News Update :
Powered by Blogger.

"என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!'' - அஜீத்

Penulis : karthik on Thursday, 26 April 2012 | 06:22

Thursday, 26 April 2012




என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட ம� ��மில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முட ிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனல� �� கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் � �ெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வ யசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும ் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.< o:p>

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



comments | | Read More...

சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்




சசிகலா கணவர் நடராஜன் மீது தாம் கொடுத்த புகாரை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எம். நடராஜன், அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது கடந்த மாதம் தஞ்சாவூர் அன்பு நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ரங்கராஜன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தவறுதலாக வழக்கு தொடர்ந்து விட்டேன் என்று கூறியுள்லார்.

மேலும் அந்த வழக்கில் குறிப்பிட்டபடி நிலஅபகரிப்பு ஏதும் நடக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுவாமிநாதன் விலைக்கு வாங்கி முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் தெ ரிந்த கொண்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் அதில் ரங்கராஜன்குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நடராஜன் மீதான வழக்குகளில் ஒன்று குறைந்திருக்கிறது.



comments | | Read More...

அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாராட்டு!




பில்லா 2 பட� ��்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர்.

வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது.

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிரு� �்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார்.

ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...!



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger