News Update :
Powered by Blogger.

பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல்

Penulis : karthik on Friday, 4 May 2012 | 23:01

Friday, 4 May 2012




பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே மாத� �் 2-ந் தேதி அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வேட்டையை அமெரிக்கா மிகவும் ரகசியமாக திட்டம் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த வேட்டை முடிந்து அமெரிக்கா அறிவித்த பிறகே இத்தகவல் பாகிஸ்தானுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தது.

பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதன் பிறகும் பின்லேடனை கொல்ல நடந்த வேட்டை குறித்தும், பின்லேடன் தனது கடைசி கால கட்டத்தில் என்னென்ன திட்டங்களை தீட்டினார் எ� �்ற விவரங்களும் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

பின்லேடன் தங்கிய வீட்டில் கிடைத்த சில முக்கிய ஆவணங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வணிக மைய இரட்டை கோபுரம் கட்டிடம் மீது நடந்த தாக்குதல் முதல் பின்லேடன் கொல்லப்பட்டது வரையில் நடந்த 10 ஆண்டு தேடுதல் வேட்டை குறித்து பீட்டர் எல். பெர்கென் என்பவர் 'மேன்ஹெண்ட்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

பின்லேடனின் வேட்டையின் போது அமெரிக்க படைகள் என்ன செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா பிறப்பித்த உத்தரவு பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பின்லேடனின் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க சிறப்பு படைக்கு கமாண்டராக வில்லியம் மெராவென் இருந்தார். அவருக்கு ஜனாதிபதி ஒபாமா தெளிவான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.

அதில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பினால் அமெரிக்க படையினர் தங்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை கொடுத்த செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அபோதாபாத்துக்கு சென்று சேர்ந்ததும் அல்லது பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் எத� �ர்த்தால் என்னென்ன செய்ய வேண்டும் என சிறப்பு படையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டுதான் புறப்பட்டு சென்றனர்.

மேலும் பின்லேடனை கொல்ல எடுக்கும் நடவடிக்கை குறித்த திட்டத்தை உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தீட்டி அது வெளியே கசிந்து விடாமல் பாதுகாத்து வந்தார்கள். அதனாலேயே பாகிஸ்தானுக்கோ, அந்த பங்களா பகுதியில் வசித்த பொதுமக்களுக்கோ தெரிய வரவில்லை.

இந்த நடவடிக்கை மேற்கொண்ட போது சண்டையிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளுடன் தான் அமெரிக்க படை சென்றது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம் எதிர்த்தால் கூட சண்டையிடும் தயார் நிலையிலேயே அமெரிக்கப்படை இருந்தது. ஆனால் அதற்கு அங்கு அவசியம் ஏற்பட� �ில்லை.

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



comments | | Read More...

மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!!




மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.

இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் இன்று காலை முதல் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

விசாரித்ததில், தெ‌ற்கு ஆவண‌ி மூல ‌வீ‌தி‌யி‌ல் உ‌ள்ள மட‌த்‌தி‌ல் 5 அ‌திகா‌‌ரிக‌ள் இ‌ந்த சோதனையை நட‌த்‌தி வரு‌வது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த ரெய்டால் மதுரை ஆ‌தீன‌ம், ‌நி‌த்யான‌ந்தா ஆ‌கியோ‌‌ர் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர். வருமான வ‌ரி‌த்துறை‌யி‌ன் அ‌திரடி சோதனை மதுரை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்ப ‌டு‌த்‌தியு‌ள்ளது.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?




புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித� �தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார்.


இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்க� �ம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற� ��ற கட்சிகளும் நினைத்திருந்தனர்.

ஆனால்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.


இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.


அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார்.


கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது � �ல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர்.


அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என  இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது.


ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம்  எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு த� �.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர்.


ஆனால்டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமைகலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.� �ி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர்.


ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger