News Update :
Powered by Blogger.

மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

Penulis : karthik on Sunday, 17 June 2012 | 02:22

Sunday, 17 June 2012

எத்தனை விதமான போன்களடா அதில் எத்தனைவித ரிங் டோன்களடா... என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு "ரிங் டோன்" வசதியை உபயோகப்படுத்துவதில் நாம் வெளுத்துக் க‌ட்டுகிறோம் . நம்முடைய "ரசனைகள்" பீடு நடை போட பாதை இட்டு பாடாய் படுத்துகிறது இந்த ரிங் டோன்களின் ரீங்காரம்.ஒரு வசதியை எந்த அளவு பயன்படுத்தி "போட்டுத் தாக்கு"வோம் என்பதற்கு இந்த ரிங் டோனை நாம் பயன்ப� ��ுத்தும் முறைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்ற மாதம் ஈரோட்டில் ஒரு திருமணம். கல்யாண மண்டப கழிப்பறையில் என் பக்கத்து கழிவறையிலிருந்து ஒரு ring tone...சீர்காழி கோவிந்தராஜனின் "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...". அடக் கடவுளே! கலிகாலத்தில் உன் நிலைமை பார்த்தாயா? எங்கிருந்தெல்லாம் உன்னை அழைக்கிறார்கள்! இயற்கை உபாதை கழிக்கையில் கூடவா இறைவன் பாட்டு? அல்லது நம் நண்பர் மலச் � �ிக்கல் நீங்கி மறுமலர்ச்சி பெற‌ மொமைல் போன் மூலம் முருகனை வேண்டுகிறாரோ?

இதற்கு நேரெதிர் கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை. மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் அமர்ந்த படி வாழ்க்கை போகும் பாதையை வாசிக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருப்பவர் "அரைச்ச மாவை அரைப்போமா" என்கிறார். இவரிடம், "ஏன் சார் இப்படி ஒரு ரிங் டோன் கொலை வெறி" என்று கேட்க முடியுமா? எந்த கேள்விக்கும் ஏடாகூ� �மாக பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தானே நாம்? ஒரு வேளை நம் மாவு நண்பர்,  "முன்னோர்க்கு முன்னோர் துவங்கி அரைத்த மாவையே அரைப்பதால்தான் இவ்வுலக வாழ்க்கை இப்படி இருக்கிறது. இதைத்தான் "அரைச்ச மாவை அரைபோமா" என்று தத்துவ விசாரணை செய்கிறது இந்த பாடல்" என்று நம் மேல் வேதாந்த மாவை அவர் பூசி விட்டால் என்ன செய்வது? நம்மால் முடிந்தது இன்னும் இரண்டு படிக்கட்டுக்கள் தள்ளி அமர்ந்து தண்ணீர் இல்லாத பொற்றாமரையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர், "நான் அடிச்சா தாங்க மாட்ட..." என்னும் ரிங் டோன் வைத்திருக்கிறார். பேரம் பேசுகையில் இவருக்கு போன் வந்தால் நாமெல்லாம் தெறித்து ஓடி விட வேண்டியதுதான்...

ஒரு முறை நுங்கம்பாக்கத்திலிருந்து அடையார் சென்று கொண்டிருந்தேன். பேரு� �்தில் நல்ல கூட்டம். கல்லூரியில் படிப்பவர் போலிருந்த பெண் ஒருவரிடமிருந்து "சும்மா நிக்காதீங்க...சொல்லும்படி வைக்காதீங்க" என்று வருகிறது ரிங் டோன். வம்பிழுக்கக் காத்திருக்கும் ஆண்களை வரவேற்கும் வகை பெண் போலும்!. இவர் போன்ற "புதுமை" பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது சார். நல்ல வேளை. அதற்கு பிறகு உள்ள வரிகள் இல்லாமல் இரண்டு வரியுடன் ரிங் டோன் செட் செய்த இந்த மகளிர் குல மாணிக்கத்திற்கு மனதால் நன்றி சொல்வோம்.

இன்னும் சில பேருக்கு வீட்டில் இருக்கும் பொழுது ரிங் டோன் மாற்றி set  பண்ண மனது வராது. அடுத்தவர் நிம்மதியை கெடுத்தால்தானே நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாற் போல இருக்கிறது. எனவே, இவர்கள் பேருந்தில் பயணம் போகையில் ஒவ்வொரு பாட்டாக வரிக்கு வரி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எது நல்ல ரிங் டோனாக இருக்கும் என்று test செய்கிறார்களாம� ��!. பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, விருந்து சாப்பிட்டவன் எடுத்த வாந்தி போல விதவிதமாய் அரைகுறையாய் இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வரிகள் தலைவலியைக் கொடுக்கும். சிலர் இவ்வாறு "பணி" செய்யும் பொழுது, தானும் அந்த பாடலை வரியை உடன் பாடி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

தற்போது "சத்யமேவ ஜெயதே" என்றொரு டிவி நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது. எனவே நிறைய பேர் "satyameva jayate" ரிங் டோன் வைத்த ிருக்கிறார்கள் (பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது). ஏன் சார், வாய்மையே வெல்லும் என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க நாம் என்ன வடிகட்டிய முட்டாள்களா என்ன? எந்த இடத்தில் எந்த பொய் சொன்னால் நமக்கு என்ன லாபம் என்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இல்லையா நாம்? அதனால்தான், காலத்துக்கு உதவாத உண்மை நேர்மை போன்றவை காலர் டோனிலாவது காற்று வாங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நாலு ப� ��ர் "satyameva jayate " என்று போனில் டோன் வைத்திருக்கிறார்கள். விடுங்கள்...பாவம்.

ச‌ரி. மேலே சொன்னவற்றை தள்ளி வையுங்கள். அற்புதமான ரிங் டோன் வைத்திருக்கும் பலரையும் நாம் சட்டென்று பொது இடத்தில் கடக்கும் பொழுது, யாரென்று தெரியாமலேயே அவர்களை பிடித்துப் போய்விடுகிறது...சென்னை ரங்கநாதன் தெருவில் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் "இது ஒரு பொன் மாலைப் பொழுது",  KPN பேருந்தில் எனக்கு முன் வரிசை இருக்கை பெண்ணிடமிருந்து வந்த "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு முதியவரின் "வெள்ளிப் பனி மலையின்..." என்று நிறைய மனிதர்கள் மனதிற்கு நிறைவு தரும் ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


http://cin emanews10.blogspot.com
comments | | Read More...

இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!

Penulis : karthik on Thursday, 7 June 2012 | 21:01

Thursday, 7 June 2012


அதிமுகவை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட� ��டும் என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிடுட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் அரசியல் நாகரீகப்படி அத் தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால் அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை பொது வேட்பாளராக கருதி ஆதரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

அந்த அளவிற்கு சுயமரியாதையை பெருந்தன்மையோடு ஆளும் கட்சிக்கு விட்டுக்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனும், நல்லக் கண்ணுவும் மரியாதை நிமித்தமாக ஜெயலலி தாவை சந்தித்துப் பேசியுள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிù பற்று துர்மரணம் அடைந்த முத்துக்குமரனின் மனைவி, குழந்தைகளையும் சந்திக்க வைத்திருக்கின்றனர்.

இதெல்லாம் அவர்கள் கட்சிப் பிரச்சனை. ஆனால் தா.பாண்டியன் தேவையில்லாமல் ஈழத் தமிழர் சாவோடு என்னைத் தொடர்பு படுத்து ஏன் பேச வேண்டும்? (ஈழத் தமிழருக்கு திமுக செய்துள்ள செய� �்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளார்).

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, அதைத்தடுத்து நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சிகளால் பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் ராஜபக்சேவிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். திமுகவின் அழுத்தத்தின் விளைவாக ராஜபக்சே அரசு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது.

இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள ்ளட்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.


http://tamil-cinema1.blogspot.com
comments | | Read More...

பொன்சேகா, சேனக ஹரப்பிரியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Thursday, June 07, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரின் செயலாளரான ஓய்வுபெற்ற கெப்டன் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பத� �்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான சேனக ஹரப்பிரிய டி சில்வா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தமது கட்சிக்காரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிட்ட� �ர்.

இராணுவத்தை விட்டுச்சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கியமை, அரசாங்கத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை சீர் குலைப்பதற்கு சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா மற்றும் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்குமாறு இந்த வழக்கின் முதலாவதும் , மூன்றாவதும் சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் விடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
http://naamnanbargal.blogspot.com
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger