News Update :
Powered by Blogger.

நடராஜனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் செய்த சதி - சக்தி எது?

Penulis : karthik on Saturday, 12 May 2012 | 01:57

Saturday, 12 May 2012




சசிகலா நடராஜனுக்கு 6 வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததால் இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று   அவரது வருகைக்காக சிறை வாசலில் பத்திரிகை யாளர்களை காத்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று நடராஜன் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களீடம் வந்து,   இன்று நடராஜன் விடுதலை இல்லை என்று  அவர்களை களைந்துபோகச்செய்தனர்.    பத்திரிகையாளர� �கள் அங்கிருந்து அகன்ற நேரத்தில் ரகசியமாக சசிகலா நடராஜன் சிறையில் இருந்து வெளியேறி காரில் பறந்துவிட்டார்.   உடன் அவரது ஆதரவாளர்கள் துணை சென்றன்ர்.

வழக்கமாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் நடராஜன் எங்கேயும் சென்றதில்லை.   முதல் வழக்கில் சென்னையில்  கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டபோதுநள்� �ிரவிலும் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் காவல் நிலையத்திலும் நீதிபதி வீட்டிற்கு முன்பும் அரசுக்கு எதிராக கோப கணலை கொட்டினார்.  

அதன்பிறகும் அவர் மீது அடுக்கடுக்காக போடப்பட்ட 5 வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கும் , காவல் நிலையைத்திற்கும் கொண்டுவரப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்களிட� ��் பேசக்கூடாது என்று போலீசார் தடுத்த போதும், அதையும் மீறி பத்திரிகையாளர்களிடம் வழக்கு சம்பந்தமாகவும் அரசின் பழிவாங்கின் நோக்கத்தில் பொய்வழக்கு போடப்படுகிறது என்றும் பேசியிருந்தார்.

நேற்று 10.5.2012 கூட அவருக்கு அனைத்து வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது என்பதையும் இன்று விடுதலை ஆகி தஞ்சைக்கு வருவார் என்பதையும் அவரது வழக்கறிஞர் வடிவேலு பத்திரிகையாளர்களூக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியை சொல்லினார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று சிறையில் இருந்து வெளியேறியிருக்கும் நடராஜனை பத்திரிகை யாளர்களை சந்திக்க விடாமல் செய்த சக்தி எது? என்று கூடியிருந்த பத்திரிகை யாளர்� �ளுக்கும்,   அவருக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது.



comments | | Read More...

பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி

Penulis : karthik on Friday, 11 May 2012 | 22:24

Friday, 11 May 2012




மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.

வழக்கமான தன் பாணியை முற்றாக விடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்கி வருகிறார்.

ஜீவாவுடன் பூஜா ஹெக்டே, நரேன் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் 250 பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் திருவல்லிக்கேணியில் க்ளைமாக்ஸின் ஒரு பகுதியைப் படமாக்கிய மிஷ்கின், இப்போது மொத்த குழுவுடன் காரைக்காலுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இங்கும் இரவு நேர ஷூட்டிங்தான். இதுகுறித்து ஜீவா கூறுகையில், "இவ்வளவு பெரிய க்ளைமாக்ஸ் இதுவரை நான் நடித்த படங்களில் வந்ததில்லை. வழக்கம்போல இரவு நேரத்தில்தான் படமாகிறத� ��. படம் வந்தபிறகு இதற்கான காரணம் புரியும்," என்றார்.

யுடிவி நேரடியாக தயாரிக்கும் படங்களில் முகமூடியும் ஒன்று!



comments | | Read More...

நித்தியானந்தா கெடு விவகாரம்! ஜெயேந்திரர் கருத்து கூற மறுப்பு!




மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவும் எத� �ர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், நித்தியானந்தாவை மதுரை இ� �ைய ஆதீனமாக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும். ஆனால் நித்தியானந்தா அவ்வாறு செய்யவில்லை.

மேலும் ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றார்.

இதற்கு பதிலளித்த நித்தியானந்தா இந்த கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் 10 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என்று  கெடு' விதித்தார்.

இதுகுறித்து ஜெயேந்திரரின் கருத்துக்களை பெறுவதற்காக திங்கள்கிழமை காலை காஞ்சி சங்கர மடத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றனர்.

அங்கு பூஜைகளை முடித்து வந்த ஜெயேந்திரர் முன் பத்திரிகையாளர்கள் நின்றனர். இதை பார்த்த ஜெயேந்திரர் தனது வாய் மீது கையை வைத்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பது போல கூறிவிட்டு, உலக நன்மைக்காக நடைபெறும் சகஸ்கர சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டார்.

அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ஜெயேந்திரர் மவுனவிரதத்தில் இருக்கிறார். அதனால் இவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger