Saturday, 30 June 2012
மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை அபுஜிண்டால் நேற்று வெளியிட்� �ான். அந்த கடற்படையை லஷ்கர் தீவிரவாதிகள் சமீபத்தில் சீரமைத்து மேலும் நவீனப்படுத்தி உள்ளனர்.அந்த படையில் உள்ள தீவிரவாதிகள் அனைவரும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிர்பூரில் உள்ள மங்களா அணைக்கட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தவும், இந்திய கடற்படை மீது தாக்குதல் நடத்தவும் அ ந்த அணைக்கட்டில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதை தீவிரவாதி ஜிண்டால் உறுதிபடுத்தினான். மங்களா அணைக்கட்டு பகுதியில் பயிற்சி பெற்று வரும் தற்கொலை கடற்படை தீவிரவாதிகளில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் ஜிண்டால் தெரிவித்துள்ளான். அந்த 8 வாலிபர்களுக்கும் தானே நேரில் பயிற்சி கொடுத்ததாகவும் அவன் டெல்லி போலீசாரிடம் கூறினான். மராட� �டியம், குஜராத், கடலோர பகுதிகளை தாக்கும் நோக்கத்துடன்தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சதி திட்ட பயிற்சியில் இந்திய வாலிபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட கசாப் உயிருடன் சிக்கிக் கொண்டதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்காலத்தில் அத்தகைய நெருக்கடி ஏற்படகூடாது என்பதற்காகவே இந்திய இளைஞர்� ��ளை கடற்படையில் ஐ.எஸ்.ஐ. சேர்த்து பயிற்சி அளித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே கடற்படை தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீண்டும் தாக்குதல் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தடுத்து விட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்தே வேறு ஒரு திட்டத்துடன் ஜிண்டால் சவுதி அரேபியாவு� �்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். ஆனால் இணையத்தளத்தை பயன்படுத்தியதால் உளவுத் துறையின் வலையில் சிக்கிக் கொண்டான்.
home
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று, என் கடன் பணி செய்து கிடப்பது என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு இணங்க அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர் பெருமக்கள். நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ும் வண்ணம் ஏழ்மையும், கல்வியறிவின்மையும் முற்றிலும் நீங்குவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 1.4.2012 முதல் அரசு ஊழியர்களுக்காக வழங ்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்ச வரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்க ு ஆண்டுகளுக்கு, அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்க� �ம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தின� �் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் க ுடும்பத்தினர் பயன்பெறுவார்கள். அரசின் இந்த நடவடிக்கைகள், அரசு ஊழியர்கள் சொந்த வீடு கட்டுவதற்கும், தங்களது உடல் நலத்தை நன்கு பாதுகாப்பதற்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற திடீர் குண்டு வெடிப்பில், 2 துப்பரவு தொழிலாளர்கள் காயமடைந்தார். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு அப்பகுதியில் பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பலத்த சத்தம் ஏற்பட்டதில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த குண்டு செயலழப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதாரங்களை கைப்பற்றினர். விசாரணையில் 2 துப்பரவு பணியாள் காயமடைந்ததாக தெரிய வந்தது. இச்சம்பவம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டிற்கு வெளியே நடைபெற்றதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சரியா கூறியதாவது, குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு துப்புறவு பணியாளருக்கு அதிக காயம் அடைந்து, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு துப்பரவு பணியாளருக்கு கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் வெடிக்கும் தன்மை கொண்ட ஏதோ பொருள் மருத்துவமனை நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தாகவும், அதனை அப்புறப்படுத்த முயன்ற போது வெடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசாரும், வெடி குண்டு செயலிழப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார். இது குறித்து கொல்கத்தா மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தார்த் சக்கரவர்த்தி கூறியதாவது, மருத்துவமனையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இங்கு பணியாற்றும் பணியாளர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டு வெடிப்பு சம்பவத்தால் மருத்துவப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றார்.
Home