News Update :
Powered by Blogger.

ஸ்ருதியால் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டை உண்மைத்தான்: கஸ்தூரிராஜா

Penulis : karthik on Monday, 21 May 2012 | 04:55

Monday, 21 May 2012




தனுஷ் - ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், " தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டுலதான் சண்டை இல்லாம இருக்கு.

தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான். எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டரா அந்த சீன் சரியா வந்தாலும், மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான். காரணம், ஐஸ்வர்யாவோட அன்பு அப்படி. மருமகளுக்� �ும் மகனுக்கும் அப்பப்போ இப்படி சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா அவங்க பிரிஞ்சு வாழறாங்கன்னு சொல்றது தப்பு.

தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலு� �் உடைக்க முடியாது!", என்றார்.



comments | | Read More...

அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மைதான்-ஐபிஎல் வீரர் ஒப்புதல்




அமெரிக்கப் பெண் ஜோஹல் ஹமீதிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான். அப்போது நான் குடிபோதையில் இருந்ததும் உண்மைதான� �� என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக போலீஸாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த தினத்தன்று தான் குடிபோதையில் இருந்ததாகவும், ஜோஹல் ஹமீத ின் அறைக்குத் தேவையில்லாமல் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் தவறு செய்தது உண்மைதான் என்றும் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டி முடி்வடைந்த பின்னர் நடந்த மது பார்ட்டியின்போதுதான் போமர்ஸ்பேக் இப்படி தவறாக நடந்து கொண்ட சம்பவம் இடம் பெற்றது. இதுதொடர்பாக ஜ ோஹல் ஹமீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கிரிக்கெட் வீரர் போமர்ஸ்பேக் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னைக் காப்பாற்ற முயன்ற காதலர் ஷஹீல் பீர்ஸாதாவை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார் ஜோஹல் ஹமீத்.

இதையடுத்து போமர்ஸ்பேக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



comments | | Read More...

இணையதள கட்டுப்பாடு விதிகளுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு

Penulis : karthik on Friday, 18 May 2012 | 00:41

Friday, 18 May 2012





இணையதள தகவல்கள் தொடர் பான அரசின் கட்டுப் பாட்டு விதிகளை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்தார். பிரபல இணையதளங்களில் முக்கி ய தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றதற்கு இந்தியா அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இணையதள தகவல்களை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய விதிமுறைகள்(2011) சேர்க்கப்பட்டன. இந்த விதிமுறை அரசு கெஜட்டில் கடந்த மாதம் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விதிமுறையின் படி, அவதூறு, ஆபாச, கண்டனத்துக்குரிய, சட்டவிரோதமான, மைனர்களை பாதிக்கும் தகவல்களை, ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள் ஆகியவை இணையதளங்கள் வெளியிடக் கூடாது. 

இந்நிலையில் இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைக்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி நேற்று எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விதிமுறைகளை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: இணையதளங்களை கட்டுப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப சட்டம், பேச்சு மற்றும் � ��ருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராஜீவி பேசினார்.

இது குறித்து மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், ''தகவல்களை தடுத்து நிறுத்தும் காலம் எல்லாம் போய்விட்டது. இணையதளத்தில் தகவல்களை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். 1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்.

அதே நேரத்தில் இணையதளத்தில் வெளியாகும் வெறுப்பு பேச்சுக்கள், கலவரத்தை தூண்டும் அபாயம் உள்ளது. இது குறித்து, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.
இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் � ��பில் சிபல், ''இணையதளங்களின் தணிக்கை, ஒழுங்குமுறை போன்றவற்றில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட குழுவின ரின் ஆலோசனை, அனுமதி பெற்றபின்பே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது'' என்றார்.

1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger