News Update :
Powered by Blogger.

மகன் அகிலேஷ் அரசு மீது முலாயம் அதிருப்தி

Penulis : karthik on Wednesday, 1 August 2012 | 21:38

Wednesday, 1 August 2012





சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட்டத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று கூட்டினார். இந்த க ூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆலம் கான் உள்ளிட்ட அமைச்சர்கள், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் அச்ரே குஸ்வாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முலாயம் கூறுகையில்,

இந்த அரசில் ஏதோ குறையாக உள்ளது. கடந்த அரசுக்கும், இந்த அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர நான் உங்களுக்கு 6 மாத அவகாசம் கொடுத்துள்ளேன். அதில் 4 மாதங்கள் முடிந்துவ� �்ட்டன. இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. அதற்குள் எதாவது உறுப்படியாக செய்தால் நல்லது என்றார்.

அவர் விளாசித் தள்ளியபோது அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அந்த கூட்டத்தில் முலாயம் தெரிவித்ததாக ஒருவர் கூறுகையில்,

பல அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர்கள் தங்கள் செய்லபாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பணியை ஒழுங்காக செய்கின்றனர். அமைச்சர்கள் பொது இடங்களில் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசக் கூடாது. அது அவப் பெயரைத் தான் ஏற்படுத்தும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். எனவே நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.







comments | | Read More...

கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி





இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 'நான்' என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த், அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார்.

'நான்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இதுவரை 25 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. 'நான்' படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. நடிகனாக விரும்பியதுமே நிறைய பேர் கதையுடன் வந்தார்கள். அவை இசை சார்ந்தே இருந்தன.

தில்லானா மோகனம்பாள் அளவுக்கெல்லாம் அவை இருந்தன. ஆனால் எனக்கு அந்த கதைகளில் உடன்பாடு இல்லை. 'நான்' படத்தின் கதை திருப்தியாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது.

கதாநாயகி ரூபாவுக்கும், எனக்கும் கெமஸ்டரி இல்லை. என்னை அவர் அண்ணன் என்றே அழைத்தார். என் மனைவி பாத்திமாவால்தான் இப்படம் உருவாகியுள்ளது. ஒருவன் நல்லவனாக வாழ்வதை சூழ்நில� ��கள் தீர்மானிக்கின்றன. அத்தகு சூழ்நிலை அமையாத ஒரு இளைஞனின் வாழ்க்கையே 'நான்' படத்தின் கதை. இந்த படத்தில் பாடல்கள் வரவேற்பு பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.







comments | | Read More...

கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி

Penulis : karthik on Tuesday, 31 July 2012 | 23:48

Tuesday, 31 July 2012





வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60), கூலி வேலை செய்து வந்தார். கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித ்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 

இந்தத நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து க� �ண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார். 

ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார். 

காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ள� ��ர். 

கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger