News Update :
Powered by Blogger.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ தங்கம் பரிசு-சகாரா நிறுவனம் அறிவிப்பு

Penulis : karthik on Friday, 27 July 2012 | 02:54

Friday, 27 July 2012





லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு, 5 கிலோ தங்கம் அளிக்க போவதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் வழங்க சகாரா நிறுவனம் முன்வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மொத்தம் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து அதிகளவிலான வீரர்கள், வீராங்கனைகள், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால், இந்த முறை நாட்டிற்கு அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமடையும் வகையில், சகாரா நிறுவனம் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களில் தங்கப்பதக்கம் வெல்லும் நபருக்கு 5 கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிப் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலம் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் பரிசளிக்க உள்ளதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் குழு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் பெறும் அணியின் வீரர்களுக்கு, தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசளிக்கப்படும் தங்கம் பதக்கம் வடிவில் வழங்கப்படும்.

இது குறித்து சகாரா இந்தியா பரிவார் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய வீரர்களும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். ஒரு விளையாட்டு வீரரால் இதை விட நாட்டிற்கு வேறெந்த வகையிலும் பெருமை சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்தியர்களை உற்சாகப்படுத்த இது ஒரு சிறிய அளவிலான பரிசு அறிவிப்பு ஆகும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர் நாட்டின் ஒரு வெற்றி சின்னமாகவே கருதப்படுவார் என்றார்.







comments | | Read More...

பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் அன்னா ஹசாரே

Penulis : karthik on Thursday, 26 July 2012 | 23:47

Thursday, 26 July 2012




சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
2014-ம் ஆண்டு பாராள� �மன்ற தேர்தலுக்கு முன்பு நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். தேர்தலில் நிறுத்துவதற்காக நல்ல மனிதர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வேன். 

அவர்களில் சிறந்த வேட்பாளரை அன்னா ஹசாரே குழு தேர்வு செய்யும். அந்த வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்� �ேன். அந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் நிற்கலாம் அல்லது ஒரே கட்சியாகவும் நிற்கலாம். இதற்காக புதிய கட்சி தொடங்குவதில் தவறு இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.








comments | | Read More...

லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் வில்வித்தை பந்தயம் இன்று தொடக்கம்




30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று கோலாகலமாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கால்பந்து போட்ட� �� தொடங்கி விட்டது. ஆனால் இன்று கால்பந்து போட்டிக்கு ஓய்வு நாளாகும். தொடக்க விழா நாளான இன்று வில்வித்தை பந்தயம் மட்டும் நடைபெறுகிறது. 

பழம்பெருமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியமான லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல்நாளில் பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கும் இந்த பந� �தயம் மாலை 7 மணி வரை நடக்கிறது. 6 வீரர்-வீராங்கனைகள் ஆண்கள் தனிநபர், அணிகள், பெண்கள் தனிநபர், அணிகள் ஆகிய 4 பிரிவுகளில் தொடக்க சுற்று (ரேங்கிங் ரவுண்ட்) இன்று நடக்கிறது. 

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஜெயந்தா தலுத்கர், தருண்தீப்ராய், ராகுல் பானர்ஜி ஆகியோரும், பெண்கள் பிரிவில ் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைல்யா தேவி, செய்க்ரோஸ்வாலு ஆகியோரும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள். இந்தியா இரண்டு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் வில்வித்தையில் இந்திய வீரர்-வீராங்கனைகள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு பந்தயங்களில் பங்கேற்கிறார்கள். 

தனிநபர் பிரிவில் தலா 62 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். அணிகள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் அணிகள் பிரிவில் நாளை (28-ந் தேதி) பதக்க சுற்று பந்தயங்கள் நடக்கிறது. பெண்கள் அணிகள் பிரிவில் பதக்க சுற்று 29-ந் தேதி நடக்கிறது. தனிநபர் ஆண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 2-ந் தேதியும், தனிநபர் பெண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 3-ந் தேதியும் ந� �க்கிறது. 

சாதித்து காட்டுவோம் என்ற முனைப்புடன் சென்றுள்ள வில்வித்தை வீரர்-வீராங்கனைகள் நெருக்கடிக்கு ஆளாகாமல் அம்பை எய்தால் புகழ் பெற்ற மைதானத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு உத்வேகமும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger