News Update :
Powered by Blogger.

ஐரோப்பிய கால்பந்து இறுதிப்போட்டி: ஸ்பெயின் புதிய வரலாறு படைக்குமா?

Penulis : karthik on Sunday, 1 July 2012 | 06:25

Sunday, 1 July 2012

உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் வந்துவிட்டத� ��. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு உக்ரைனில் உள்ள கீவ் நகரில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்பெயின் உலக கால்பந்தில் தற்போது அசைக்க முடியாத நம்பர் 1 அணியாக திகழ்கிறது. அந்த அணி இத்தாலியை வீழ்த்தி புதிய வரலாறு படைக்கும் இலக்கில் உள்ளது. 2008-ம் ஆண் டு ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில் 1-0 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. யூரோ கோப்பை, உலக கோப்பை ஆகியவற்றை தொடர்ந்து வென்ற அந்த அணி மீண்டும் யூரோ கோப்� ��ையை வென்று சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளது. எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. மேலும் ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை சமன் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பை வென்றது. இதனால் இன்றைய இறுதிப் போட்டியிலும் இத்தாலியை விழ்த்தினால� �� புதிய வரலாறு படைக்கலாம் என்ற லட்சியத்தில் ஸ்பெயின் அணி உள்ளது. ஆனால் ஸ்பெயின் அணியின் அனைத்து வகை சாதனைகளுக்கும் இத்தாலி அணி முட்டுக்கட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்போட்டித் தொடரில் எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் சிறப்பாக விளையாடும் அணியாக இத்தாலி அணி உள்ளது. இத்தாலி அணி யூரோ கோப்பையை 2-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்� �ு முன்பு அந்த அணி 1968-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்று இருந்தது. இரு அணியிலும் உலகின் தலை சிறந்த வீரர்கள் இருப்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

comments | | Read More...

மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி

அசாம் மாநிலத்தில் ஜப்பான் என்சபலிட்டிஸ் எனும் மூளை காய்ச்சல் நோய் சமீப காலமாக பரவி வருகிறது. அங்குள்ள நல்பாரி, காம்ரூப், சிவ்சாகர், மாரிகான், தாரங் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாக மாநில சுகாதார துறை கூறியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 332 ப ேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்த மனிதனுக்கு பரவுகிறது. நோய் ஏற்பட்டவரை கடிக்கும் கொசு மற்றவரை கடிக்கும்போது அவருக்கும் நோய் பரவுகிறது. நோய் ஏற்பட்டதும் கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்படுகிறது. மூளைப்பகுதியில் வீக்கமும் ஏற்படுகிறது. உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே நோ ய் குணமாகிறது. இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் நோய் தாக்கியவர்களுக்கு மூளை பாதிப்பும் உருவாகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் நோய் பரவி வருவதால் அசாம் மக்களிடையே பீதி ஏற்பட்டு உளளது.

comments | | Read More...

சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?

சோனியா காந்திக்குப் பிரதமர் பதவி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இதுவரை சரியான தகவல் இல்லை. அவரது குடியுரிமைதான் பிரச்சினை என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் என்ன சட்டச் சிக்கல் இருந்தது என்பதை சுப்பிரமணியம் சாமி விளக்கியுள்ளார்.முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து, அடு த்த பிரதமர் சோனியாதான் என்று அனைவரும் பேசி வந்தனர். அந்த சமயத்தில்தான் சோனியா காந்தியின் குடியுரிமை, அவரது பிறப்பு குறித்து சர்ச்சைகள் வெடித்தன. குடியரசுத் தலைவராக அப்போது இருந்த அப்துல் கலாமுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அடுத்தடுத்து புகார்களை அனுப்பிக் கொண்டிருந்தன. அனைவரும் சோனியா பிரதமராகக் கூடாது என்று கோரி வந்தனர்.இந்த நிலையில்தான் ஜனதாக் கட்ச� �த் தலைவர் சுப்பிரமணியாமி சாமியை அழைத்தார் கலாம். அவரிடம், சோனியாவை பிரதமராக்குவதில் அப்படி என்னதான் சட்டச் சிக்கல் உள்ளது என்று கேட்டுள்ளார். பல்வேறு சட்ட நிபுணர்களையும் உடன் வைத்துக் கொண்டு சாமியிடம் இந்த விளக்கத்தைக் கேட்டுள்ளார் கலாம்.அப்போது சாமி விளக்கம் தருகையில், சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையே முதலில் தவறானது. அவர் பதிவு பெற்ற குடியுரிமையைத்� ��ான் வைத்துள்ளார். அதுவும் கூட தற்போது செல்லாது. சட்டப்படி தற்போது அவர் இத்தாலி குடியுரிமையில்தான் உள்ளார். காரணம், இந்திய சட்டப்படி இந்தியர் ஒருவர், இந்தியாவில் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்க முடியு்ம். ஆனால் சோனியா தனது இத்தாலி நாட்டுக் குடியுரிமையை இந்த நிமிடம் வரை கைவிடாமல் வைத்திருக்கிறார். எனவே அவரது இந்தியக் குடியுரிமையே சட்டப்படி தவறாகும் என்று கூறியு� ��்ளார்.இதுபோன்ற சட்ட சிக்கல்களை கலாம் புரிந்து கொண்டதால்தான் அவர் சோனியாவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தயாராக இல்லை என்றும் சாமி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விரிவான முறையில் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர்தான் கலாம் தீர்க்கமான, திட்டவட்டமான முடிவை எடுத்தார் என்றும் கூறியுள்ளார் சாமி.கலாம் 2வது முறையாக குடியரசுத் தலைவராக முடியாமல் போனது குறி� ��்து தான் வருந்தவில்லை என்றும், அதேசமயம், கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராயிருந்தால் மிகச் சிறந்த குடியரசுத் தலைவரை மீண்டும் நாடு பார்த்திருக்கும் என்றும் சாமி கூறியுள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger