News Update :
Powered by Blogger.

கொள்ளையர்கள் என நினைத்து 2 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை

Penulis : karthik on Wednesday, 15 February 2012 | 22:23

Wednesday, 15 February 2012

 
 
கடற் கொள்ளையர்கள் என நினைத்து இரண்டு இந்திய மீனவர்களை இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆலப்புழையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது கடலில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இத்தாலி கப்பல்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர்.
comments | | Read More...

அதுவா இது - செல்லம் நடிகர் மறுப்பு

 



செல்லம் நடிகர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஆறு, ஏரி, கடல்களில் பயணிக்க பயன்படும் ஒருவகை படகின் பெயர் கொண்ட படத்தின் கதை மகேஷ் மஞ்ச்ரேக்கர் எனும் மராத்தி இயக்குநர் இயக்கிய ஒரு மராத்திப் படத்தின் ராயல்டி தராத காப்பி., அதாஙங்க, அப்பட்டமான காப்பி என்ற தகவல் கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக பரவி வருகிறது! ஏற்கனவே இந்தப்படம் செல்லம் தயாரிப்பில் இயக்குநராக புகழ் பெற்ற ராதாமோகன் டைரக்ஷன் ஸ்டைலில் இருக்கிறது என ஒரு கருத்து நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி எல்லாம் கேட்டால் பதில் என்னவோ அதெல்லாம் "இல்ல செல்லம்" என்பதாகத்தானே இருக்கும்..?!
comments | | Read More...

அடுத்த காதல் மன்னன் தயார்

 


கலை வாரிசுகள் ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது. ஆனால் இப்படி வருகிற எல்லாருமே தங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்த மூத்தவர்களின் பாணியை பின் பற்றுவதே இல்லை. சொந்த சரக்கு மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.



அப்படி ஒரு சொந்த சரக்காளராக வந்து சேர்ந்திருக்கிறார் அபிநய். இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரியின் கலை வாரிசு. இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம்தான் வினை. இவர் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறாராம். தமிழில் அவர் நடித்து வெளிவரப்போகும் முதல் படம் இந்த வினைதான்.

அடிப்படையில் இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஏன்? என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக நகருமாம் படம்.

இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அபிநய்யை எப்படி தேர்ந்தெடுத்தார் டைரக்டர் பாலசுதன் என்றால் அதுவே பெரிய கதையாக இருக்கிறது.

ஒரு விறுவிறுப்பான கதையை தயார் செய்துவிட்டு சென்னைக்கு வந்திறங்கியவர், இங்குதான் ஹீரோ தேடும் படலத்தையே ஆரம்பித்தார். அப்போதுதான் சினிமா டைரி ஒன்றில் அபிநய்யின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகிற முகமாக இருந்ததால் உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தாராம்.

வந்த பிறகுதான் தெரிந்ததாம் அவர்தான் காதல் மன்னன் ஜெமினியின் வாரிசு என்று. அப்புறமென்ன? பெருமையோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள் அவரை. தா‌த்‌தா‌ பா‌ட்‌டி‌யி‌ன்‌ ஆசி‌ பே‌ரனுக்‌கு கி‌டை‌க்‌குமல்‌லவா‌?

அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த் யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger