Friday, 29 June 2012
இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கான "ரேண்டம்" எண் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான "ரேங்க்" பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணா மலையை சேர்ந்த மாணவர் தேவபிரசாத் முதலிடத்தை பிடித்துள்ளார், வேலூர் சிவகுமார் 2-வது இடம் பெற்றார் (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார்) திருச்சி கவுதம் 3 வது இடம் பெற்றார். (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் 2-வது இடம்) இவர்கள் உள்பட 32 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப் பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் ஸ்ரீதர் இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் , பேராசிரியர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. பொது கவுன்சிலிங் 13-ந்தேதி தொடங்குகிறது. ரேங்க் பட்டியல் அடிப்படையில் மாணவர� ��கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பித்த மாணவர்கள தங்கள் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
home
இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற சிவசங்கர் மேனன் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய தரப்பில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சிவசங்கர் மேனன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்றார்.
இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்க� �் பெரும் குஷியடைந்துள்ளனர்.லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது. திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார். இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Home