News Update :
Powered by Blogger.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெயலலிதா!

Penulis : karthik on Wednesday, 11 January 2012 | 19:10

Wednesday, 11 January 2012

தமிழகத்தில் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் 1.34
கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும், மற்ற விவரங்களை அறியவும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று தனியாக மையம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திட்டத்தின் விவரங்கள் மற்றும் உதவி பெற
24 மணி நேர கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான18004253993 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு
திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம், 4
ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சைகள், 113
தொடர் சிகிச்சைகள் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுப்பிடிப்பு சிகிச்சைகள்
அனுமதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்,
காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை
தேவைப்படாத பட்சத்தில் செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை வழங்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகை தனியார் மருத்துவமனைகளுக்கு
வழங்குவது போலவே, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்
comments | | Read More...

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு தலைமுடியை அறுத்ததால் கணவரை செல்போன் சார்ஜரால்
கழுத்தை இறுக்கி, காதில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த மனைவியிடம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி அருகே மூவாநல்லூரை சேர்ந்தவர் செல்வம்(35). வெளிநாட்டில்
வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவஜோதி (27). இவர்களுக்கு 2 வயதில்
பெண் குழந்தை உள்ளது. செல்வம் 15 தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு
வந்தார்.
நேற்று முன்தினம் அவர் சேரன்குளத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு
சென்றார். அங்கு மனைவி சிவஜோதியும், அவரது குழந்தையும் மட்டும் தனியாக
இருந்தனர். மாமனார், மாமியார் தனது மூத்த மகளை பார்ப்பதற்காக சென்னை
சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று செல்வம் மாமனார் வீட்டில் மர்மமான
முறையில் சடலமாக கிடந்தார். அருகே மது பாட்டில்கள், ஒரு பூச்சி மருந்து
பாட்டில் கிடந்தது. கழுத்தில் இறுக்கிய தடம் காணப்பட்டது.
தகவலறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சிவஜோதியிடம் போலீசார்
துருவிதுருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் கணவரை கொன்றதை
ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், "எனது நடத்தையில் கணவர்
சந்தேகப்பட்டார். இதனால் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.
சம்பவத்தன்று இரவும் மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். சண்டையில்
எனது தலைமுடியை அறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான்
அவருக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். உடனே அவர்
தூங்கிவிட்டார். அதன்பின்னர் செல்போன் சார்ஜரால் அவரது கழுத்தை
இறுக்கினேன். ஆனாலும் அவர் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனால், என்னை மிரட்டுவதற்காக அவரே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை
எடுத்து அவரது காதில் ஊற்றி கொன்றேன்"
இவ்வாறு சிவஜோதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
comments | | Read More...

கள்ளக்காதலனுடன் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45)
விவசாயி. இவரது மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவனை விட்டுப்
பிரிந்த கல்யாணி தனது மகன்களுடன் தனியே கெலமங்கலத்தில் உள்ள ஜீவா நகரில்
வசித்து வந்தார்.
அந்தப் பகுதியில் கல்யாணி மகளிர் குழு தலைவியாக இருந்தார். மேலும்
மாதாந்திர சீட்டும் நடத்தி வந்தார். கல்யாணிக்கும், தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள உச்சனப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன் (40)
என்வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
வெங்கடேசன் பெங்களூரில் வாட்ச் கம்பெனி நடத்தி வந்தார். நேற்று முன்தினம்
இரவு வெங்கடேசன், கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மொட்டை
மாடியில் வெங்கடேசனும், கல்யாணியும் உல்லாசமாக இருந்தனர். அப்போது அங்கு
வந்த மர்ம நபர் அவர்கள் 2 பேரையும் வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை
கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட கல்யாணிக்கு பலருடன் தொடர்பு இருப்பது
தெரியவந்தது. எனவே இந்த கொலை கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நடந்ததா? அல்லது
வெங்கடேசன் மீது ஏற்பட்ட தொழில்போட்டியில் யாராவது சமயம் பார்த்து
தீர்த்து கட்டினார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட கல்யாணி, வெங்கடேசன் ஆகியோரின் உடலில் இருந்த
வெட்டு காயங்களின் அடிப்படையில் அவர்கள் செக்ஸ் தகராறில் கொலை
செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்த போலீசாரின்
கவனம் கல்யாணியின் கணவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது திரும்பியது. அவரை
பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கள்ளக்காதலனுடன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில்
கூறியிருப்பதாவது:-
எனது மனைவி கல்யாணி பணக்காரியாக, பகட்டான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள்.
சாதாரன விவசாயியான என்னால் அவளது ஆசையைபூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் என்னை பார்த்து கிண்டலாகபேசி சிரிப்பாள். இது ஆத்திரத்தை
ஏற்படுத்தி வந்தது. மேலும் கல்யாணி என்னை பார்த்து 'நீ ஒரு ஆம்பிளையா'
என்று கேட்பாள். இதனால் எனக்கு அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதைத்
தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் நாங்கள் பிரிந்துவிட்டோம்.
இந்நிலையில் அவள் வேறு வீட்டிற்கு மகன்களுடன் தனியாக குடிபோனாள். அங்கு
மகளிர் சங்கம் ஆரம்பித்து தலைவியானாள்.மகளிர் குழு தலைவி என்பதால்
கல்யாணியை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு பல ஆண்கள் வந்து சென்றனர்.
அதேபோல் அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசனும் வந்து சென்றார். நாளடைவில்
அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் வெங்கடேசன் கல்யாணியுடன் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். 2
மகன்களும் தூங்கிய பின்னர் இவர்கள் 2 பேரும் படுக்கையுடன் வீட்டின்
மொட்டை மாடிக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்கள். கடந்த ஒரு
வாரமாக அவர்களைக் கண்கானித்தேன். அவர்கள் உல்லாசமாய் இருப்பதை நான்
நேரில் பார்த்தேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர்களை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் போட்டேன். அதன்படி நேற்று
முன்தினம் இரவு வெங்கடேசன் கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். அவரை உள்ளே
அழைத்து சென்ற கல்யாணி அவருடன் மது குடித்தாள். 2 பேரும் மதுபோதையில்
மொட்டை மாடிக்கு சென்றதை கவனித்தேன். பின்னர் நானும் மொட்டை மாடிக்கு
நைசாக ஏறினேன்.
அங்கு அவர்கள் 2 பேரும் ஆடைகளை களைந்து உல்லாசம் அனுபவித்து கொண்டு
இருந்தனர். அந்த நேரத்தில் நான் திடீரென்று வீச்சரிவாளுடன் அங்கு
சென்றதும் அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரத்தில்
இருந்த நான் முதலில் வெங்கடேசனனை உடலின் பல இடங்களில் வெட்டினேன். என்
வெறி தீர வெட்டினேன். தொடர்ந்து கல்யாணியை வெட்ட முயன்றேன். அப்போது அவள்
2 கைகளாலும் என்னை தடுத்தாள். இதில் வெட்டுப்பட்டுஅவளது 2 கைகளும்
துண்டானது. பின்னர் ஆத்திரம் தீராத நான் அவளது கழுத்தை அறுத்து துடிக்க,
துடிக்க, கொலை செய்தேன்.
2 பேரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி இறந்ததை நேரில் கண்டு
சந்தோசம் அடைந்தேன். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு விறகு மண்டியில்
போய் படுத்து கொண்டேன். பின்னர் என்னை பிடித்து போலீசார் விசாரித்தபோது
உண்மையை ஒத்துக்கொண்டேன்.
கணவனை ஏமாற்றி விட்டு கல்யாணி போல் மற்ற ஆண்களுடன் உறவு வைக்கும்
பெண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். கட்டிய கணவன் என்று கூட பாராமல்
என்னை மிகவும் அவமானப்படுத்தியவள் கல்யாணி என்று ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில்
நீதிபதி இன்ப கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நீதிபதி
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து கிருஷ்ணமூர்த்தி சேலம்
சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger