News Update :
Powered by Blogger.

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?

Penulis : karthik on Friday, 4 May 2012 | 12:15

Friday, 4 May 2012




புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித� �தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார்.


இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்க� �ம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற� ��ற கட்சிகளும் நினைத்திருந்தனர்.

ஆனால்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.


இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.


அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார்.


கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது � �ல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர்.


அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என  இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது.


ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம்  எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு த� �.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர்.


ஆனால்டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமைகலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.� �ி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர்.


ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.



comments | | Read More...

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்




இந்தியாவிலேயே எய்ட்ஸ் � �ோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க திட்ட இயக்குனர் மருத்துவர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2001ல் 1.31 ஆக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு விகிதம், 2006ல் 0.38 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத� �தக்கது. 2012ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு, எய்ட்ஸ் நோய்க் கிருமியான எச்.ஐ.வி தொற்றியுள்ளது எனவும் மோகன்தாஸ் கூறியுள்ளார்.
 
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார சிவப்பு ரிப்பன் ரெயில், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்த ரெயில் இம்மாதம் 9ம் தேதி முதில் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளது. மேலும் சென்னை, வேலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த ரெயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.



comments | | Read More...

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம்



மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். மற்றும் இதர தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகள் மூன்று நிலைகளாக நடத்தப்படும். சிவில ் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது.  

கடந்த ஆண்டு நடந்த இந்த தேர்வின் கடைசி நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந ்த சினேகா அகர்வால் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த சுந்தரேஷ் என்பவர் இந்த தேர்வில் 38-வது இடத்தை பிடித்துள்ளார். முதல்நிலை தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இரண்டாம் நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 13, 984 பேர் தகுதிபெற்றனர். இதிலிருந்து நேர் முகத்தேர்வுக்கு 2,414 பேர் தகுதிபெற்றார்கள். இறுதி கட்ட தேர்வு முடிவில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேர்வாணைய முடிவுகள் தெரிவிக்கின்றன.





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger