News Update :
Powered by Blogger.

பூனைக்குட்டி ஈன்ற நாய்

Penulis : karthik on Sunday, 22 July 2012 | 04:33

Sunday, 22 July 2012





பொதுவாக ஒரு உயிரினத்துக்கு அதே இனம்தான் பிறக்கும். ஆனால் ஒரு நாய் பூனைக்குட்டியை ஈன்றுள்ள அதிசயம் நடந்துள்ளது. கொரியாவை சேர்ந்தவர் ஜியாங் பியாங் (63). இவர் த� �து வீட்டில் ஒரு பெண் நாயை செல்லமாக வளர்த்து வந்தார். கர்ப்பமாக இருந்த அந்த நாய் குட்டி ஈன்றது. அது பூனைக் குட்டி போன்ற தோற்றத்தில் உள்ளது.
 
நாயும் அந்த குட்டியை மிகவும் பாசத்துடன் பராமரித்து வருகிறது. இதைப் பார்த்த ஜியாங் பியாங் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார். இந்த அதிசயத்தை தன் கண்ணால் நம்ப முடியவில்லை என்கிறார்.
 
இதுகுறித்து, அறிவியல் நிபுணர்களும், கால்நடை டாக்டர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மரபியல் ரீதியாக இதுப� �ன்ற மாற்றங்கள் ஏற்பட வாய்பில்லை என கூறியுள்ளனர்.







comments | | Read More...

கூட்டணியில் இருந்து விலகினால் கவலை இல்லை: மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் பதிலடி





நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பேசிய மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மரியாதை இருக்கும் வரைதான் மத்தியில் காங்� ��ிரஸ் கூட்டணியில் நீடிப்போம் என்று நிபந்தனை விதித்ததுடன், மாநிலத்தைப் பொருத்தவரை இனி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்றும், அறிவித்தார். 

கூட்டணியில் இருந்து விலகுவதற்கு நிபந்தனை விதித்துள்ள மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தாவின் இந்த அறிவிப்பு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும், மம்தாவின் சவாலை சந்திக்கத் தயார் என்றும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்ஜி கருத்து தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியதாவது-
 
தனியாக போட்டியிடுவது என்று மம்தா முடிவு எடு த்தால், எங்களுக்கும் தனித்துப் போட்டியிடுவதற்கான தெம்பு-திரானி உள்ளது. அவருடைய கருத்து பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மம்தாவின் சவாலை ஏற்றுக் கொள்கிறோம். இந்த நேரத்தில், மம்தா பானர்ஜி அப்படி ஏன் அறிவித்தார்? என்று தெரியவில்லை. அவருடைய இந்த அறிவிப்பு பச்சைத்துரோகம் ஆகும்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று, 34 ஆண்டு கால இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி இருக்க முடியாது. மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் நீடிப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுவரை ஆட்சியில் நீடிப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
மாநில காங்கிரஸ் தலைமை மம்தா பானர்ஜிக்கு கட� �மையான பதிலடி கொடுத்திருக்கும் நிலையில், மேற்கு வங்காள மாநில கட்சி பொறுப்பை கவனிக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரான ஷகீல் அகமது மழுப்பலான கருத்தை தெரிவித்து இருக்கிறார். நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், கூட்டணியை பாதிக்கும் விதத்தில் மம்தாபானர்ஜி எதையும் சொல்லவில்லை. ஆட்சேபகரமாக அவர் எதையும் கூறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சில உள்ளாட� �சி தேர்தல்களில் கூட நாங்கள் தனித்து போட்டியிட்டு இருக்கிறோம் என்றார்.
 
ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த ஷகீல் அகமது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்ட� �ம் என்றார்.
 
இதற்கிடையில், மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த மம்தா முடிவு செய்து இருப்பது ஜனநாயக விரோத செயல் என்று, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
 
மாநில அரசுக்கு நிதி உதவி செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மம்தா பானர்ஜி கூறுவதை ஏற்க முடியாது என்றும், எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.







comments | | Read More...

ராஜேஷ் கன்னாவைப் போல வாழ்ந்தவர் யாருமில்லை.. கமல் புகழாரம்





ராஜேஷ் கன்னாவைப் போல புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்கள் யாருமில்லை. அவருக்குக் கிடைத்ததைப் போன்ற திரை வாழ்க்கை சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் பு� ��ழாரம் சூட்டியுள்ளார்.

கமல்ஹாசனுக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் இடையிலான உறவு திரையுலகில் மிகப் பிரபலமானது. கமல்ஹாசன் நடித்துப் பிரபலமான படங்கள் சிலவற்றின் ரீமேக்கில் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார். அதை விட முக்கியமானது கமல்ஹாசனின் முதல் இந்தித் திரைப்படத்தில் ராஜேஷ ் கன்னா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அரங்கேற்றம். கமல்ஹாசன் விடலைப் பையன் நிலையிலிருந்து உருமாறி நின்றபோது நடித்த முதல் பெரிய படம் இதுதான். இந்தப் படம் பின்னர் ஆய்னா என்ற பெயரில் இந்திக்குப் போனது. அதிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார். அதில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் இணைந்து நடித்� �ிருந்தனர். ஆய்னா படத்தில் கமல்ஹாசன் நடன வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

அந்த அனுபவத்தை கமல் கூறும்போது, ஆய்னாவில் நான் நடித்தபோது வளரும் நடிகன் என்ற நிலையில் இருந்தவன் நான். ஆனால் அப்போதே பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் ராஜேஷ் கன்னா. அவர் அப்போது இந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக, ஏன் உலக நடிகராக விளங்கினார்.

ஆய்னாவில் நான் நடித்தபோது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். தட்டிக் கொடுத்தார். ஊக்கப்படுத்திப் பேசினார். நட்புடன் பழகினார். என்னிடம் உள்ள திறமை, அது மிகச் சிறிதாக இருந்தாலும் அதை புகழ்ந்து பேசினார். எனது படங்கள் சிலவற்றில் பின்னர் இந்தி ரீமே� �்கில் அவர் நடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது என்றார் கமல்.

கமல் மேலும் கூறுகையில், ராஜேஷ் கன்னாவைப் போல புகழும், பெருமையும், செல்வாக்கும் மிக்க நடிகர்கள் வெகு சிலர ்தான் உள்ளனர். இப்போதும் சரி, எப்போதும் சரி ராஜேஷ் கன்னாவைப் போன்ற வாழ்க்கை வெகு சிலருக்குத்தான் கிடைக்கும் என்றார் கமல்.

கமல்ஹாசனின் அரங்கேற்றம் தவிர சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger