News Update :
Powered by Blogger.

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த 178 படங்கள்!

Penulis : karthik on Wednesday, 9 May 2012 | 08:00

Wednesday, 9 May 2012



 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்பட ங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்?

இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..

அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா...

பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவ� �்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்!

எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.











































comments | | Read More...

2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா..




2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி முதன் ம� ��றையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவ ர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார� �. அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மிச்சம் இருப்பது ராசா மட்டுமே.

இந் நிலையில் பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ராசா. இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை ந டைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

ராசா சிறையில் ஓராண்டைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பாய்கிறார் சச்சின்!




கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந� �து அடுத்து சினிமாவுக்குள்ளும் புகுகிறார் சச்சின் டெண்டுல்கர். விது வினோத் சோப்ராவின் பெராரி கி சவாரி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் சச்சின் வரப் போகிறாராம்.

22 வருடங்களாக விடாப்பிடியாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் சமீபத்தில்தான் அரசியலுக்குள்ளும் தனது வலது மற்றும் இடது காலை எடுத்து வைத்தார். ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் அடுத்து சினிமாவுக்கும் வரப் போகிறார்.

விதுவினோத் சோப்ரா இயக்கும் புதிய படம் பெராரி கி சவாரி. இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில், சிறப்புத் தோற்றத்தில் சச்சின் வருகிறாராம். இந்தக் காட்சியில் தோன்றுவதற்கு சம்மத� ��் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது பெயரையும் பட விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளாராம் சச்சின்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம் சச்சின். சச்சின் செய்யப் போகும் கேரக்டர் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோப்ராவிடம் கேட்டால், சச்சினும் இப்படத்தில் பங்கேற்பது சந்தோஷமாக இருக்கிறது. தனது பெயரையும் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதித்துள்ளார். அவரது ரோல் என்ன எ ன்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இப்போது சொல்ல முடியாது என்றார்.

ஷர்மான் ஜோஷி நடித்துள்ள இப்படம் ஜூன் 15ம்தேதி திரைக்கு வருகிறதாம். ஒரு குழந்தையின் கிரிக்கெட் கனவை சித்தரிக்கும் படமாம் இது. அதேசமயம் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தையும் படத்தில் வைத்திருக்கிறாராம் சோப்ரா.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger