News Update :
Powered by Blogger.

ஜெயலலிதா வழியில் கருணாநிதி: இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது

Penulis : karthik on Sunday, 15 April 2012 | 03:26

Sunday, 15 April 2012




இலங்கைத் தமிழர் நிலைமையை பார்வையிட செல்வதாக கூறப்படும் இந்திய எம்.பிக்களின் குழுவிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் திமுகவும் வெளியேறி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பை திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று வெளியிட்டார்.

இந்திய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு நாளை முதல் 6 நாள் பயணமாக இலங்கை செல்கிறது. இக்குழுவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை வகிக்கிறார்.

இந்தக் குழுவில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர� ��க்கப்படவில்லை. அதற்கான சரியான காரணத்தை மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.

இந்த நிலையில், இலங்கை அரசைக் காப்பாற்றவே இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது என்றும் இக்குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு நலன் ஏதுமில்லை என்றும் கூறி அதிமுக குழுவிலிருந ்து விலகுவதாக அறிவித்தது.

இதற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் தி.மு.க.வும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக திமுக மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் ஏன் இலங்கைக்குப் போகனும்.. அதிமுகவும் போகலையே என்ற தொன� �யில் கருணாநிதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, எம்.பிக்கள் குழுவால் எந்தப் பயனும் இல்லை என்பதை கடந்த கால குழுக்களின் பயணம் வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் தற்போதைய எம்.பிக்கள் குழுவின் பயணத்தில் திமுக இடம்பெறாது என்றார்.



comments | | Read More...

மதுரையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கப் பாய்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மேயர்!




மதுரையில் திமுக பொருளாளர் மு.க. ஸடாலின் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மேயர் குழந்தைவேலுவும், மாஜி எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சாவும் ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தனர்.

முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய மதுரை வந்திருந்தார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்� �� அவரது சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மண்டல தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநகர் செயலாளர் தளபதி சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது திமுக நிர்வாகிகள் கீழே போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நின்றனர். மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்த மாவட்ட நிர்வாகிகள் குழந்தைவேலுவை மறைத்து நின்றனர். இதனால் கோபம் அடைந்த குழந்தைவேலு அனைவரையும் தள்ளிவிட்டு முன்னால் வந்தார். அப்போது அவர் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சாவையும் தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரம் அடை� �்த கவுஸ் பாட்சா குழந்தைவேலுவை அடிக்கப் பாயந்தார். உடனே அவரும் கவுஸ் பாட்சாவை அடிக்கப் பாய்ந்தார். இருவருக்கும் இடையே கடும் தளளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

இதை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திமுகவினர் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

பயங்கர நிலநடுக்கம்... சுனாமி பீதி.. நடுக்கடலில் கமல்ஹாசன்!




இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமையன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி வரும்..வரும்...வந்துவிடும� ��.. என்று ஊடகங்கள் அலறிக் கொண்டிருந்த நேரம்... கடலோர கிராமங்கள் எச்சரிக்கையாக தவித்துக் கொண்டிருந்த தருணம்...நடுக்கடலில்.. சென்னை கடற்பரப்பில் இருந்து 200 மைல் தொலைவில். சொகுசுக் கப்பலில் விருந்தில் கலந்து கொண்டிருந்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.

சென்னை அருகே முகாமிட்டுள்ள அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான "ஒசாமா கப்பல்" யுஎஸ்எஸ் கார்ல்வின்ஸ் கப்பலில் நடந்த விருந்தில்தான் கமல்ஹாசனும் பங்கேற்றிருந்தார்.. அமெரிக்க போர்க் கப்பலில் நடைபெற்ற விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகரும் கமல்தான்!

உலகமே சுனாமி சுனாமி என்று கத்திக் கொண்டிருந்த நேரத்தில் கப்பலில் இருந்த எனக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை என்கிறார் கமல்.

கமல் தமது புதிய படமான விஸ்வரூபத்தில் சர்வதேச அமைதி மற்றும் புலனாய்வு தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger