News Update :
Powered by Blogger.

மீண்டும் உலக சாம்பியன் ஆவேன்: விஸ்வநாதன் ஆனந்த்

Penulis : karthik on Thursday, 12 July 2012 | 22:58

Thursday, 12 July 2012





ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தனது 42-வது வயதிலும் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அடுத்த சாம்பியன் யார் என ஆனந்திடம் கேட்டதற்கு, 'நான் மீண்டும் உலக சாம்பிய� �் ஆவேன். மீண்டும் சாம்பியன் ஆவதில் நான் ஆர்வமாக உள்ளேன்' என அவர் பதிலளித்தார்.
 
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை துருக்கியில் நடக்க உள்ள செஸ் சாம்பியன்ஷிப்பில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் ஆனந்த் த� �ரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய ஆனந்த், 'இதுபோன்ற வடிவிலான தொடர்களில் நான் பலமுறை விளையாடியுள்ளேன். எனவே வேறு தொடர்களில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு விளையாட்டை நேசித்து, கடினமாக உழைத்தால் அந்த விளையாட்டில் சிறப்பாக செயல்பட முடியும். அப்போது வயது ஒரு தடையாக இருக்காது. அதனால்தான் 42 வயதிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது' எனக் கூறியுள்ளார்.&nb sp;








comments | | Read More...

நடனப்பள்ளி மாணவிகளிடம் இளைஞர்கள் சில்மிஷம் - ஷோபனா போலீசில் புகார்





தன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி � ��வரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.

நேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.
ஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் ச� ��ல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில்,

"நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.
ஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்� ��ு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.

இதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.
பிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றார்.







comments | | Read More...

ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு: டோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி





இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. விளையாட்டு மூலம் புகழை பெற்ற அவர் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார். டோனி 2006-ம் ஆண்டு கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தில் (கே.எஸ்.டி.எல்) ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 

டோனியை அந்த நிறுவனம் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டோனி அந்த விளம்பர நிறுவனத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டோனி மீது கே.எஸ்.டி.எல். நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விளம்பர ஒப்பந்த விதி முறைகளை டோனி மீறி வி� ��்டதாகவும், இதனால் அவர் ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குருராஜன் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தார். ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.





















comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger