News Update :
Powered by Blogger.

அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: சு.சாமி'!

Penulis : karthik on Thursday, 9 February 2012 | 02:37

Thursday, 9 February 2012

 
 
 
கர்நாடக அமைச்சர்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பரபரப்பே அடங்காத நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக அவர் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து சாமி இன்று காலை 8.58 மணியளவில் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் பாஜகவை குறை கூறும் சிபல் போன்ற காங்கிரஸார் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக பி.சி. மாதம் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (Swamy39: "Those Congis like Sibal who paint BJP with porn should ask how much PC pays per month for Uzbekis").
அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ப. சிதம்பரத்தை பி.சி. என்று அழைப்பதுண்டு.
 
குற்றச்சாட்டு என்ற பெயரில் சாமி எழுதியுள்ள இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
\


comments | | Read More...

சென்னையில் பயங்கரம்: வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை- 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்

 
 
 
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 42). இவர் பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் இந்திப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது 9-ம் வகுப்பில் படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்பறையில் புகுந்தார்.
 
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை நோக்கி ஆவேசத்துடன் ஓடினான். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உமா மகேஸ்வரி அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். ஆனால் வெறி பிடித்தவன்போல் துரத்தியபடி முகமது இர்பான் விரட்டினான்.
 
வகுப்பறை வாசலிலேயே ஆசிரியை உமா மகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை உமா மகேஸ்வரி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
 
அதைப்பார்த்ததும் வகுப்பறைகளில் இருந்த மற்ற மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவன் இர்பான் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவர்கள் அவனை மடக்கிப் பிடித்தனர். பள்ளி வளாகத்திலேயே மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவன் இர்பானை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மாணவன் இர்பான் ஒழுங்காக படிப்பதில்லை.அவனது படிப்பு குறித்த பதிவேட்டிலும் சரியாக படிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி இர்பானை கண்டித்தார். இதனால் இர்பான் ஆசிரியை மீது கடும் கோபத்தில் இருந்தான். அவரை பழி வாங்க திட்டமிட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
 
பலியான உமா மகேஸ்வரியின் உடலில் கழுத்து உள்பட 5 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.அவருக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

 


comments | | Read More...

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது: இயக்குனர் சீமான் ஆவேசம்

 

புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவியை மேலும் உயர்த்த வேண்டும். நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் தலைமை வகித்தார். வேலுச்சாமி வரவேற்றார். புதுவை நிர்வாகிகள் அன்பு தென்னரசன், லோகு அய்யப்பன், தந்தைபிரியன், அருமைதாசன், வத்சலா, கவுரி, ரமேஷ், கலைச்செல்வம், இளங்கோ, அய்யநாதன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் புயலினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு பாதிப்பு ஏற்பட்டது. கடலூரில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.500 கோடியை இடைக்கால நிவாரணமாக அறிவித்துள்ளது சரியான தல்ல. மத்திய அரசு மாநில அரசு கோரிய தொகையில் 50 சதவீதமாவது தந்தால் தான் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் புதுவையில் பார்வையிட்டார், கடலூருக்கு செல்ல வில்லை. மத்தியக்குழுவும் வந்து பார்வையிட்டு சென்றது. இவர்கள் என்ன சொன்னார்கள்? என தெரியவில்லை. கடமைக்கு வந்து பார்வையிட்டு சென்றதுபோல் உள்ளது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தனது கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகள் தருகிறது. வேறு கட்சிகள் ஆளும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படுவது தவறானது, கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger