News Update :
Powered by Blogger.

நண்பன்

Penulis : karthik on Monday, 30 January 2012 | 03:43

Monday, 30 January 2012

மஹாராஷ்டிரா சேட்டு ஃபிகரை, மைலாப்பூர் மாட்டுப் பெண்ணாக்கியிருக்கிறார்
ஷங்கர். அப்படியொரு கனக்கச்சிதமான ஃபிட்டிங்! ஜெயம்ராஜா போன்ற 'ரீமேக்
வைத்தியர்களுக்கு' மட்டுமே சாத்தியப்பட்ட இந்த கலையில் ஷங்கரும்
டாக்டரேட் வாங்கியிருக்கிறார் என்பதுதான்'நண்பன்' வட்டாரத்தின்
நற்செய்தி. ஒரிஜனலான த்ரி இடியட்ஸ்சை நம்மில் பலரும் பார்த்து
தொலைத்ததால் வந்த விளைவுதான் இந்த ஒப்பீடு. இல்லையென்றால் அதற்கும்
அவசியம் இல்லையே!
பத்தாம்ப்பு பாஸ் பண்ணுவதற்கு பாண்டிச்சேரி கல்வி மந்திரி என்னவெல்லாம்
பாடு பட்டு, எப்படியெல்லாம் கம்பி எண்ணினார் என்பதை படம் முடிந்துவெளியே
வரும்போது மீண்டும் நினைவு கூர வைக்கிறார் ஷங்கர். படமும் இக்கால கல்வி
முறை குறித்து நிறைய கேள்வி எழுப்புகிறது. (ஷங்கரின் ஊறுகாய், எந்த
காலத்தில் சப்பென்று இருந்ததாம்?)
நண்பன் விஜய்யை தேடி கல்லு£ரியின் பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த்,
சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக்
கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில்
இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார்
என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும்
தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான்
முடிவு.
ஒரு மரத்தையே பிடுங்கி அடிக்கும் மாஸ் ஹீரோக்கள், இதுபோன்ற யதார்த்த
படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய ஆச்சர்யம். அதிலும் பஞ்ச் டயலாக்
இல்லாத விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. கதை மேலிருக்கும்
இவரது நம்பிக்கைக்கு முதல் சபாஷ். இந்த படத்திற்கு பிறகு விஜய்யை
பிடிக்காதவர்களுக்கும்அவர் மீது ஒரு ஈர்ப்பு வரும்.
'மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்கிற பார்வையோடு ஜீவாவை பார்க்க
வருகிற ரசிகர்களுக்கு அதிர்ச்சி நிச்சயம். டோட்டலாக
மாற்றியிருக்கிறார்கள் இவரை. ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு ஏறுமுகத்தை
தரப்போகிற படமாக கருதலாம். ஷங்கர் கொடுத்த இந்த வாய்ப்பை தவற விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறார் அவரும்.
முரட்டு வாத்தியாராக வருகிற சத்யராஜ் மாணவர்களை படுத்துகிற சம்பவங்களும்,
போடுகிற தில்லாலங்கடி ரூட்டுகளும் அதிர்ச்சி ரகம். இதற்குப்பின் இதுபோன்ற
பல நு£று வாத்தியார்களை 'நண்பன்' திருத்தினாலும் ஆச்சர்யமில்லை.
நடிகைகளை பிடித்தாட்டும் 'ஒல்லிமேனியா' இலியானாவையும் விட்டு
வைக்கவில்லை. ஐயோ பாவம் விஜய். டூயட் காட்சிகளில் இலியானாவின் எலும்பு
இவரை குத்தாமல் விட்டிருக்காது.
நண்பனின் ஆகப்பெரிய பலம் மதன் கார்க்கியின் வசனங்களே. 'ஏ.ஆர்.ரகுமானோட
அப்பா அவரை கிரிக்கெட் கத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தி,... டென்டுல்கரோட
அப்பா அவரை மியூசிக் டைரக்டரா ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன
ஆகியிருக்கும்...?' இதுபோல படம் நெடுக கொட்டிக் கிடக்கின்றன வைரஊசிகள்.
பட்டத்து யானையை பர்மா பஜாரில் திரியவிட்ட கதையாக அவ்வப்போது சில
படங்களில் மாட்டிக் கொள்ளும் ஹாரிசுக்கு, இந்த படம் அரண்மனை பூந்தோட்டம்.
பின்னணி இசைதான் யானை புகுந்த வாழைக் கொல்லையாகியிருக்கிறது.
படம் முழுக்க ஜட்டியை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள், யாராவது,
யாரிடமாவது! பேசாமல் 'டேன்டக்ஸ்' கம்பெனியிடம் பிராண்டிங்
வாங்கியிருந்தால், பட்ஜெட்டில் பாதியை ரிலீசுக்கு முன்பே
கைப்பற்றியிருக்கலாம்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நம்மையும் திரைக்குள் இழுத்துக் கொள்கிறது.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய 'குக்'கெல்லாம் சேர்ந்து சமைத்த இனிப்பு.
ருசிக்காமல் இருக்குமா? நண்பன்- மனசுக்கு பக்கத்தில்!
comments | | Read More...

இதெல்லாம் ஒரு பொழப்பு - கிரிகெட் ஜோக்..!

"என்னப்பா ராகுல் டிராவிட் அங்கேயிருந்து மறுபடியும் PAD கேக்கறார்,
அதான் கட்டிட்டு போனாரே?
அவர் ஒருவேளை ஸ்டம்ப்களுக்கு கேக்கறாரோ என்னவோ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"யாரும் ஓய்வு பெற வேண்டியத் தேவையில்லை - சேவாக்"
என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு யாரும் ரிட்டையர் ஆக வேண்டாம்னுசொல்றாரு?
அவங்கள்லாம் ஏதாவதொரு கம்பெனில வேல பாத்திட்டுருப்பாங்கள்ல அதுலேர்ந்து
ரிட்டையர் ஆயிட வேண்டாம்னு சொல்லியிருப்பார் போல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"நாங்களும் இந்தியாவில் 2- 0 என்று வெற்றி பெற்றோம்- சேவாக்"
"அவர் தூக்கத்துல பொலம்பினத அப்படியே போட்டிருக்காங்க! இப்பல்லாம் மீடியா
ரொம்ப முன்னேறிடுச்சு சேவாக் தூங்கும் போது கூட மைக்கை வாய் கிட்ட
வைக்கிறாங்க!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" இந்திய மூத்த வீரர்கள் மீண்டும் எழுச்சியுறுவார்கள் - மைக்கேல் கிளார்க் "
என்ன கொழுப்பு பார்த்தியா இவருக்கு! அடுத்த தடவை இந்தியாவுக்கும் வந்து
நம்மள உதை கொடுக்க இப்பவே திட்டம் போடறாரு போல"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நிருபர்கள்: என்ன ஸ்ரீகாந்த் சார் 8 மேட்ச் உதை வாங்கியிருக்கோமே உங்களோட
கருத்து என்ன?
ஸ்ரீகாந்த்: ஒண்ணும் பெரிசா நடந்துடல! உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் தேவை.
அவங்க நல்ல விளையாடினாங்க நாம அத ஒத்துக்கணும்! எப்பவுமே நம்ம பசங்க
வெளிநாடுன்னா ஊத்திக்குவாங்க! அதனாலதான் அடுத்த 2 வருஷத்துக்கு ஃபாரின்
டூரே இல்லைன்னு ஐ.சி.சி. சொல்லிடுச்சு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
comments | | Read More...

நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் டாக்டர் சச்சின் தேஷ்முக். அதே
பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி ஸ்வப்னா
(வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர்கள் இருவரும் பீட்டில் உள்ளதனியார் லாட்ஜ் ஒன்றில் இரவில் தங்கி
உல்லாசமாக இருந்தனர்.
போலீஸ் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் இருவரும் கைது ஆனார்கள்.
இதற்கிடையே செக்ஸ் ஊழலில் சிக்கியுள்ள டாக்டர் சச்சினை டிஸ்மிஸ் செய்து
விட்டதாக மாவட்ட சிவில் மருத்துவ அதிகாரிடாக்டர் கவுரி ரத்தோட்
அறிவித்தார். மேலும் அந்த நர்சிங் மாணவியும் கல்லூரியில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger