News Update :
Powered by Blogger.

தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்

Penulis : karthik on Wednesday, 25 April 2012 | 03:39

Wednesday, 25 April 2012




புற்றுநோயால் பாதிக்கப் பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ள யுவராஜ்சிங் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
தெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்க அவரது பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது.
 
சர்வதேச போட்டியில் 100 � �தம் அடிப்பது சாதாரணமானது இல்லை. இந்த சாதனையை படைத்த தெண்டுல்கருக்கு அடுத்த இலக்கும் இருக்கிறது. 100 டெஸ்டில் விளையாடுவதே சிறப்பானது. அவர் 200 டெஸ்ட் விளையாடுவதை அடுத்த இலக்காக கொண்டுள்ளார். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார். 



comments | | Read More...

'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி




மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தும்பிவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மண்ணின் மைந்தரும், சென்னை மேயருமான
சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசியதாவது,

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும். அதற்கு முதலில் குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால் மதிப்பு குறையும், சிந்தனைகள் சிதறும், நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இதனால் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியாது. எனவே தான் குடிப்பழக்தை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.

இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிளுக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்யப்படும் என்றார்.



comments | | Read More...

ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??

Penulis : karthik on Tuesday, 24 April 2012 | 23:02

Tuesday, 24 April 2012




இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசு நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு 13-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாகாண அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன் காவல்துறை, நிலம் போன்றவை தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகள் மறுத்தன. நிலம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கூறினர். இலங்கையைப் பொருத்தவரை 80 சதவீத நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. மீதியுள்ள 20 ச� ��வீத நிலம் தனியாருக்குச் சொந்தமானது. மாகாண அரசுகளுக்கு நிலங்கள் மீது எந்த வகையான உரிமையும் கிடையாது.

இந்த சட்டத் திருத்தத்தை இதுவரை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத்தான் இந்தியா அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஐலண்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்ச ித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்படியொரு உறுதிமொழி கோரப்படவுமில்லை, தரப்படவுமில்லை என்று இலங்கையின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் ராஜபக்சே கூறியிருக்கிறாராம். இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது அவர் கூறுகையில், 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே மீது இந்தியா திணித்தது என்று கூறிய அ� �ர் அதை எப்படி செய்தது இந்தியா என்றும் விளக்கியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராஜபக்சே.

கடந்த மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 13-வது திருத்தம் குறித்து உறுதி தரும்படி இலங்கைக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியைப் பார்க்கும்போது 13வது சட்டத் திருத்தம் குறித்து இந்திய எம்.பிக்கள் குழு ஆணித்தரமாக எதையும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.


பேசாத ஒரு விசயத்தையே பேசினதா சொல்றாங்கனா வாங்கின பார்சலுகுள்ள எவ்ளோ ...இருந்திருக்கும்னு நல்லாவே யூகிக்க முடியுதுங்கோ...



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger