News Update :
Powered by Blogger.

மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா பேட்டி

Penulis : karthik on Monday, 23 July 2012 | 23:22

Monday, 23 July 2012





மதுரையில் நிருபர்களிடம் நித்யானந்தா கூறியதாவது:-  
 
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக கோர்ட்டு உத்தர விட்டது. கலிபோர்னியாக வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும்தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள் அமைப்புகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.
 
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில் வாடகைதாரர்கள் காலி செய்யுமாறு எனது சீடர்கள் மிரட்டவில்லை. மருத்துவமனை, பள்ளிகளை புறநகர் பகுதியில் அமைப்பதைவிட நகருக்குள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் காலி செய்யுமாறு கூறி வருகிறோம் . ஜூலை 30-ந்தேதி ஆஜராகும்படி கர்நாடக கோர்ட்டு உத்தரவிடவில்லை.
 
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகும்படிதான் சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு முன் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் � ��ெய்துவிட்டேன். அங்கு சென்று வந்த பின்பு சி.பி.சி .ஐ.டி. முன் ஆஜராவேன். மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை. ஆதீன சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுபடி செயல்படுவேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.







comments | | Read More...

த்ரிஷா பாய்பிரெண்ட் நயன்தாராவுடன் ஜோடி!





நயன்தாரா-த்ரிஷா இடையேயான சண்டை தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஏன் சண்டை எ� �்ன பிரச்சினை என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் வரிசையாக பல நடிகர்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் இருவரும் அதை ஒப்புக்கொண்டதில்லை.


ஜென்ம விரோதியாக பாவிக்கப்பட்டு ரசிகர்கள் மனதில் எதிரெதிராகவே வைக்கப்பட்டிருந்த இருவரும் திடீரென நண்பர்களாக மாறியது தான் ஹைலைட். ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் கட்டித்தழுவி அன்பு பரிமாறிக்கொண்டனர். இப்போது நண்பர்களாக இருக்கும் இருவரும் கூ டிய விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.

த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக 'ஓங்காரா' என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் எடுக்கப்படவிருக்கிறது. சில மாதத்திற்கு முன் நடந்த நடிகர் நாகேஷ்வர ராவ்வின் பிளாட்டினம் ஜூப்ளி நிகழ்ச்சியில் நயன்தாரா அருகில் அமர்ந்ததற்காக ராணாவுக்கும், த்ரிஷாவிற்கும் இடையே சண்டை என பேசிக்கொள்ளப்பட்டது.







comments | | Read More...

ஜனாதிபதியாகும் பிரணாப் முகர்ஜி பெரும் சலுகைகள்





நாட்டின் 13 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கும் பிரணாப் முகர்ஜிக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன இங்கு உங்கள் பார்வைக்காக.
 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒரு மாத சம்பளம் 1,50,000  ரூபாய் ஆகும்.
கம்பீரமான அழகான ராஷ்ட்ரபதி பவனில் தங்கும் அவர் அங்கு சிம்லா, ஹைதராபாத் ராஜமரியாதையுடன் நடத்தப்படுவார். ராஷ்ட்ரபதி பவனில் கிட்டத்தட்ட 200 பணியாளர்களோடு ஒரு குண்டுத� ��ளைக்காத விலை உயர்ந்த மெர்சிடிஸ் அலுவலக மகிழ்வுந்தும் அவருடன் இருக்கும்.
 
ஓய்வு காலத்தில் அனைத்து வசதிகள் அடங்கிய ஒரு வாடகை இல்லாத மிகப்பெரிய மாளிகையுடன் மாத ஓய்வு ஊதியமாக ரூபாய் 75,000 ஆயிரம் அவருக்கு வழங்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கு இரண்டு இலவச தொலைபேசிகளும், ஒரு கைப்பேசியும் வழங்கப்படும்,
 
ஒரு தனிச்செயலாளர் உட்பட 5 பணியாளார்களும், ஒரு அலுவலக மகிழ்வுந்து உட்பட அனைத்து பணியாளர்களுக்கான சம்பளம் ரூபாய் 60000 வழங்கப்படும� �. இரயில் மற்றும் விமானங்களில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக ஒரு உதவியாளருடன் சென்று வரலாம்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger