News Update :
Powered by Blogger.

கேரளாவுக்கு பறக்கும் மணல் லாரிகள்: இவ்வளவு சிக்கலிலும் கடத்தல் "சூப்பர்'

Penulis : karthik on Thursday, 22 December 2011 | 23:14

Thursday, 22 December 2011

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக - கேரளா இடையேயான வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வேளையில், மணல் கடத்தல் கும்பலின் லாரிகள் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், கேரளா வுக்கு பறந்து கொண்டிருக்கின்றன.


கேரளாவிலுள்ள நீர் நிலைகளில் மணல் அள்ள அந்த மாநில அரசு தடை விதித்துள்ளதால், அங்கு கட்டட கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திருச்சி, கரூரில் இருந்து தினமும் எண்ணற்ற லாரிகளில் பல்லடம், செட்டிபாளையம், வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுகிறது. தவிர, கிணத்துக்கடவு செக்போஸ்ட், சொக்கனூர் வழியாகவும், முத்துக்கவுண்டனூர் , பாலார்பதி, அனுப்பூர் வழியாகவும் கடத்தப்படுகிறது. கடந்த தி.மு.க.,ஆட்சியின்போது மணல் கடத்தல் லாரிகள், போலீசாரிடம் பிடிபடாமல் "பாதுகாப்பாக' தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் செல்ல ஏதுவாக, கடத்தல்காரர்கள் "பைலட்' வாகனங்களை, தி.மு.க., கொடியுடன் இயக்கினர். இந்த வாகனங்களில் சென்ற நபர்கள், போலீசார் மற்றும் செக்போஸ்ட் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து, மணல் கடத்தல் லாரிகளை கேரளாவுக்குள் அனுப்பி வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மணல் கடத்தல் தடுக்கப்படவில்லை. கடத்தல்காரர்கள், அ.தி. மு.க., கொடி கட்டிய வாகனங்களில் பறக்கின்றனர். கடத்தல் "ரூட்'களில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் மாமூல் போவ தாக கூறப்படுகிறது.


புது டெக்னிக்: தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர். லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துகின்றனர். கடத்தல் லாரிகளின் அதிகபட்ச போக்குவரத்து காரணமாக, பல்லடம் - வேலந்தாவளம் ரோடு, கிணத்துக்கடவு செக்போஸ்ட் - வீரப்பகவுண்டனூர் செக்போஸ்ட் வரையிலான ரோடு கடுமையாக சேதமடைந்துள்ளது.


முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக - கேரள இடையேயான வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன. இதற்கு காரணம், கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் (நெம்பர் பிளேட்) மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக ரெஜிட்ஸ்ரேஷன் எண்களுடன் பவனி வருவதாக கூறப்படுகிறது. மணல் கடத்தல் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

comments | | Read More...

தற்கொலை செய்யக்கூடாது: விஜயகாந்த் "அட்வைஸ்'

மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய பிரச்னைகளுக்காக யாரும் தற்கொலை செய்யக்கூடாது'' என கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்புடன் ஆலோசனை கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (எ) இடிமுழக்கம் சேகர்,42, தே.மு.தி.க.,வின் தலைமைக் கழக பேச்சாளர். கடந்த 20ம் தேதி மாலை விருத்தாசலத்திற்கு வந்தவர், அங்குள்ள லாட்ஜில் தற் கொலை செய்து கொண்டார். அங்கிருந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் ஐந்து மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.


விஜயகாந்த் அறிவுரை: மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக் கூடிய பிரச்சனைகளுக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்காக, தேனி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க., பேச்சாளர் இடிமுழக்கம் சேகர், விஷம் குடித்து இறந்த செய்திக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாட்டு பிரச்னைகளை மனதில் கொண்டு இளைஞர்கள், தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய இப்பிரச்னைகள், தங்கள் உயிரை போக்கி கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய உணர்ச்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

comments | | Read More...

ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக்

ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக பணிக்கு வராமல் அரசு நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்த குற்றத்திற்காக 200 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் உள்ள டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி <உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் <உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாநிலும் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோரும் ஏற்கனவே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.

நாங்கள் அஞ்சமாட்டோம் : டாக்டர்கள் : இம்மாநிலத்தில் சுமார் 10ஆயிரம் டாக்டர்கள் இந்த போரட்டத்தில் இறங்கியிருப்பதால் பல மருத்துவமனைகள் செயல்படாத நிலையில் இருக்கிறது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க அரசு ஓய்வு பெற்ற டாக்டர்களை பணியில் அமர்த்தி சமாளித்து வருகிறது. இதற்கிடையில் அடிப்படை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நோக்கில் செயல்படும் வழக்கில் ரெஸ்மா சட்டத்தின் மூலம் 200 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ள்ளனர். பலரை அரசு சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

சிலர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான சட்டத்தை காட்டி மிரட்டினால் நாங்கள் அஞ்சமாட்டோம், இது பிரச்னைக்கு தீர்வாகாது என்று டாக்டர்கள் சங்கத்தினர் அரசை எச்சரித்திருக்கின்றனர். இந்த மாநிலத்தை பொறுத்த வரையில் இது போன்று கடந்த 2010 செப் மாதம் டாக்டர்கள் நடத்திய போராட்டத்தினால் 10 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டும் இந்த ஸ்டிரைக் துவங்கியிருக்கிறது. நோயாளிகள் நிலை அதோ கதிதான் .,
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger