News Update :
Powered by Blogger.

விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் அஜ்மல்!

Penulis : karthik on Saturday, 10 March 2012 | 00:03

Saturday, 10 March 2012

 
 
 
விஜய்க்காக உருவாக்கப்பட்ட ஒரு கதையில் இப்போது ஹீரோவாக நடிக்கிறார் இளம் நடிகர் அச்மல்.
 
இயக்குநர் ருத்ரன் இயக்கும் படம் வெற்றி செல்வன். இப்படத்தின் கதையை விஜய்க்காகவே உருவாக்கினாராம் ருத்ரன்.
 
கதை கேட்டு தனக்குப் பிடித்திருப்பதாக சொன்ன விஜய்யால், பல்வேறு காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
 
அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தோனி படத்தில் நாயகியாக நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றவர். மதன் கார்கி பாடல்கள் எழுத இசையமைக்கிறார் மணி ஷர்மா.
 
இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் ரணம். பின்னர் சத்யவான் என்று மாற்றப்பட்டது. இப்போது அதுவும் மாறி 'வெற்றி செல்வன்' ஆகியிருக்கிறது.
 
இதாவது நிலைக்குமா? என்றால், 'நிச்சயமாக.. இனி தலைப்பை மாற்றுவதாக இல்லை, என்கிறார் இயக்குநர்.



comments | | Read More...

ரொம்ப அட்டகாசம் செய்யும் மகானால் தாயிக்கு அவமானம் :P (வீடியோ)


அட்டகாசத்தில் தாயின் பாவடையை கீழ இழுத்து அவமான படுத்திய சிறுவன். நகைச்சுவை வீடியோ :P

comments | | Read More...

தேவர் சிலை அவமதிப்பு - கடப்பாரையால் தாக்கப்பட்டுள்ளது-பதற்றம்

Penulis : karthik on Friday, 9 March 2012 | 23:58

Friday, 9 March 2012


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகாமையில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்த தேவர் சிலை கடப்பாரையால் தாக்கப்பட்டு சேதமாகி உள்ளது.


இதை கண்டித்தும் விசமிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தேவர் பேரவை இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக நமது செய்தியாளர் அளித்த செய்தி " ஒரே கல்லிலான பழமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை சில விசமிகளால் கடப்பாரை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. கால்பகுதியில் இடிக்கப்பட்டுள்ளதால் சிலையை சீரமைப்பது சாத்தியம் இல்லாமல் இருக்கின்றது . தேவர் பேரவை இளைஞர் அணியினரும் பொதுமக்களும் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு அதே இடத்தில் உடனே சிலை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கோசங்கள் எழுப்பப் படுகின்றது" இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணியின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளரை தொடர்பு கொண்டபோது " தேவர் சமூக மக்களுக்கு பலதரப்பட்ட சாதகமான உதவிகளை செய்துவரும் அ தி மு க அரசுக்கு கேடு விளைவிக்கும் விசமிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் , அரசு உடனே தலையிட்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger