News Update :
Powered by Blogger.

ஐ.பி.எல். ஆர்வத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள்

Penulis : karthik on Saturday, 12 May 2012 | 06:00

Saturday, 12 May 2012




ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றி உள்ளது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஐ.பி.எல். போட்டியை டெலிவிசனிலும், மைதானத்திலும் பார்த்து ரசித்து வருகிறார்கள். தம� �ழக எம்.எல்.ஏ.க்களும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆர்வத்தில் உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் காணும் ஆர்வத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் எல்லா எம்.எல்.ஏ.க்களும் போட்டியை நேரில் பார்ப்பதற்கான இலவச டிக்கெட் கிடைப்பது இல்லை. 

டிக்கெட் கிடைக்காததால் சில எம் .எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. கூறும் போது, நான் கடந்த ஒரு வாரமாக ஐ.பி.எல். டிக்கெட் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கு எந்தவித டிக்கெட்டும் தரவில்லை என்றார். 

மற்றொரு எம்.எல்.ஏ. கூறும்போது, எனது மகன் என்னிடம் டிக்கெட் கேட்டு நெருக்கடி கொடுக்கிறான். நான் அவனுக்கு சென்னை அணியின் டி ஷர்ட் மட்டுமே வாங்கி கொடுக்க முட� ��ந்தது. ஆனால் என்னால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றார். 

டிக்கெட் கிடைத்த ஒரு எம்.எல்.ஏ. கூறும்போது, நான் அதிர்ஷ்டசாலி. நண்பர்கள் மூலம் எனக்கு டிக்கெட் கிடைத்தது. எனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்தேன். சில எம்.எல்.ஏ.க்கள் டிக்கெட்டுக்காக பணம் செலவழிக்கவும் தயராக உள்ளனர்.




comments | | Read More...

பிலிப்பைன்ஸூடன் போரா? - சீனா மறுப்பு




தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவுக்கு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு த யாராகிவருவதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.

தென்சீனக் கடலில் பல நூறு சிறு சிறு தீவுகள் உள்ளன. எண்ணெய்வளமிக்க பகுதி என்பதால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் சீனாவோ ஒட்டுமொத்த தென்சீனக் கடலுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என அடம்பிடித்து வருகிறது.

அண்மையில் இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்தது. ஹூவாங்யன் தீவு அருகே சீனாவின் படகுகளை பிலிப்பைன்ஸ் தடுப்பதும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகில் சீனா சோதனையிடுவதும் என விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

மேலும் பிலிப்பைன்ஸின் சீனாவுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. இருநாட்டு போர்க் கப்பல்களும் கடந்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஹூவாங்யன் தீவுப் பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. சீனாவோ பிலிப்பைன்ஸுக்கு எதிராக முழுமையான பொருளாதாரத் தடையை விதித்திருக்கி றது. அந்நாட்டுக்கு சுற்றுலாவுக்கு எவரும் செல்லக் கூடாது. அந்நாட்டில்லிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் சீனா தடை விதித்திருக்கிறது. பிலிப்பைன்ஸைப் பொருத்தவரையில் சீனா 3-வது முக்கிய வர்த்தக உறவில் உள்ள நாடு. இதனால் பிலிப்பைன்ஸ் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லப் போவதாகவும் தமக் கு ஆதரவாக சர்வதேச நாடுகளை திரட்டப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளித்து வருகிறது. பிலிப்பைன்ஸ்- சீனா இடையே மோதல் நிலை இருந்தபோது அமெரிக்க கடற்படை அதே கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியை பிலிப்பைன்ஸூடன் நடத்தியிருந்தது. இந்தியாவும் பிலிப்பைன்ஸின் நிலைப்பாட்ட� � ஆதரிக்கும் வகையில் தென்சீனக் கடல் உலகின் பொதுச்சொத்து என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸூடன் ஒரு முழுமையான போருக்கு சீனா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் சீன பாதுகாப்பு அமைச்சகம் இதனை முற்றாக மறுத்துள்ளது.



comments | | Read More...

ஓமன் அருகே 11 இந்தியர்களுடன் எண்ணை கப்பல் கடத்தல்




லைபீரியா நாட்டின் எண்ணைக் கப்பலான ஸ்மிர்னி, 1.35,000 டன் எண்ணையோடு சோமாலியா சென்று கொண்டிருந்தது. தனது இரண்டாவது பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பலில் இந்தியர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுமாக மொத்தம் 15 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள் ஆவர்.

இந்த கப்பல் ஓமன் நாட்டுக்கு அருகே வந்த போது சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன. அங்குள்ள நேரப்படி பகல் 11.50 மணியளவில் கப்பலில் இருந்து வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கப்பலின் நிறுவனம் கூறியுள்ளது.

அந்த பகுதியில் வரும் கப்பல்களை அங்குள்ள கடல் கொள்ளைக்காரர்கள் கப்பலை கடத்தி பல மில்லியன் டாலர்கள் பெறுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை‌ ‌தொடர்ந்து கடத்தப்பட்டவர்களையும் கப்பலையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.< /div>

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்குவதற்கு இந்தியா, இ ங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கூட்டுப்பாதுகாப்பு ரோந்துப் படையை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger