News Update :
Powered by Blogger.

கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன்புமணி

Penulis : karthik on Monday, 26 March 2012 | 11:58

Monday, 26 March 2012

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:
 
தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .
 
விஷன் 2023/
 
தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.
 
கேப்டனா?
 
தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.
 
கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.
 
பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.



comments | | Read More...

நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்

 
 
 
நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை செல்லும் சாலையில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஆள் இல்லாத நேரங்களில் சில இளம் ஜோடிகள் அத்துமீறி நுழைவதாகவும், அவர்கள் ஆபாச சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
 
இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தோட்டங்கள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு ஆண்களும், பெண்களும் வேலைக்குச் சென்றனர். அப்போது தோப்பில் உள்ள ஒரு மரத்தில் பேண்ட் சட்டையும், சுடிதாரும் தொங்கியது.
 
இதைப்பார்த்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நேராக ஊருக்குள் சென்று மக்களை திரட்டி வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
 
அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.
 
அப்போது பிடிபட்ட 4 பேரும் ''நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம், இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டோம்'' என கண்ணீர் விட்டனர். மேலும் போலீஸ் நிலையம் சென்றால் தங்கள் படிப்பு பாழாகி விடும் என கூறி கதறி அழுதனர். கடைசியில் அவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



comments | | Read More...

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

 
 
 
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
 
மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
 
இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
 
அதேபோல 60 கிலோ எடைப் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி, தஜிகிஸ்தானின் கோரிவா மவ்சூனா ஆகியோர் மோதினர். இதில் சரிதா தேவி 16-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
 
ஆனால் இந்திய வீராங்கனைகளான பிங்கி ஜங்ரா(48 கிலோ) சோனியா லதர்(54 கிலோ), மோனிகா சான்(69 கிலோ), பூஜா ராணி(75 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி, வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger