News Update :
Powered by Blogger.

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்

Penulis : karthik on Friday, 21 September 2012 | 17:48

Friday, 21 September 2012

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம் முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்

வாஷிங்டன், செப்.22-
 நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் தயாரான சினிமாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை அவர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.  இந்த பிரச்சினை� ��்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய சினிமாவை வெளியிட்ட யூ டியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு டெலிவிஷன், எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலை� ��்தளங்களில் தங்களுக்கும், இந்த சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம் தொடங்கிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த சினிமா படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ப� ��ை இந்த பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள். சுமார் 30 வினாடிகள் டெலிவிஷனில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டாலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறினார்.  பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும� � மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் அதில் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரச� ��ர விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம். ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது.   
comments | | Read More...

மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா

மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா
மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா

புதுடெல்லி, செப்.22-
 டெல்லியில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான தி.மு.க., முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கூட்டணிக்கு தார் மீக உரிமை இல்லை. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மைனாரிட்டி ஆகிவிட்டது. இந்த அரசு மக்களுக்கு சுமையாகிவிட்டது. அது நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இந்த மக்கள் விரோத அரசிடமிருந்து நாட்டு மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாரதீய ஜனதாவின் எதிர்பார்ப்பு. மேற்கு வங்காளம் மற்றும் நாட்ட� � மக்களின் நலனையொட்டி, மூழ்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி கப்பலில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறி இருப்பது பாராட்டுக்குரியது.  வெற்றி கண்டுள்ள நாடளாவிய முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் கர ுத்தொற்றுமை ஏற்படுத்திய பின்னர்தான், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அப்போதைய நிதி மந்திரியும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதன்படி நடந்துகொள்ளாமல் இப்போது முடிவு எடுத்திருப்பது, மக்களுக்கு செய்த துரோகம் ஆகும். மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வர� ��வதை தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவை தொடர்வதாக முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளாரே என கேட்கிறீர்கள். இதன்மூலம் மக்கள் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியின் இரட்டை வேடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி ஒருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டையும், (டீசல்) விலை உயர்வையும் எதிர்க்கிறது. மற்றொரு புறம் மத்திய அரசுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ள ை செய்வது போல ஆதரவு அளிக்கிறது.மத்திய அரசு தனது முடிவுகளை வாபஸ் பெறுமாறு சமாஜ்வாடி கட்சி நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும்.  இவ்வாறு ஷா நவாஸ் உசேன் கூறினார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி மத்திய அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்துமா?என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷா நவாஸ் உசேன் நேரடியாக பதில் அளிக்க� ��மல், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற நிலையில், தற்போது நாங்கள் வளர்ச்சி பணிகளில்தான் குறியாக இருக்கிறோம் என பதில் அளித்தார்.   
comments | | Read More...

கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது

கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது
கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது

சென்னை, செப். 21-

கோயம்பேட்டில் வியாபாரிகள் நடத்திய கடையடைப்பு காரணமாக நேற்று மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை லாரிகளில் இருந்து முழுமையாக இறக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா, மகா ராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நேற்று கோயம்பேடுக்கு 100 லாரிகளில் வெங்காயம் வந்திருந்தது. இதில் 50 லாரிகளில் இருந்த வெங்காயத்தை இறக்கி வைக்க முடியாமல் இன்று அதிகாலையில் தான் இறக்கி வைத்தனர்.

ஆனால் அதற்குள் 50 லாரி வெங்காயம் அழுகி விட்டது. இதனால் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை இன்று கிலோ 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போல் தக்காளி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைந்துள்ளது. கேரட் கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது. பீட்ரூட் கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.6 ஆகவும், பீன்ஸ் ரூ.25-ல் இருந்து ரூ.20 அகவும் விலை குறைத்து விற்கப்படுகிறது.

அவரைக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.45 ஆக விற்கப்படுகிறது. கத்தரிக்காய் கிலோ ரூ.12க்கு விற்கப்படுகிறது. இன்று அனைத்து கடைகளும் கோயம்பேட்டில் திறந்திருந்ததால் வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்தது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger