கில் ஆஜராகாத தேனà �¿ மேலக்கூடலூரை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் என்பவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க திண்டுக்கல் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட முருகனுக்கு பதிலாக வேறொரு வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை முருகன் எனக் கூறி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவருக்கு தண்டனையும் வி�® �ிக்கப்பட்டது. சிறையிலிருந்த போலி நபர், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் தனது பெயர் கம்பம் சத்யா, தனக்கும், துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேறு ஒரு வழக்கில் கைதான என்னை போலீசார், குற்றவாளியாக சேர்த்து, தண்டனை வாங்கி தந்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வெங்கிடுசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை à ��ிசாரித்த நீதிபதி உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தார். இத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கலெக்டர் வழங்கவேண்டும் என்றும், மேலும் தவறு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடமிருந்து அபராத தொகையை வசூலிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தற்போது ரெயில்வே இன்ஸ் பெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர் முருகன் மீது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

comments | | Read More...

சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு


சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு

ஈரோடு, செப். 18-
 ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் தமிழ்தேசிய இன எழுச்சி பொதுக்கூட்டம் ஈரோடு பெரியார் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் செயராசு தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அமைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை வளர்த்தவர்கள், என்னை உருவாக்�® �ியவர்கள், நான் தலைவராக மதித்தவர்கள் இப்போது நான் பெரியாரை மறந்து விட்டதாக விமர்சிக்கிறார்கள். பெரியார் இல்லாமல் இந்த சமூகத்துக்கு எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. பெரியார் செய்த சாதி ஒழிப்பு போராட்டம், சமூக நீதிபோர், பெண்ணிய விடுதலை, தீண்டாமை, பகுத்தறிவு கடவுள் மறுப்பு இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். என்னை பற்றிய விமர்சனங்கள் என்னை சிதைக்கவி ல்லை. மாறாக என்னை செதுக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் வழிகாட்டியாக பெரியாரை ஏற்றுக் கொள்வோமே தவிர தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை தாங்கள் சார்ந்திருக்கும் சாதிக்காகவும், மதத்துக்காகவும் சேர்ந்த மக்கள் கூட்டம் இப்போது முதல்முறையாக தமிழுக்காக சேர்ந்து இருக்கிறது. இன்று தமிழ் தேசிய இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதை எழுச்சி அடைய செய்ய வேண்டுமà � . எப்போது தமிழன் தன்னை இந்தியன் என்று கருதினானோ அப்போது தமிழ் இனம் வீழ்ச்சி அடைந்து விட்டது. தமிழர்கள் முதலில் இனப்பெருமை கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது. தமிழ் மொழியின் மீட்சியே தமிழ் இனத்தின் எழுச்சியாக இருக்க முடியும். இவ்வாறு சீமான் பேசினார்.

comments | | Read More...

டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு




டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு

சென்னை, செப். 18-

தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசு கடந்த 13-ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்த்தியதன் விளைவாக தமிழ் நாட்டில் ரூபாய் 6.07 அளவிற்கு வரிகள் உள்பட உயர்ந்துள்ளது.

இந்திய அரசு மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதன் விளைவாக மேலும் கூடுதல் சிலிண்டர்களை ரூபாய் 400 அளவிற்கு அதிகமாக கொடுத்து சந்தை விலையில் பெற வேண்டும்.

இதுமட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவிகித அந்நிய நாட்டு கம்பெனிகள் முதலீடு போடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்கவும் முடிவெடுத்துள்ளது. ஒலிபரப்பு சேவை துறையில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இவை போன்ற நடவடிக்கைகளால் வீழ்ந்து விட்ட பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உண்மையில் இந்திய அரசின் இந்த முடிவுகள் சாதாரண ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அன்றாட வாழ்க்கையே அவர்களுக்கு பிரச்சினையாகி விடும். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே இருந்து வருகிற விலைவாசி மேலும் உயரும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும், வறுமை அதிகரிக்கும்.

இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் இவைதான் நடக்கும். இந்திய அரசு வகுத்துள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் 8.2 சதவிகிதம்தான் எட்ட முடியும் என்று அறிவித்தார்.

தற்போதைய இந்திய அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளே இச்சீரழிவிற்கு காரணமாகும். இருந்தும் இதே கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்தவே இந்திய அரசு முனைந்துள்ளது.

உண்மையில் பாமர மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் பொருளாதார கொள்கையை மாற்றி யமைக்க இந்திய அரசு தயாராக இல்லை. இதன் விளைவாக மேலும் பொருளாதார நெருக்கடி வலுக்குமே தவிர, வளர்ச்சியோ அல்லது வறுமை ஒழிப்போ வெறும் பகல் கனவாகத்தான் முடியும்.

இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்த்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் வருகிற 20.09.2012 வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும் மற்றும் தோழமைக் கட்சிகளும் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளத ை தே.மு.தி.க. சார்பில் நான் வரவேற்பதுடன், முழு அடைப்பு போராட்டத்திலும் தே.மு.தி.க. கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை வருகிற 20ஆம் தேதி அன்று இந்த முடிவிற்கு தமிழ்நாட்டு மக்கள் பரிபூரண ஒத்துழைப்பு நல்கி, இப்போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது இந்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger