News Update :
Powered by Blogger.

பதிவுலகமும் ஆபாசமும்

Penulis : karthik on Thursday, 29 September 2011 | 20:09

Thursday, 29 September 2011

 
 
யாரோ புதியபதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்என்னை ''நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்" என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்துஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாகசொல்லிவிட்டேன்.
 
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தைஎழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுவிட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வைஏற்படுத்தினால் அது ஆபாசம்.
 
சினிமாக்களில் கற்பழிப்புகாட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவைசிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிரகிளர்ச்சியைத்தருவதில்லை.
 
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியைதூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்வேறு.முன்பேகுறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
 
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளைபெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களைவிமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
 
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பதுஉண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சிலபதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதைதவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
 
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தைகுறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காகபதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
 
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றியமனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
 
பெண்கள் சிக்ஸ்பேக்கைவிரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரைபட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
comments | | Read More...

சமையல்னா சாதாரண விஷயமா?

 
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாகதெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பதுஉணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமானசமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
 
எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்.தினமும் வீட்டுக்குசெல்லும் முன்பு மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவார்.வீட்டுக்குப்போய் கொஞ்சம் போதும்தொப்பை பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பார்.கிட்ட்த்தட்ட தினமும் இதுவேதான்.ஒருநாள் கேட்டுவிட்டேன்.''அம்மா போனப்புறம்இப்படித்தான் சார்,அவங்க(மனைவி) சமைக்கறது எனக்கு பிடிக்கிறதில்ல!"
 
சமையல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வித்தியாசமான ஒன்று.சில குடும்பங்களில் காரம்குறைவாக சாப்பிடுவார்கள்,சில இட்த்தில் நமக்கு நாக்கு சுட்டுவிடும்.உப்பும்அப்படித்தான்.சில வீடுகளில் சப்பென்று இருக்கும்.உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில்சாப்பிட நேரும்போது உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்வதும்,அதிகமாகஇருந்தால் தண்ணீர் விட்டுக்கொள்வதும் எனக்கு வழக்கம்.
 
அடிக்கடி நோய்வாய்ப்படும் குடும்பங்களில் சமையலும் ஒரு பிரச்சனையாக இருக்கவாய்ப்புண்டு.ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகள் சேர்ப்பது குறைவாக இருக்கும்.சிலகுறிப்பிட்ட உணவு வகைகளுக்கு பழகிப் போய்விடுவதும் காரணம்.சிலருக்கு கொழுப்புநிறைந்தவை,சிலருக்கு காரம் நிறைந்தவை.
 
ஒவ்வொரு பகுதிக்கும்உணவு வகைகளில் மாற்றம் இருப்பது தெரிந்த்தே! வட நாட்டிலிருந்து வரும்லாரிக்கார்ர்கள் எங்காவது சாலையோரங்களில் நிறுத்திவிட்டு அவர்களேசமைத்துக்கொள்வார்கள்.ஆந்திராவில் பச்சை மிளகாய் கடிப்பதை பார்த்தால் நமக்குகண்ணில் நீர் வரும்.
 
என் தாத்தாவுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அரை ஆழாக்கு நெய் வேண்டும்என்று பாட்டி சொன்னதுண்டு.இப்போது அப்படி சாப்பிட்டால் கதை வேறு.அவர்கள் நாள்முழுக்க உடல் உழைப்பில் வாழ்ந்தவர்கள்.சமையலில் இருக்கும் பெரும்பாலான சேர்க்கைகளும்நிலத்தில் விளைந்த்தாக இருக்கும்.
 
சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும்அந்த கலை கைவந்து விடுகிறது.நிலத்தில் விளைந்து,அம்மா சமைத்த அந்த எளிய உணவு தந்ததிருப்தியை இனி எப்போதும் அடைந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.எல்லாவற்றிலும்சுட்டியாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்பது பொருள்.
 
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும்குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும்தருவது இதமான உணவுதான்.
comments | | Read More...

உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?

 
 
உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.


கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.

பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.




பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.
நாடியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !


ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
 
(ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)
 
"நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்" என்றான்
 
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
 
கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறியகோபம்
 
ஆபத்தாம் அதிர்ச்சியிலேசிறியதாகும்;
 
அச்சத்தால் நாடியெலாம் அவிந்துபோகும்;
 
தாபத்தால் நாடியெலாம் சிதைந்துபோகும்;
 
கவலையினால் நாடியெலாம் தழலாய்வேகும்;
 
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
 
கொல்வதற்கு வழியென நான்குறித்திட்டேனே.
 
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger