News Update :
Powered by Blogger.

“7 ஆம் அறிவு” படத்தில் சிறப்பான நடிப்பு: ஸ்ருதிக்கு கமல் பாராட்டு

Penulis : karthik on Friday, 28 October 2011 | 05:45

Friday, 28 October 2011

 
 
 
கமல் மகள் ஸ்ருதி "லக்" என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக நடித்த "7 ஆம் அறிவு" படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
 
ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று அப்படத்தை பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்ப பிடித்துப் போனது. படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டினார். நடிகை கவுதமியும் படம் பார்த்து ஸ்ருதியை பாராட்டினார்.



comments | | Read More...

ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கு; ஐகோர்ட்டில் இன்று விசாரணை

 
 
 
ராஜீவ்காந்தி கொலை கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு இன்று (28-ந் தேதி) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் முருகன் உட்பட 3 பேரும் 2000-ம் ஆண்டில் கருணை மனு கொடுத்தனர். இந்த கருணை மனு 2011-ம் ஆண்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
 
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், `11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
 
இந்த மனுவை கடந்த செப்டம்பர் மாதம் ஐகோர்ட் நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தாவிட்டனர். மேலும், இவர்களது மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் எல்.கே.வெங்கட் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அந்த 3 பேரின் மனுவை விசாரித்தபோது சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து கோஷங்கள் போட்டனர். எனவே இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கொலையாளிகள் 3 பேருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முருகன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று (28-ந் தேதி) விசாரணைக்கு வருகிறது.



comments | | Read More...

மதுரையில் அத்வானியை கொல்ல சதி :ரதயாத்திரை செல்லும் பாதையில் வெடிகுண்டு!

 
 
 
பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் பயங்கர ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் அகற்றப்பட்டது.
 
மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலத்தில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
 
மதுரை- டி.கல்லுப்பட்டி இடையிலான இந்தப் பாதையில் பிளாஸ்டிக் குழாயில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து நிரப்பப்பட்டு, ஒயர் மூலம் பேட்டரி-கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
 
அத்வானி இன்று காலை இந்த வழியாக செல்லும் முன் பாதையை முழுமையாக ஸ்கேன் செய்த தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் இதைக் கண்டுபிடித்து அகற்றினர்.
 
இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்காக நெடுந்தூரம் கொண்டு செல்லப்பட்டது.
 
இந்தப் பாதையில்தான் அத்வானி இன்று மதுரையிலிருந்து நெல்லை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger