News Update :
Powered by Blogger.

ராணுவ தளபதியின் ரகசிய கடிதத்தை லீக் செய்தது பெண் அதிகாரி? மத்திய அரசு விளக்கம்

Penulis : karthik on Monday, 14 May 2012 | 02:33

Monday, 14 May 2012




நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊட கங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.

ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட� �ு.

ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வேட்பாளர் இன்று அறிவிப்பு




புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்த� �் ஜூன் மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த தேர்தலில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, ம.தி. மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளன. ஆனால் தே.மு.தி .க. போட்டியிடப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தை ஏற்று விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார்.
 
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வேட்பாளர் பெயரை விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. தே.மு.தி.க. மாவட் செயலாளர் ஜாகீர் உசேன், அவைத் தலைவ� ��் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு. தி.க.வை ஆதரிக்க போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தி.மு.க. தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என் பதை தெரிவிக்க 49 (ஓ)வை பயன்படுத்த போவதாக முன்னாள் அமைச்ச� �் ரகுபதி கூறினார். இதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் கட்சி தலைமையிடம் கேட்டுள்ளனர்.




comments | | Read More...

எடியூரப்பாவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: சமரச முயற்சி வெற்றி பெறுமா?




சட்ட விரோத சுரங்கத் தொழிலுக்கு உ தவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் 8 மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதல்- மந்திரி பதவியை எடியூரப்பா இழந்தார். புதிய முதல்- மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார்.
 < /div>
லோக்ஆயுக்தா அமைப்பில் சிறை தண்டனை பெற்ற எடியூரப்பா, ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்-மந்திரியாக பல தடவை முயற்சி செய்தார். பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் யாரும் அவருக்கு � �த்துழைப்பு கொடுக்காததால் எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளும் தோல்விலேயே முடிந்தன. இதனால் அவர் கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் எடியூரப்பா மீதான சட்ட விரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது எடியூரப்பாவை ஆவேசப்படுத்தியது.
 
பா.ஜ.க. தலைவர்கள் யா ரும் தன்னை காப்பாற்ற முன்வரவில்லை என்று வேதனைப்பட்டார். பெங்களூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா தன் குமுறல்களை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், காங்கிரசில் மூத்த தலைவர் யாராவது பாதிக்கப்பட்டால் சோனியா நேரயாக உதவுகிறார். கட்சியும் உதவிக்கு முன்வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார்கள். இதற்காக சோனியாவை பாராட்டுகிறேன் என்றார்.
 
எடியூரப்பாவின் இந்த பேச்சு கர்நாடக பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து எடியூரப்பாவை சமரசப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. மந்திரிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் முதல்- மந்திரி சதானந்த கவுடா அவமதித்து வருவதாக எடியூரப்பா ஆதரவா� ��ர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
 
சதானந்தா கவுடா தொடர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி 9 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவி விலக முன் வந்துள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்� ��ுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
எடியூரப்பா இன்று காலை தன் ஆதரவு மந்திரிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்பதில் எடியூரப்பா ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல தடவை எடியூரப்பா இது மாதிரி போர்க்கொடி உயர்த்தி விட்டு பிறகு சமரசம் ஆகி உள்ளார்.
 
இந்த தடவையும் அவரை சமரசம் செய்ய கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தடவை எடியூரப்பா சமரசம் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர் இன்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவை அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறத� �. 



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger