News Update :
Powered by Blogger.

ஆர்யா வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிய நயன்தாரா...பத்திகிச்சா!!

Penulis : karthik on Wednesday, 21 March 2012 | 01:25

Wednesday, 21 March 2012

 
 
 
செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் பிஸியாக இருந்தார் ஆர்யா. இப்போது ஆர்யா இல்லாத படக்காட்சிகள் கோவாவில் படமாகிக் கொண்டிருக்கும் வேலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியுள்ளார் நமது இரண்டாம் உலக நாயகன்.
 
 
 
அந்த வீட்டின் கிரஹவப்பிரவேசத்திற்கு அனைத்து நண்பர்களையும் அழைக்காமல் தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்துள்ளார் ஆர்யா. புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது தானே சம்பிரதாயம். அதன் படியே குத்துவிளக்கு ஏற்ற அனைவரும் காத்திருந்த போது இந்த
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா தான் அந்த குத்துவிளக்கை ஏற்றியுள்ளார்.
 
தனது கேரள நட்பை மறக்காத ஆர்யா குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்திற்கு(காதல் தோல்வி) பின்
 
நயன்தாரா சென்னை வருவது இதுவே இரண்டாவது முறை. பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா மேலும் பல கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம்.
 
பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட நயன்தாரா இப்போது ஆர்யா வீட்டின் விசேஷத்திற்கு வந்திருப்பது பற்றி அரசல் புரசலாக பேசிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம் ஏரியா.
 
அட! சேட்டனும் சேச்சியும் நட்பா இருக்கிறதுல அப்படி என்னப்பா ஆச்சரியம்!



comments | | Read More...

மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை திட்டம் – உதயகுமார் திடுக்கிடும் தகவல்

 

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் இடி‌ந்தகரை‌யி‌ல் மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் ஆபரேஷ‌ன் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாக கூட‌ங்குள‌ம் அணுஉலை எ‌தி‌ர்‌ப்பு‌ குழு ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் ப‌கீ‌ர் தகவலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

இடி‌ந்தகரை‌யி‌ல் உ‌ள்ள லூ‌ர்து மாதா ஆலய‌த்‌தி‌ல் 10 ‌கிராம ம‌க்களுட‌ன் உதயகுமா‌ர், பு‌‌ஷ்பராய‌ன் ஆ‌கியோ‌ர் இ‌ன்று 3வது நாளாக சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், ‌‌தீ‌விரவா‌திக‌ள் கூ‌ட்ட‌‌த்தை போ‌ல் எ‌ங்க‌ளை ‌ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் ‌பிடி‌த்து வை‌த்து‌ள்ளதாக கூ‌றினா‌ர்.

இடி‌ந்தகரை‌யி‌‌ல் மு‌ள்‌ளிவா‌‌ய்‌க்கா‌ல் ஆபரேஷ‌ன் நட‌த்த காவல்துறை ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாகவு‌ம் உதயகுமா‌ர் ப‌கீ‌ர் தகவலை தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

‌மி‌ன்சார‌ம், கு‌டி‌நீ‌ர் உ‌ள்‌ளி‌ட்டவை து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், சுகாதார வச‌‌தி‌யி‌ன்‌றி ம‌க்க‌ள் த‌வி‌த்து வருவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

கா‌ய்க‌றி, பா‌ல் உ‌ள்‌ளி‌ட்ட அ‌‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ள் கொ‌ண்டு வரு‌ம் வாகன‌ங்களை போ‌லீ‌ஸ் தடு‌த்து‌வி‌ட்டதாக கூ‌றிய உதயகுமா‌ர், செ‌ல்போ‌ன் இணை‌ப்புகளையு‌ம் து‌ண்டி‌‌க்க போ‌லீ‌‌ஸ் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌ம் தெ‌ரிவ‌ி‌‌த்தா‌ர்.

எ‌ங்களை ச‌ந்‌தி‌க்க வ‌ந்த வழ‌க்க‌றிஞ‌ர்களை காவல்துறை தடு‌த்து‌வி‌ட்டதாகவு‌ம், செ‌ய்‌தியாள‌ர்களை உ‌ள்ளே ‌விட அனும‌தி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் உதயகுமா‌ர் கூ‌றினா‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் நட‌ப்பது அரசா‌ங்கமா? அ‌ல்லது பா‌சிச ஆ‌ட்‌சியா எ‌ன்று உதயகுமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

ம‌க்களு‌க்கு பய‌த்தையு‌ம், ‌பீ‌தியையு‌ம் காவல்துறை ஏ‌ற்படு‌த்துவதாகவு‌ம், இது முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌‌லிதாவு‌க்கு தெ‌ரியுமா எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌‌ள்‌‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

‌எ‌ன்னுடைய ப‌ள்‌ளியை 50 பே‌ர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் அடி‌த்து நொ‌று‌க்‌கியு‌ள்ளதாகவு‌‌ம், ப‌ள்‌ளியையே அடி‌‌த்து நொறு‌க்கு‌ம் அரசா‌ங்க‌ம், எ‌ப்படி, படி‌க்கு‌ம் குழ‌ந்தைகளை பாதுகா‌‌க்க முடியு‌ம் எ‌ன்று உதயகுமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

நா‌‌ங்க‌ள் யாரு‌ம் த‌னியாக வர மா‌ட்டோ‌ம், அனைவரு‌ம் கைதாக தயாராக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

comments | | Read More...

தயாநிதியை தொடர்ந்து கலாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் அமலாக்கப் பிரிவில் தாக்கல்

 
 
 
ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
 
அதன்பேரில், தயாநிதி மாறன் தொடர்புடைய பண பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் இதர வர்த்தகம் தொடர்புடைய நிதி ஆவணங்கள் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், கலாநிதி மாறன் சார்பிலும் நிதி ஆவணங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
 
தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பணிபுரிந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். இந்த குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து வருகிறார். இந்த வழக்கில் தயாநிதி மாறனுடன் தொடர்புடைய மேலும் சிலருடைய வாக்குமூலங்களையும் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger