News Update :
Powered by Blogger.

மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?

Penulis : karthik on Friday, 23 March 2012 | 00:54

Friday, 23 March 2012


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
  • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
  • Language Bar க்கு வரவும்.
  • Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
  • இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language barஎன்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
 
comments | | Read More...

முள்ளிவாய்க்காலைப் போல எங்களைக் கொல்லப் போகிறீர்களா?... உதயக்குமார் கேள்வி!

Penulis : karthik on Thursday, 22 March 2012 | 10:30

Thursday, 22 March 2012

 
 
 
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களை குண்டு போட்டுக் கொன்றதைப் போல எங்களையும் கொல்லத் திட்டமிடுகிறார்களா என்று தெரியவில்லை என்று அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை அடுத்து அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. அவருடன் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
 
பதற்றம் நீடிப்பு
 
உதயகுமார் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், தன்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்று கூறியுள்ளார். தான் கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை என்றும் அரசுப் பணத்தை நான் திருடவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் ஏன் நான் பயப்பட வேண்டும் என்றார்.
 
அடிப்படை வசதிகள் நிறுத்தம்
 
இடிந்தகரையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டிய உதயகுமார், உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் சுகாதார வசதிகள் இன்றி தவிப்பதாக கூறினார். முள்ளிவாய்க்கால் சம்பவம் போல இடிந்தகரையில் உள்ள தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய இந்த அரசுகள் முடிவு செய்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
சிறையில் அடைப்பு
 
இதனிடையே அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்ட 156 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 42 பெண்கள் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மத்திய பெண்கள் சிறையிலும், 114 ஆண்கள் திருச்சி மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
 
தொடர்ந்து இடிந்தகரையில் பதட்டமும், பரபரப்பும் நீடிக்கிறது.



comments | | Read More...

இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!

 
 
இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.
 
இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.
 
பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger