News Update :
Powered by Blogger.

நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை- மதுரை ஆதீனம்

Penulis : karthik on Thursday, 3 May 2012 | 21:44

Thursday, 3 May 2012




நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல வெளிநாட்டுக்குப் போகப் போவதும் இல்லை. ஆதீன மடத்தில்தான் நான� �� இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக உள்ள குருசாமி தேசிகர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல� �வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி நடந்து கொண்டுள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எ டுத்த முடிவு அல்ல. அந்த முடிவை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.

இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின ்பற்றப்படவில்லை.

இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத ்துள்ளார்.

அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக த� �ரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹரிபரந்தாமன் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,

மதுரை ஆதீனமான நான் நித்தியானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலோ, சட்டவிரோத காவலிலோ இல்லை. என் தொடர்பாக இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இ� ��்லை. விளம்பரம் பெறும் நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் தினந்தோறும் ஆதீன மடத்தில் பக்தர்களுடனும், சீடர்களுடனும் கலந்துரையாடி வருகிறேன். நேற்று கூட பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினேன். ஆனால் மனுதாரர் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதில் இருந்தே அவரது உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.

அடுத்த ஆதீனம் யார் என்பதை அறிவிக்க எனக்கு அதிகாரமும், தகுதியும் உண்டு. ஆதீனம் இதுபோலத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் இல்லை.

அதேபோல என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறுவதும் உண்மையல்ல. அதுபோன்ற எந்த முடிவும் இல்லை. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



comments | | Read More...

தி.மு.க. புறக்கணிப்பால் புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிட காங். விருப்பம்




புதுக்கோட்டை தொகுதியில ் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.  முத்துக்குமரன் கார்  விபத்தில்  மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க.   கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும்  போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  எதிர்பார்த்து இருந்தனர்.
 
ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் மற்ற கட்சிகளின்  ஆதரவோடு  இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தலை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள்   கருதினர். இதற்கு ஏற்றார்போல் இந்திய  கம்யூனிஸ்டு  கட்சி போட்டியிட்டால்   மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தது.
 
ஆனால் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து விட்டது. எனினும் இந்த  தேர்தலில்  தி.மு.க. உறுதியாக  போட்டியிடும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை புறக்ககணிக்க  போவதாக தி.மு.க.  தலைவர்  நேற்று  அறிவித்தார். இந்த  அறிவிப்பால் அ.தி.மு.க.வினர் வரலாறு காணாத வெற்றி பெறல� �ம் என்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை  விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்து உள்ளது. கடந்த தேர்தலின் போது பாரதீய ஜனதா வேட்பாளர் பழ.செல்வம் வெறும்  1748  வாக்குகள் மட்டும்  பெற்றிருந்த� ��ர். எனவே  அந்த  கட்சியால் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்த முடியாது.
 
திருச்சி வந்த மத்திய மந்திரி ஜி.கே. வாசன் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின்  நிலைப்பாட்டுக்கு பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது தி.மு.க. இந்த தேர்தலின் இருந்து விலகி கொண்டது. ஏற்கனவே இந்த தொகுதியில் 1967, 71, 77, 80, 84, 91 என 6 தேர்தல்க� �ில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது.
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.  ஆனால்  கட்சி தலைமை  அறிவிக்கும் முடிவை   எதிர்பார்த்து காத்திருக்கிறோம்   என்று மாவட்ட  நிர்வாகி  ஒருவ ர் தெரிவித்தார்.




comments | | Read More...

தேசிய விருதுகள் வழங்கும் விழா: ’சிறந்த நடிகை’ விருது பெற்றார் வித்யாபாலன்




59-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கின� �ர். விழாவில் வங்காள சினிமா பிரபலம் சௌமித்ரா சாட்டர்ஜிக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது 'தியோல்', 'பையாரி' ஆகிய இரண்டு மராத்திய படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைக ் கூறும் இப்படத்தில் வித்யாபாலன் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். விருது விழாவில் வித்யாபாலன் தனது பெற்றோருடன் கலந்துகொண்டு விருது வாங்கினார்.

'தியோல்' படத்தை இயக்கி, அதில் நாயகனாக நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகர், சிறந்த வசன எழு� ��்தாளர் ஆகிய விருதுகளைப் பெற்றார்.  குர்விந்தர் சிங் இயக்கிய பஞ்சாபி மொழிப் படமான 'அன்கி கோரே ட டான்' படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான 'தங்கத்தாமரை' விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த பஞ்சாபி மொழிப் படம் ஆகியவற்றுக்கான விருதுகளும் 'அன்கி கோரே ட டான்' படத்துக்கு வழங்கப்பட்டது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger