News Update :
Powered by Blogger.

இலங்கை தமிழர்கள் பற்றி கம்யூனிஸ்டு எம்.பி. ரங்கராஜன் கூறியது வடிகட்டிய பொய்: சீமான் கண்டனம்

Penulis : karthik on Monday, 23 April 2012 | 06:45

Monday, 23 April 2012




நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தமிழ் ஈழத்துக்காக சாத் வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வ� �்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 

தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப்போராக சிங்கள இனவெறி அர� �ு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் 1 1/2 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்ற குழுவினர், அவர்களின் துயரத்தை போக ்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப்பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப்பற்றி பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும். 

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் சகஜ நிலை திரும்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூற வில்ல� ��யே? 

இலங்கை தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய் விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும். 

தமிழர்கள் அரசியல் தீர் வைத்தான் விரும்புகிறார்கள். விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது. 

நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற சுஷ்மாசுவராஜ் மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டு தனியாக சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுப்படுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை. 

இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுன்ற குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறாததும் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உ� �ுப்பினர்கள் இலங்கை பிரச்சினை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது. 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.





































comments | | Read More...

இப்போதைக்கு நோ பாலிடிக்ஸ்... ஆனா ரசிகர் மன்றம் உண்டு! - உதயநிதி




இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் உண்டு, என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.

மதுரையில் தனது ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஓடும் தியேட்டர்களில் விசிட் அடித்த உதயநிதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மதுரையில் திமுக உள்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் இந்த சூழலில், அவரிடம் அரசியல் குறித்தே அதிக கேள்விகளை எழுப்பினர் நிருபர்கள்.

பொறுமையாக அனைத்துக் கேள்விகளையும் கேட்டுக் கொண்ட உதயநிதி, பதில் அளிக்கையில், "என் குடும்பமும் அரசியலும் வேறல்ல. அதனால் இப்படிக் கேட்கிறீர்கள். ஆனால் எனக்கு இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. என்னிடம் சினிமா பற்றி மட்டுமே கேளுங்கள். அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். என் தாத்தா (மு.கருணாநிதி), அப்பா (மு.க.ஸ்டாலின்) ஆகியோர் கட்சியில் இருப்பதா லும், அப்பா இளைஞரணி பொறுப்பில் இருப்பதாலும் நானும் கட்சியின் இளைஞரணிக்கு முக்கியப் பதவிக்கு வருவேன் என்று பத்திரிகைகள்தான் எழுதுகின்றன. ஆனால், கட்சியில் உழைத்தவர்கள் நிறையப் பேர் உள்� ��னர். அவர்களுக்கு பொறுப்புகள் தரப்படவேண்டும்," என்றார்.

பின்னர் அவர் கூறுகையில், "இன்னும் 5 ஆண்டுகளுக்கு சினிமா தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவேன். பின்னால் நடப்பதைப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. பொருத்தமான கதைக ள் வந்தால்தான் நடிப்பேன்.

அடுத்து சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில்தான் நடிக்க இருக்கிறேன். நடிகர் சந்தானத்துடன் கூட்டணி தொடரும். அவருடன் காமெடி கலந்த கேரக்டரில் நடிக்கவே விருப்பம். எனக்கு அதற்கு ஏற்ற திரைக்கதைதான் சரியாக வரும்.

இங்கே மதுரையில் என் பெயரைப் போட்டு ரசிகர் மன்றம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இளம்புயல் என்று வேறு போட்டிருந்தார்கள். அது ஜெயம்ரவிக்கு உரிய டைட்டில். ஆனால், இதுவரை என் பெயரில் ரசிகர் மன்றம் என்று யாருக்கும் நான் அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால், அடுத்த படத்தில் அல்லது அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் குறித்து அறிவிப்பேன்," என்றார்.



comments | | Read More...

பில்லா 2 வெளியீட்டு உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

Penulis : karthik on Sunday, 22 April 2012 | 23:07

Sunday, 22 April 2012




அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்த ிரன்.

படத்தின் தயாரிப்பாளர் சுனீர் கேடர்பால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கேரளா தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதி வெளியீட்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன என்றார் சுனீர்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, தமிழக உரிமைக்கு மட்டும் ரூ 24.11 கோடியும், புதுவைக்கு ரூ 2 கோடியும் சேர்த்து, ரூ 26.11 கோடிக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் பிற மாநில உரிமைகள் அனைத்தும் சேர்த்து பெரும் தொகையை இந்தப் படம் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் மே மாதத்திலிருந்து படத்துக்கான விளம்பர வேலைகளைத் தொடங்குவதாக படத்தைத் தயாரிக்கும் இன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger