ஷாரூக்கானின் ரா-1 படத்தின் கதை இதுதான்!
Penulis : karthik on Tuesday, 11 October 2011 | 23:31
செல்போன் காதலர்கள் தற்கொலைக்கு முயற்சி-காதலி பலி, காதலர் ‘சீரியஸ்’
நாகர்கோவில்: செல்போனில் காதல் வளர்த்த காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில், காதலி பலியானார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(29). வேன் டிரைவர். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் மகள் பிரிஸ்கா(22) என்பவருடன் கண்ணனுக்கு செல்போன் பேச்சு மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரிஸ்கா தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் குறித்து தெரிந்து கொண்ட பிரிஸ்காவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் கண்ணனை தொடர்பு கொண்ட பிரிஸ்கா உடனே தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து கண்ணனும், பிரிஸ்காவை கன்னங்குளத்தில் இருந்து பால்குளம் பை-பாஸ் சாலை வழியாக அழைத்து சென்றார்.
அப்போது 2 பேரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை தொடர்ந்து, 2 பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பிரிஸ்கா கொண்டு வந்திருந்த விஷ மாத்திரையை பழத்தில் கலந்து, 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் 2 பேரும் மீண்டும் காதல் கதைகளை பேசி கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, வாந்தி எடுத்தனர். கண்ணனுக்கு லேசான தெளிவு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வேனில் மயங்கி கிடந்த 2 பேரையும், நாகர்கோவில் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரிஸ்கா இறந்தார். கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி உள்ள போது, கல்லூரி மனைவி ஒருவரை காதலித்து வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமிதாப்புக்கு வயது 69!
மும்பை: பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 69 வயது பிறக்கிறது.
'பாலிவுட்டின் பேரரசன்' என்று வர்ணிக்கப்படுபவர் அமிதாப் பச்சன். ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வருபவர். இன்றும் பாக்ஸ் ஆபீஸில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் அமிதாப்புக்கு இன்று 69 வயது பிறக்கிறது.
ஆனால் இந்தப் பிறந்த நாளை அவர் ஆடம்பரமாகக் கொண்டாடவில்லை. "பிறந்த நாளைக் கொண்டாட சிறந்த வழி, செய்யும் வேலையை ஒழுங்காக நிறுத்தாமல் செய்வதுதான்," என்கிறார் அமிதாப்.
இப்போது ராம்கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் மற்றும் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்துதல் என மிக பரபரப்பாக உள்ளார்.
பிறந்த நாளுக்காக கேக் வெட்டினாரா அமிதாப்?
ஆம்… நேற்று நள்ளிரவு ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிய அமிதாப், சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி குடும்பத்துடன் எளிமையாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து வந்த அவரது ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதிலும் பதிலுக்கு நன்றி சொல்வதிலும் அவரது நேரம் கழிந்ததாம்.
"மற்றவர்களின் எளிய வாழ்த்துக்களைப் பெறுவதிலும், அவர்களுக்கு பதில் சொல்வதிலும் தனி ஆனந்தம் உள்ளது. இந்தப் பிறந்த நாளுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் பிறந்த நாளன்று மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன… எல்லா நாளும் நான் விரும்புவது அன்பும் அமைதியும்தான். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்," என்கிறார் அமிதாப்.
அரசியல், சினிமா, சமூக நல அமைப்புகளைச் சார்ந்த பலரும் அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
home
Home