News Update :
Powered by Blogger.

’சமந்தாவுக்கு மணிரத்னம் தந்த சங்’கடம்’

Penulis : karthik on Thursday, 1 March 2012 | 23:51

Thursday, 1 March 2012

 

'அவர் ஏற்கனவே தமிழ்ல நடிச்ச ரெண்டு படமுமே அட்டர்ஃப்ளாப்.ஆனாலும் அவர்தான் இப்ப அதிகம் சம்பளம் வாங்குற நம்பர் ஒன் நடிகை?' மாஸ்கோவின் காவிரி' மற்றும் 'பாணா காத்தாடி' ஆகிய இரு படங்களுக்குப்பின் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்குப் போய் மீண்டும், கவுதம், மற்றும் மணிரத்னம் படங்கள் மூலம் தமிழுக்கு திரும்பியிருக்கும் சமந்தாதான் மேற்கண்ட புதிருக்கு சொந்தக்காரர் என்பது யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மணியின்'கடல்' கவுதமின் 'நீதானே என் பொன் வசந்தம்' ஆகிய இரு படங்களுமே ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மும்மொழிப் படங்களாகத் தயாராகி வருவதில்,பாப்பா ரொம்ப ஹேப்பாவாக இருக்கிறார்.

இந்த 2012-ம் வருடத்தில் மட்டும் ரிலீஸாகிற வகையில் இதுவரை மட்டுமே எட்டுப்படங்களைக் கையில் வைத்திருக்கும் சமந்தா, மணிரத்னம் படம் குறித்து தனக்கு ஏற்பட்டிருக்கும் மனச்சங்கடம் குறித்து யாருடம் பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொடிருக்கிறாராம்.

அது என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள், ஒருமுறையாவது, 'கடல்' படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் லட்சுமி மஞ்சுவின் பேட்டியைப் படிக்க வேண்டும். மஞ்சு தான் அளிக்கும் எல்லா பேட்டிகளிலுமே,'நான் தான் மணி சார் பட ஹீரோயின். கதையில் கவுதமுக்கு ஜோடி நான் தான்' என்று சொல்லி வருகிறார்.

அப்ப 'கடல்' ல என்னோட ரோல் என்னங்க? -இதுதான் சமந்தா கேட்க விரும்பும் கேள்வி.

இதுக்கு சரியான பதிலை மணி சார் வட்டாரத்துல விசாரிச்சி சமந்தாவுக்கு சொன்னீங்கன்னா, அண்ணா உங்க ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது.

comments | | Read More...

அடுத்த விஜயசாந்தி ரெடி

 



நடிகை விஜயசாந்தி போன்று துணிச்சல் மிக்க கேரக்டரில் நடித்து, அவருடைய இடத்தை நிச்சயமாக பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தன்ஷிகா. பேராண்மை படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தன்ஷிகா. முதல்படத்திலேயே சவாலான கேரக்டரில் நடித்து சண்டைக்காட்சிகளில் எல்லாம் நடித்து அசத்தினார். இவர் இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரவான் படத்தில், ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அரவான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தன்ஷிகா, என்னுடைய சினிமா கேரியரில் திருப்பம் கொடுக்கவுள்ள படமாக அரவான் இருக்கும். வசந்தபாலன் சாரின் ஒரு படத்தில் நடித்தால் போது, விருது வாங்கும் அளவுக்கு நம்மை நடிக்க வைத்து விடுவார். அரவான் படத்திலும் அப்படித்தான், எல்லோரையும் அருமையாக நடிக்க வைத்து இருக்கிறார். பேராண்மை படத்தை காட்டிலும் இந்தபடம் ரொம்பவே சவாலாக அமைந்தது. 20-30 அடி உயரத்தில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் டூப் போடாமல் குதித்து இருக்கிறேன். இது‌போன்று படத்தில் நிறைய காட்சிகள் சவால் வாய்ந்ததாக இருந்தது.

இப்போது சினிமாவில் விஜயசாந்தியின் இடம் காலியாக இருக்கிறது. அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதற்காக அவரைப்போன்று துணிச்சலான கேரக்டரில் நடித்து வருகிறேன். நிச்சயம் அவருடைய இடத்தை பிடிப்பேன் என்று கூறினார்
comments | | Read More...

வசந்தபாலன் இயக்கத்தில் கார்த்தி

 


அரவான் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் அடுத்து இயக்க போகும் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுநாள் வரை கமர்ஷியலாக நடித்து வந்த கார்த்திக்கு, இப்போது சிரீயஸ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம்.

ஆனால் தனக்கு ஏற்றபடி யார் கதை தருவார் என்று யோசித்த போது அவர் நினைவில் தோன்றியவர் வசந்தபாலன் தானாம். உடனே அவரை சந்தித்து உங்க கம்பினேஷனில் எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்றாராம். அதுவும் உங்க ஸ்டைலி‌லேயே இருக்கட்டும், எனக்காக ‌எதையும் மாற்றாதீங்க என்று கோரிக்கையும் வைத்தாராம். இந்த பேச்சுவார்த்தையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அநேகமாக வசந்தபாலனின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger