News Update :
Powered by Blogger.

2012 - நம்பிக்கை நட்சத்திரங்கள் (நடிகைகள் மட்டும்) ஹீ...ஹீ...!

Penulis : karthik on Tuesday, 3 January 2012 | 09:19

Tuesday, 3 January 2012

 
 
2011ம் ஆண்டு வெளியான 100க்கும் மேற்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்களில் 50க்கும் (சரியான கணக்கு 52 எனத்தகவல்) மேற்பட்ட கதாநாயகிகள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள் தங்களது முதல் படம் மூலமே கவனம் ஈர்த்த கதாநாயகிகளாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அமலாபால், அஞ்சலி, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி, அனன்யா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் மேற்படி ஒரு டஜன் அறிமுக(2011) நாயகிகளும் சபாஷ் சரியான போட்டி! என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு 2012ல் போட்டி போடுவார்கள் என்பது திண்ணம்!
 
இதுத்தவிர நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கும் இலியானா மற்றும் 2012-ல் வெளிவர இருக்கும் இஷ்டம் படத்தில் விமல் ஜோடியாக நடித்து வரும் நிஷா அகர்வால்(காஜல் அகர்வாலின் தங்கை) உள்ளிட்ட 2012 புதுமுக நடிகைகளின் வரவு வேறு. தற்போதைய தமிழ் முன்னணி நடிகைகளுக்கும், 2011ல் அறிமுக நடிகைகளுக்கும் கடும் போட்டியை உண்டாக்கும்! இதையெல்லாம் கூட்டி கழித்துப்பார்த்து 2012-ல் ஜொலிக்க இருக்கும் ஒரு டஜன் நடிகைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
 
அவர்களின் விவரம் வருமாறு : அமலா பால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, தீக்ஷா சேத், காஜல் அகர்வால், இனியா, கார்த்திகா, பிந்து மாதவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் பழசும், புதுசுமான அந்த ஒரு டஜன் நடிகைகள்!
இதில் காஜல் அகர்வாலுக்கு தான் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதர்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. சூர்யாவுடன் மாற்றான் விஜயுடன் துப்பாக்கி என்று இப்போதே எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளார் .

நடிகைகள் மீது தீராத காதல் ‌கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களே அப்புறமென்ன? நமது 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலை, புதிதாக பிறந்திருக்கும் ஆண்டில், தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே சொல்லுங்கள்...!


comments | | Read More...

வடிவேலுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கும் தனுஷ்

 
 
 
யாரும் ஒதுக்கல, நான்தான் ஒதுங்கியிருக்கேன் என்று அவ்வப்போது வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் வடிவேலு, தனுஷுக்கு போன் அடித்து தன் நன்றியை சொல்லியிருக்கிறார். எதற்காக...? தன் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம் தனுஷ். அதற்காகதான் இந்த நன்றி.
 
23-ம் புலிகேசி மூலம் வடிவேலுவை ஹீரோவாக்கிய சிம்பு தேவன், தற்போது இயக்கப் போகிற புதிய படத்தில்தான் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் வடிவேலுவும் இருந்தால் நன்றாக இருக்குமே என்பது சிம்புதேவனின் ஆசை. அதுக்கென்ன, செய்ங்களேன் என்றாராம் தனுஷ்.
 
துளசிப் பூ வெண்மையில, தூறல் வந்து ஸ்பிரே அடிச்ச மாதிரி பளிச்சென்று சிரிக்கிறார்கள் வடிவேலு ஏரியாவில்.

ஹலோ விஜயகாத்... இப்போ என்ன செய்ய போறீங்க... தைரியமா ரஜினி மருமகனை எதிர்க்க போறீங்கள அல்லது பொத்திகிட்டு பேசாம இருக்க போறீங்களா...!!


 


comments | | Read More...

முல்லைப் பெரியாறு அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதம்: நடிகர்- நடிகைகள் பங்கேற்பார்களா?

 
 
 
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலம் நடத்தினர். இதில் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். முல்லைப் பெரியாருக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
 
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
 
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger