News Update :
Powered by Blogger.

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு

Penulis : karthik on Monday, 6 August 2012 | 16:29

Monday, 6 August 2012





தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங� �கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

6 மாதங்களில் சுமார் 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப்பட்டு வருகிறது என்று தினபூமி நாளிதழின் ஆசிரியர் தமது புகார் மனுவில் கூறியிருந்தார். இப்புகார் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே மேலூர் சுற்றுவட்டார த்தில் சட்டவிரோத கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 14,24, ஜனவரி 28, பிப்ரவரி 3 ஆகிய நாட்களில் இரவு முழுவதும் வாகன சோதனை நடத் தப்பட்டது. தினபூமி ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் 6 மாதத்தில் ரூ1650 கோடி மதிப்பிலான கிரானைட் கற்ககள் கடத்தப்படவில்லை. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 13-ந் தேதி மேலூர் தாசில்தாரால் ஒரு கிரானைட் கல் வாகனம் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒலிம்பஸ் நிறுவனம்

தினபூமி நாளிதழ் ஆசிரியர் தமது புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கீழவளவு கிராமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கீழவளவு மற்றும் கீழையூரில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. 3 குவாரிகளில் மட்டும் ரூ23.42 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ரூ16,338 கோடி ரூபாய் இழப்பு

இதேபோல் எஞ்சிய 91 குவாரிகளிலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் டாமின் குவாரிகளில் இருந்து சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. மேலும் கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது

கனிம வள அதிகாரிகள் உடந்தை

பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற கிராமங்களில் கிர ானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழ� ��க்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் இதற்காகப் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். ச� �ல நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர்.

கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலை க� �்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர் மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வ� �ாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயம் தமது அறிக்கையில் கூறிய ுள்ளார்....!







comments | | Read More...

4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா

Penulis : karthik on Sunday, 5 August 2012 | 00:59

Sunday, 5 August 2012





கர்நாடக மாநிலத்தில் சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசு டாக்டர்கள் இன்று அதிரடியாக ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம ் கொடுத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில மருத்துவ அலுவலர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 'மாநிலம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 4500 டாக்டர்க� ��் தங்கள் ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் கொடுத்துள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்' என்றார்.
 
டாக்டர்களின் கோர ிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் லிமாபாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும்படி மருத்துவ பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







comments | | Read More...

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா

Penulis : karthik on Saturday, 4 August 2012 | 23:16

Saturday, 4 August 2012




பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடுத்த� � தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வாகத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறுத்தப்பட்டுள்ளார். 

எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக நிறுத்தினால் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பது பாரதீய ஜனதாவில் உள்ள சில தலைவர்கள� ��ு கணிப்பாகும். 

ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் பகிரங்கமாக நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின்போதும் அவர் இந்த பிரச்சினையை எழுப்பி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மத சார்பற்ற தலைவர் ஒருவரையே நிறுத்த வேண்டும். 

இதுதொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்கார ி தனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிதிஷ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். 

நிதிஷ்குமாரின் கடும் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதா நரேந்திரமோடியை நிறுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியது. இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளதாக � ��கவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை கட்சி இன்றும் முடிவு செய்யவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை முன் நிறுத்தமாட்டோம் என்று நிதின் கட்காரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 

இதுபற்றி நிதின் கட்காரியை நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த தகவலை உறுதி செய்தார். நிதின் கட்காரி கூறியதாவது:- 
ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லியில் கூட்டணி தலைவர்கள் கூட் டம் நடந்தது. அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

பீகாரில் லல்லு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு முஸ்லிம்கள் ஆதரவு இருந்தது. அதன் பிறகு நிதிஷ்குமார் ஆட்சியை கைப்பற்றினார். முஸ்லிம்கள் ஆதரவை பெறுவதற்காக நரேந்திரமோடியை நிதிஷ்குமார் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. 

மேலும் பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக நரேந்திரமோடி தெரிவித்த கருத்தும் அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் 2005-ம் ஆண்டு முதல் பனிப்போர் நிலவி வந்தது. அது ஜனாதிபதி தேர்தலின் போது வெளிப்படையாக வெடித்தது. முக்கிய கூட்டணி கட்சியின் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதாவும் அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.








comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger