News Update :
Powered by Blogger.

முன்னாள் முதல்வர் மகனுடன் ஜெனியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது

Penulis : karthik on Sunday, 9 October 2011 | 01:36

Sunday, 9 October 2011

 
நடிகை ஜெனிலியாவுக்கும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், விரைவில் வெளிவர இருக்கும் ‌வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியில் "துங்கே மேரி கஸம்" என்ற படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுக்கு, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.
 
ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். முதலில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒரு நடிகை தனக்கு மருமகளாக வரக்கூடாது என்று ரித்தேஷின் தாயார் கூறிவந்தார். இருந்தும் தங்களது காதலில் உறுதியோக இருந்த இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களது காதலை எதிர்த்த ரித்தேஷின் பெற்றோர், பின்னர் சம்மதம் தெரிவித்தனர். பெற்றோரின் சம்மதத்தையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
 
இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வீட்டில், ஜெனிலியாவுக்கும், ரித்தேஷ்க்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் திருமண தேதி வெளியாகும் என்றும், திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.



comments | | Read More...

ரம்பாவின் குழந்தைக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசு...!

 
 
 
எட்டு மாத குழந்தையுடன் இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, ரம்பாவின் அண்ணன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கா‌ர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கனவு தேவதையாக ரசிகர்களின் கனவுக்குள் நுழைந்து, இதயத்துள் நிறைந்து, தன் குதூகலிக்கும் சிரிப்பாலும், குழந்தைதன பேச்சாலும், ரசிகர்களை தன் நடிப்பால் கட்டி போட்டு வைத்தவர் நடிகை ரம்பா. கடந்த ஆண்டு, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரம்பாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். லான்யா என்றால் சமஸ்கிருதத்தில் தேவதை என்ற பொருளாம்.
 
இந்நிலையில் தனது எட்டு மாத குழந்தையை எடுத்து கொண்டு இந்தியா வந்துள்ளார் ரம்பா. குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தான் இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, அவரது அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு, குழந்தை லான்யாவிற்கு 50 லட்ச ரூபாயில் லேண்ட் ரோவர் மாடல் காரை பரிசாக தந்துள்ளார்.
 
இது குறித்து ரம்பா நம்மிடம் பேசுகையில், லான்யா பெயரில் நிறைய பூக்களோடு கார் வந்து நின்றதும் பயங்கர சந்தோஷம். என் குழந்தைக்கு அண்ணா, கொடுத்த முதல் பரிசை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் கணவரின் கம்பனி இந்தியாவில் இருப்பதால், அவருக்கு உதவியாகவும், குளிர்காலங்களில் அங்கு இருக்க முடியாததால், இந்தியா வந்துள்ளதாக கூறும் ரம்பா, நிறைய பேர் இப்போதும் என்னை நடிக்க கூப்பிடுகின்றனர். ஆனால் எனக்கு அக்கா, அண்ணி, போன்ற ரோலில் நடிக்க விருப்பம் இல்லை. டிவி ஷோ வேண்டுமானால் பண்ணுவேன், மத்தபடி இப்போதைக்கு நடிக்க விருப்பம் இல்லை. என் ரசிகர்களுக்கு எப்போதும் என் அன்பு உண்டு என்று முடித்து கொண்டார்.



comments | | Read More...

பி.வாசுவின் மகன் ஷக்தி காதல் திருமணம் ( படம்)

 
 
இயக்குநர் பி.வாசுவின் மகன் பிரஷாந்த் என்கிற ஷக்தி. தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கும், ஸ்மிருதி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
 
 
 
 
ஸ்மிருதி, `பி.காம்.' பட்டம் பெற்றவர். சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த முரளி-துஷிதா தம்பதிகளின் மகள். டைரக்டர் பி.வாசுவும், முரளியும் ஏற்கனவே குடும்ப நண்பர்கள். ஷக்தி-ஸ்மிருதி திருமணத்துக்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள்.
 
அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டது.
 
இவர்கள் திருமணம் வருகிற 31-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது.
 
 
முன்னதாக, 30-ந் தேதி மாலை 4 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. 31-ந் தேதி மாலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
 

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger