ஜாமீனில் விடுதலை: ஆ.ராசா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்க� �ல் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில் அதிபர் ஷாகித் பல்வா, பட அதிபர் கரீம் மொரானி மற்றும் தனியார் டெலிபோன் நிறுவன உயர் அதிகாரிகள் அனைவரும் குற்றப்பத்த ிரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பு ஒவ்வொருவராக ஜாமீனில் விடுதலையாகி திகார் ஜெயிலை விட்டு வெளியே வந்தனர்.
ஆனால் ஆ.ராசா மட்டும் ஜாமீனில் விடுதலையாக மறுத்து விட்டார். ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணைக்காக அவர் தினமும் திகார் ஜெயிலில் இருந்து போலீஸ் வேனில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப் பட்டு வந்தார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனால் ஆ.ராசா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லி கோர்ட்டுக்கு � �ந்திருந்த ராசா ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். ராசா கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
கோர்ட்டு மற்றும் ஜெயில் நடைமுறை முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு ராசா திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அவரை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு வரவேற்று அழ� �த்து வந்தார். அப்போது ஜெயில் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பின்னர் ராசா ஜெயில் வாசலில் இருந்து காரில் ஏறி நேராக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசலில் அவரை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக ராசா விடுதலையானதால் அவரது மனைவி பரமேஸ்வரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோர்ட்ட ுக்கு வந்திருந்த அவர் ஜாமீன் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றார். ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்று தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ஆ.ராசா விடுதலையானதால் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப் தும் தி.மு.க.வில் தீவிரமாக இருப்பவர். கட்சியில் எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம் � �ன்றார்.எனவே ராசா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று தெரிகிறது.
ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். சிறையில் இருந்த போதும் அவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். ராசா கைதான போது தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கூடி அவருக்கு முழு ஆதரவு தெரிவித்தது.தி.மு.க. எ ப்போதும் ராசாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோர்ட்டு அனுமதியின்றி ராசா தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் ராசா டெல்லியிலேயே தங்கி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து டெல்லியை விட்டு வெளியே வரலாம்.ஏற்கனவே கன ிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலையானதும் மீண்டும் அரசியலில் கவனம் செலுத்தினார். கட்சி கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். அவரைப் போல் ஆ.ராசாவும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
நடிகை உதயதாரா திருமணம்: கேரளாவில் நடந்தது
தமிழில் தீ.நகர், மலையன் படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் உதயதாரா. பிரசன்னாவுடன் கண்ணும் கண்ணும் மற்றும் விலை, பயமறியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சின் அருகே நடந்தது.
திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயதாரா கூறி இருந்தார்.
தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர். ஓரிரு மாதங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
home



Home