News Update :
Powered by Blogger.

விஷாலுடன் இணையும் ஸ்ருதி கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

Penulis : karthik on Sunday, 4 March 2012 | 22:45

Sunday, 4 March 2012

 

திருவின் சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். ஜோடி த்‌ரிஷா என்பதால் இந்தப் படம் விஷாலுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

இதையடுத்து அவர் நடிக்கப் போகும் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். நடிப்புக்கு பேக்கப் சொன்ன சுந்தர் சி. மசாலா கஃபே படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதையடுத்து விஷாலை அவர் இயக்குவார் என தெ‌ரிகிறது. படப்பிடிப்பு ஏப்ர‌ல் 12 தொடங்கும் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

இந்தப் படத்தின் விசேஷம், ஸ்ருதி. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிப்பார் என இப்போதே கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

comments | | Read More...

தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர்

 


நடிகர் தனுஷ், இந்தியில் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான நடிகர் தனுஷூக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனந்த எல்.ராய் இயக்கும் இப்படத்திற்கு ராஞ்ஜா என்று பெயரிட்டுள்ளனர். காசியை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷூக்கு ஏற்ற நாயகியை தேடி வந்தார் டைரக்டர்.

இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகளும், பாலிவுட்டின் இளம் நாயகியுமான சோனம் கபூர், தனுஷூக்கு ஜோடியாக்க நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவை போல, சோனமும் தென்னிந்திய படவுலகில் தொடர்பு வைத்து கொள்ள விரும்பவதால், அவர் இந்தபடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருவதால், தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
comments | | Read More...

ப்ரபுதேவா போய் ஜெயம்ரவி- நயன்தாராவின் அடுத்த ரவுண்ட்

 


ஜெயம் ரவியை வைத்து சமுத்திரகனி இயக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

பிரபு தேவாவைத் தி்ருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறி, சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த நடிகை நயன்தாரா, இப்போது பிரபுதேவாவுடன் டூ விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மீண்டும் நடிப்புக் கடலில் குதித்துள்ளார் நயனதாரா.

தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போவார் என்று கூறப்படுகின்றது. சிம்பு கூட மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் சமுத்திரகனியின் படத்தில் நயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமுத்திரகனி தற்போது கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதை முடித்த பிறகு தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக திரையுலகிற்கு மறுபிரவேசம் செய்துள்ள நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

முதன்முறையாக ரவி, நயன்தாரா ஜோடி சேரவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நயன் மீண்டும் நடிக்க வந்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. வெள்ளித்திரையில் மீண்டும் நயனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

சும்மாவா, ஒரு கோடி வாங்கிய ஒய்யாரமான ஹீரோயினாச்சே, மறுபடியும் நடிக்க வந்தால் விடுவார்களா என்ன…!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger