News Update :
Powered by Blogger.

ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர்

Penulis : karthik on Wednesday, 9 May 2012 | 22:27

Wednesday, 9 May 2012




ஆன்மீக விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்� ��மாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன் என்று காஞ்சி ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி வந்த ஜெயேந்திரர் அங்குள்ள சங்கர மடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக காசி, நேபாளம், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த விராத் நகர், பீகார் பூரி மடம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந ்து கொண்டேன்.

நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் குடும்பங்களில் கூட ஆன்மிகம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவருகிறது.

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.

இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலைய� �ல் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.

ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மொட்டை போட்டால்தான் சாமியாராக லாயக்கு.

அப்புறண், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந� �தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.

ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.

தமிழக அரசு ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய ஆண்டான நந்தன வருடத்தில் பொதுமக்கள் சகல வசதிகளையும் பெற்று சந்தோஷமாக, ஆனந்தமாக இருப்பார்கள். நந்தனம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் ஆனந்தம் என்று பெயர். அதனால் பொதுமக்கள் நந்தன ஆண்டில் அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள் என்றார் ஜெயேந்திரர்.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஜெயேந்திரர். தற்போது இவர் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி



மேட்டூர் தொட்டில் பட்டியில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு 3 ஷிப்டுகளில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு ஷிப்டுக்கு அதிகா ரிகள், ஊழியர்கள், உதவியாளர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

நேற்று அனல் மின்நிலையத்தில் 3 -வது ஷிப்டில் ஊழியர்கள் வேலை ச� �ய்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் பெல்ட் திடீரென தீ பிடித்தது. பின்னர் அது மளமளவென பரவி மில் பிளாண்ட் (நிலக்கிரி அரைக்கும் பகுதி) வரை எரிந்தது. திடீரென கண்வேயர் பெல்ட் எரிய தொடங்கியதால் அனல் மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது. 

அப்போது அங்கு வேலைப்பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை அறிந்து அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீ  பங்கர் டாப் ( நிலக்கரி இருப்பு வைத்துள்ள அறை) வரை எரிந்தது. மேலும் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் மற்றும் அதற்குண்டான தளவாடங்கள் அனைத்தும் எரிந்து அப்படியே கீழே விழுந்தது. 

நிலக்கரியை எடுத்து செல்லும் கண்வேயர் பெல்ட் பூமியில் இருந்து சுமார்  20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தீ பிடித்ததும் அதில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. வெளியில் இருந்து பார்த்த போது அனல் மின்நிலையத்தில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து அக்கம், பக்க� �்தில் உள்ள பொதுமக்கள் அனல் மின் நிலையம் முன்பு திரண்டனர். 

அதிகளவில் நிலக்கரி இருந்ததால் தீயின் தாக்கம், மற்றும் புகை மூட்டமும் அதிகரித்தது. அப்போது அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்த உதவியாளர் நல்லதம்பி (50) என்பவர் மூச்சு திணறி இறந்து விட்டார். மேலும் கோபால் என்பவர் தீ காயம் � �டைந்தார். உடனடியாக அவரை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் உதவி பொறியாளர் அதியமான் என்பவரும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த த� �� விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி எழிலரசு, உதவி அதிகாரி முருகேசன் தலைமையில் அனல் மின் நிலைய தீயணைப்பு துறையினர், மற்றும் மேட்டூர், பவானி, ஓமலூர், இடைப்பாடி, ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 9 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், டி.எஸ்.பி. கோபால், அனல் மின் நிலைய தலைமை பொறியாளர்கள் மாது, மனோகரன், மற்றும் கருமலைகூடல் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.  தீ விபத்து க ுறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்





comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள் - 09-05-12




 நடிகை சதா போட்ட குத்தாட்டம்
`ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், சதா. மும்பை அழகியான இவர், தமிழில்
 `உருமி', உருவானது எப்படி? டைரக்டர் சந்தோஷ் சிவன் பேட்டி
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள புதிய படம் `உருமி'. வித்தியாசமான
 டைரக்டர் லிங்குசாமி காலில் விழுந்த பாலாஜி சக்திவேல்!!
பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்து, லிங்குசாமி தயாரித்து வெளியிட்ட படம், `வழக்கு எண்
 புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்பு
தலைமை தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஏஜெண்டாக செயல்படுவதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது
 ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு
சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வியாழக்கிழமை சந்தித்துப்
 துப்பாக்கியில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம்
போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி
 போதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம் முருகன் கோயில் தெருவில் வசிப்பவர் தினகரன் (28). வெல்டிங்
 உங்களுக்கு நீங்களே 'ஆப்பு' வச்சுக்க தயாரா? ஆதீனங்களுக்கு நித்தியானந்தா சவால்
என் மீது குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் தங்கள் அறைகளில் ரகசிய கேமரா வைக்க
 தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
சென்னை மீனம்பாக்கம் - 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) சென்னை நுங்கம்பாக்கம் - 95
 பட்டா மாறுதலை முப்பது நாட்களில் பெறலாம்: கலெக்டர் சகாயம்
பட்டா மாறுதல் உத்தரவை 30 நாட்களுக்குள் பெறலாம் என மதுரை கலெக்டர் சகாயம்
 நைட்டி தடுக்கி படிக்கட்டில் உருண்டார் தாய் - கைக்குழந்தை பரிதாப பலி
நைட்டி தடுக்கியதால் கைக்குழந்தையுடன் மாடி படிக்கட்டில் தாய் உருண்டார். இதில் குழந்தை பரிதாபமாக
 காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
காற்றின் வேகம் குறைந்து வருவதால், காற்றாலை மின் உற்பத்தி 976 மெகா வாட்டாக
 சித்திரை திருவிழா இன்று கள்ளழகர் மலைக்கு புறப்படுகிறார்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 6ம் தேதி அழகர் வைகை
 டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக
 நகைக்கடையில் கொள்ளை முயற்சி: எஸ்.எம்.எஸ். உதவியால் முறியடிப்பு
தர்மபுரியில் நேற்று அதிகாலை நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற 9 பேர் கொண்ட
 பஞ்சாப் அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெக்கானை வீழ்த்தி பஞ்சாப் அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.ஐ.பி.எல்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger