Monday, 2 July 2012
மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்: 2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தேன். அப்போது 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். "குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களா� ��் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு" என்று அவர் என்னிடம் கூறினார். கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, "குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்" என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன். பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை "பெர்சனல் சேவை செய்ய" போகுமாறு கூறினார். அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் ந� ��ந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்" என்று கூறி அனுபவித்தார். தேவி...தாசி... மேலும் "இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி" என்று கூறினார்.இதேபோல் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி" என்று கூறி அனுபவித்தார். ராவா சரக்கு.... 2006-ம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் இருந்தபோது அவர் தனது காவி உடைகளுக்கு கீழே மதுபாட்டில் வைத்திருப்பதை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்துக் கொடுத்ததுதான் மாயம்.. கடகடவென "ரா"வாகவே ஊற்றிய கையோடு என் வாயிலும் ராவாக ஊற்றிவிட்டார். ஆனால் கட்டாயப் படுத்தி வாயில் ஊற்றிவிட நான் மயங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்தபோது நிர்வாணமாகவே கிடந்தேன்.2006-ம் ஆண்டு வாரணாசிக்கு சென ்றபோது அவர் விஷ்வம் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து விருப்பம் இல்லாமலேயே அனுபவித்தார். வாரணசாமியில் "தாசி" பட்டம் கொடுத்து அதற்கு ஒரு விளக்கம் கூறி அனுபவித்தார். 2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போனது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொண்டு நைட் கிளப்புக்கு அழைத்துச் சென்று குத்தாட்டம் போட்டார். அங்கேயும் ஜீவன் முக்தி என்ற பெயரில் அனுபவித்தார். இதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது. கும்பமேளாவில் கும்மாளம் 2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்ற போதும் கூட என்னை சும்மா இருக்கவிடவில்லை. புனிதமான இடத்தில் உடலுறவு கொள்வதால் சக்தி கிடைக்கும் என்று கூறி டெண்ட்டில் வைத்தே அனுபவித்தார். அமெரிக்காவுக்கு சென்ற போது நான் உடன்பட மறுத்த நாட்களில் ஒரு மனநோயாளி போல் சாடிஸ்டாக நடந்து கொண்டு அடித்திருக்கிறார். அமெரிக்க சீடரான விநய் பரத்வாஜையும் இப்படித்தான் கெடுத்திருப்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர்தான் லெனினுடன் சேர்ந்து நித்தியானந்தாவின் பெட்ரூமில் கேமராவை வைத்தோம் என்று ஆர்த்திராவ் கூறியுள்ளார்.
home
குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்க ம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர். சுப்பிரமணியசாமி அதிரடி இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார். ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!
உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 16 அணிகள் பங்கேற்ற 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் இற� ��தி ஆட்டம் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலே ஸ்பெயின் வீரர் டேவிட் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பிறகு இத்தாலி வீரர்கள் தங்கள் பங்கிற்கு கோல் அடிக்க மும்மரமாக விளையாடினாலும் அவர்கள் முயற்சி ஸ்பெயின் வீரர்களால் முறியடிக்கப்ப ட்டது. ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா சிறப்பாக விளையாடி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலே ஸ்பெயின் அணி 2 கோல்களுடன் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் அடுத்த பாதியின் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க விடா முயற்சி செய்தனர். ஆனாலும் ஸ்பெயின் வீரர்கள் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அனல் பறந்தது.&n bsp;ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டோரஸ் கோல் அடித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட ஸ்பெயின் அணியிடம் வந்தது. டோரஸ் கோல் அடித்த சிறிது நேரத்தில் அதாவது ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜுவான் மாதா கோல் அடித்தார். இத்தாலி வீரர்கள் கடைசி வரை போராடி விளையாடிய போதிலும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடி� �ில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தற்போதும் இத்தாலியை வீழ்த்தி மூன்றாவது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை தற்போது ஸ்பெயின் அணி சமன் செய்து� ��்ளது. எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. ஆனால் ஸ்பெயின் அணி 2008-ம் ஆண்டு மற்றும் தற்போதைய போட்டியில் வென்றதன் மூலம் அந்த சாதனையையும் நிறைவேற்றியுள்ளது. 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்க து.
Home