News Update :
Powered by Blogger.

சகுனி படத்தில் கார்த்தி வில்லனா?

Penulis : karthik on Tuesday, 18 October 2011 | 08:48

Tuesday, 18 October 2011

 
 
 
சகுனி படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பொய்யானது என்று அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாள் கூறியுள்ளார். சகுனி என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதால் அவர் வில்லனாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாளிடம் அளித்துள்ள பேட்டியில், `மகாபாரதத்தில், கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஈடான நியாயவான் சகுனிதான். கிருஷ்ண பரமாத்மா எப்படி தர்மத்தை காப்பாற்ற சில தந்திரங்கள் செய்வாரோ, அப்படியேதான் சகுனியும் பல தந்திரங்கள் செய்கிறார். அந்த குணாதிசயத்தைத்தான் இந்த படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்துக்கு எடுத்துக்கொண்டேன். படத்தின் தலைப்பை பார்த்து, கார்த்தியை வில்லன் என்று கருத வேண்டாம். படத்தில் ஒரு வில்லனோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்களோ இல்லை. வில்லனை அழிக்கிற உச்சக்கட்ட காட்சியுடன் முடிகிற கதையும் இல்லை. ஊரில் ஒரு பிரச்சினை என்று கார்த்தி சென்னைக்கு வந்து அவர் இங்கே சந்திக்கிற மனிதர்கள், அனுபவங்கள்தான் கதை, என்று கூறியுள்ளார்.
 
படத்தின் கதாநாயகியாக பிரணிதா நடிக்கிறார். நாசர், கோட்டா சீனிவாசராவ், ரோஜா, மும்தாஜ் என பல நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்



comments | | Read More...

மலை போல் எகிறிய சந்தானத்தின் சம்பளம்

 

வடிவேலுவை திரையுலகினர் ஓரம் கட்டியதால், நிறைய தயாரிப்பாளர்கள் சந்தானத்தையே தேடுகின்றனர். இதனால் அதிக படங்களில் நடித்து வரும் காமெடி நடிகராகிவிட்டார் சந்தானம். அது மட்டுமின்றி வடிவேலுவைப் போல ஒரு நாளிற்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்குகிறாராம். அதாவது ஒரு நாள் கால்ஷீட் என்றால் 7 லட்சம் கேட்கிறாராம். ஒரு நாளிற்கு 7 லட்சம் எனில் 10 நாட்களுக்கு 70 லட்ச ரூபாயும் ஒரு மாதத்திற்கு இரண்டே கால் கோடியும், ஆண்டிற்கு 27 கோடியும் வருகிறது. ஒரு ஆண்டின் 365 நாளில் வெறும் நூறு நாள் நடித்தாலே 7 கோடி ரூபாயை சம்பாதிக்க போகிறார் சந்தானம்.

comments | | Read More...

இந்தி படம் தோல்வி: திரிஷா ஆவேசம்

 
 
திரிஷா காட்டாமீட்டா என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அசின் இந்தியில் கலக்குவது போல் இப்படத்துக்கு பின் தனக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி திரிஷா ஆவேசமாக கூறியதாவது:- படம் தோற்றால் மனம் கஷ்டப்படுகிறது. வேலை எதுவும் ஓடவில்லை. காட்டாமீட்டா இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வந்தன. அட்வான்ஸ் தர தயாராக இருந்தார்கள். ஆனால் நான் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காட்டாமீட்டர் ரிலீஸ் ஆனபிறகு தான் புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாவேன் என்று கூறிவிட்டேன். படம் நன்றாக போகாததால் என்னை தேடிவந்தவர்கள் காணாமல் போனார்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை. மீண்டும் இந்திப்பட வாய்ப்பை பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger