News Update :
Powered by Blogger.

வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா அஜீத்?

Penulis : karthik on Saturday, 30 June 2012 | 05:53

Saturday, 30 June 2012

அஜீத்தின் 'பில்லா-2' படம் ஜூலை 13-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. வருகிற 2-ந்தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்கிறது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கதாநாயகி பார்வதி ஓமன குட்டனும் பங்கேற்கிறார். அஜீத் இவ்விழாவில் கலந்து கொள்வாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் இதுபோன்ற விழாக்களில் முன்பெல்லாம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. வன்முறை, கவர்ச்சி சீன்கள் அதிகம் இருப்பதால் இச்சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவை படக்குழுவினர் கைவிட்டு விட்டனர். 'பில்லா-2' படத்தை சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்களின் அதிநவீன சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளது.

comments | | Read More...

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சிங்களர் கட்சி கடிதம்

தி.மு.க. சார்பில் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி "டெசோ" மாநாடு விழுப்புரத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜே.எச்.யூ. (ஜதீகா ஹீலா உருமையா) கட்சி தலைவர் ஒமல்பெ ஷோபிதா தெரோ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தி.மு.க. நடத்த உள்ள "டெசோ" அமைப்பின் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் சுதந்திரமான தனி ஈழம் கோரிக்கை விடுப்பதன் மூலம் அது இலங்கையில் இறையாண்மைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும். மேலும் தனிஈழம் கோரிக்கையின் மூலம் இறுதிகட்ட போருக்கு பின்பு உருவான நல்லெண்ணம், நல்லுறவு போன்றவை அழிந்து மீண்டும் � �ோசமான விளைவுகள் ஏற்படும். 1976-ம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த தனிஈழம் தீர்மானத்தினால் இலங்கையில் 30 ஆண்டுகளாக தீவிரவாதமும், போரும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் இந்தியாவுக்குள் எதிர்ப்பு சக்திகள் ஊடுருவ இலங்கை ஒருபோதும் அனுமதித்த தில்லை என்பதை தங்களுக்கு (மன்மோகன்சிங்குக்கு) நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் எதி� �்காலத்திலும் அந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

comments | | Read More...

சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னிங் பாயிண்ட்ஸ்' நூலில்

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சோனியாவும் பிரதமர் பதவியும் 2004- தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பல்வேறு தரப்புகளிடமிருந்து சோனியா காந்தி பிரதமராக ஒப்புதல் தரக்கூடாது என்று வலியுறுத்தி மின் அஞ்சல்கள் குவிந்தன. ஆனால் சோனியா காந்தியை ஆட்சி அமைக்க அழைக்கும் கடிதத்தை அனுப்பவும் நான் தயாராக இருந்தேன். சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்து இருந்திருந் தால் நானும் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவர் மன்மோகன்சிங்கை பிரதமராக பரிந்துரைத்துவிட்டார் பீகார் பேரவை கலைப்பு 2005-ம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியபோது குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன். இது தொடர்பாக ராஜினாமா கடிதமும் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சமாதானப்படுத்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படும் எனக் கூறினார். இதையடுத்து ராஜினாமா முடிவை கைவிட்டேன் என� �று அப்துல்கலாம் அந்த நூலில் எழுதியுள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger