Tuesday, 3 July 2012
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைவதால் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இம்மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சங்மாவும் போட்டியிட மனு செய்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் மனு செய்திருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நேற்று தொடங்கியது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் 2-வது நாளான இன்று மதியம் எதிர்க்கட்சி வேட்பா ளரான சங்மாவின் வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியில் இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சங்மா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, பிரணாப் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து பதில் அளிக்க அவருக்� �ு அவகாசம் அளித்தார். அதன்படி பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியை கடந்த மாதம் 20-ம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக அவர் சார்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பன்சால் இன்று பிற்பகல் தேர்தல் அதிகாரியிடம் பதிலளித்தார். பிரணாப்பின் இந்த பதிலை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக பன்சால் அறிவித்துள்ளார்.
home
சர்ச்சைக்குரிய பிங்கி பிராமனிக்குக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இன்டர்நெட்டில் பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சியை யார் கசிய விட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றவர் பிங்கி. இவர் மீ்து சமீபத்தில் ஒரு பெண் கொல்கத்தா போலீஸில் புகார் கொடுத்தார். அதில்,பிங்கி ஒரு ஆண் என்றும் தன்னுடன் அவர் வசித்து வந்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு கொல ்கத்தா மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ஒரு முக்கிய சோதனையும் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடந்த மருத்துவப் பாலின பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. 29 விநாடிகள் இந்த காட்சி ஓடுகிறது. அந்த சோதனையின்போது பிங்கி உடலில் ஆடைகள் இன்றி காணப்படுகிறார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது போல காட்சி உள்ளது. பிங்கி முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனை காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது.இந்த வீடியோ வெளியீடு குறித்து பிங்கியின் வக்கீல் துஹின் ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோ� �ை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் இதை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது மிகவும் கேவலமான, கொடூரமான செயல்.பிங்கியின் வழக்கு ஜூலை 12ம் தேதி கோர்ட்டுக்கு வரும்போது இந்தப் பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம் என்றார்.
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் பதவி விலகிய பிறகு வெளிநாடு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்து மற்றும் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் முஷரப் அமெரிக்காவில் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் குறித்து முஷரப் கூறியதாவது:- பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை சரியில்லை. வீழ்ச்சியில் இருந்து நாட்டையும், அரசியல் அமைப்பு சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இந்த சூழ்நிலையில் நாட்டை பாதுகாக்க மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அங்கு ராணுவ ஆட்சி மீண்டும் வரலாம். அதை மறுப்பதற்கில்லை. என்று அவர் கூறினார்.
Home