News Update :
Powered by Blogger.

விளம்பரப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Penulis : karthik on Sunday, 6 November 2011 | 23:31

Sunday, 6 November 2011

 
 
 
குழந்தைகள் சத்துக் குறைபாடு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 
இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களிலும் அவர்கள் சிக்கியுள்ளார்கள். எனவே மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக விளம்பரபடங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விளம்பரப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதி சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினர். விஷயத்தைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி.
 
இந்தப் படம் தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவும் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் அமீர்கானும் இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.
 
வரும் நாட்களில் நாடு முழுவதும் ரஜினி, அமீர்கான் உருவப் படங்களுடன் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளன.
 
இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக் கூட்டங்களிலும் இருவரும் பங்கேற்றுப் பேச உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
 
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வணிக விளம்பரங்களில் நடிக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் சமூக நலனுக்காக ஏற்கனவே போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் நடித்தார். அந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
உடல் நலம் பெற்று புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினி, பெரிய அளவில் சமூகப் பணிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக குழந்தைகள் நலன் தொடர்பான இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் இறங்குகிறார் என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல்

 
 
 
ஜெய் தெலுங்கானா என்று கோஷம் போட மறுத்ததால் தன் காரை தெலுங்கானா ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியதாக ஸ்ரேயா குற்றம்சாட்டியுள்ளார்.
 
அல்லரி நரேஷுடன் புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஹைதராபாத்தில் உள்ள ரங்கா பல்கலைக்கழகத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
 
அப்போது அங்கு வந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால், 'ஜெய் தெலுங்கானா' என்று முழக்கம் இட வேண்டும் என்று மிரட்டினர்.
 
இதற்கு ஸ்ரேயா மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் ஸ்ரேயாவின் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
 
இது குறித்து ஸ்ரேயா கூறுகையில், "போராட்டக்காரர்கள் என்னிடம் நடந்துகொண்டது எந்தவிதத்தில் நியாயம்? ஜெய் தெலுங்கானா என்று கூறச்சொல்கிறார்கள். கற்களை வீசி தாக்குகிறார்கள்.
 
ஆனால் இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சுதந்திர நாட்டில் இதுதான் பாதுகாப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



comments | | Read More...

எனது தந்தை பற்றி கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது: ராம்தேவ் மீது திக்விஜய் சிங் பாய்ச்சல்

 
 
 
ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, ரவிசங்கர் பிரசாத் போன்றவர்கள் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் அடுத்தடுத்து மலிவான புகார்களை கூறி வருகிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த பாபா ராம்தேவ், "இது போன்ற பேய்களின் மகன்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. பழங்கால இந்திய முனிவர்கள் பற்றி அறியாத ராட்சன் மகன். அவர் ஒரு முட்டாள்'' என கூறினார்.
 
இதற்கு திக்விஜய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் கூறுகையில்,
 
"இது, அதிகப்பட்ச அவதூறு. என் மீது அவர் எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், எனது தந்தை பற்றி அவர் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger