News Update :
Powered by Blogger.

வண்டியை தடவினாள் - வாந்திக்கு முன் கலைச்சிடச் சொன்னேன் நான்!

Penulis : karthik on Tuesday, 24 January 2012 | 02:42

Tuesday, 24 January 2012


கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப் பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். 
மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்கும், பேர் அண்ட் லவ்லி கை கொடுக்கிறதே என நினைத்து மனதினுள் சிரித்துக் கொண்டேன்.
ப்ரியங்கனி! ஒரு முறைக்கு இரு தரம் உதடுகள் உச்சரிக்கத் துடிக்கும் ப்ரியம் நிறை பெயர் அது. மேலுதடும் கீழுதடும் ஒட்டி, அவள் இதழ்கள் நாவின் செல்லக் கடியிலிருந்து விலகிச் செல்லத் துடிப்பது போன்று அவள் பெயரும் இருக்கிறதே என நினைக்கையில் எனக்குள் இனம் புரியாத ஓர் புன்முறுவல் வந்து போகிறது. அவள் பெற்றோர்கள் சயன்டிபிக்கலாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ என நினைத்து; விடை காணும் பொருட்டு பல முறை என் மூளையை குடைந்து குடைந்து யோசித்திருக்கிறேன்.ப்ரியம் நிறைந்தவளாகவும், கனி (Honey) போல இனிப்பாகவும் அவள் இருப்பதனால் தான் ப்ரியங்கனி எனப் பெயர் வந்ததோ! என என் நெஞ்சம் சில வேளை எண்ணும். அவள் கனி தான் என்பதில் ஐயமில்லை என்பதனால் அவளை கனிவாய் ரசித்துக் குடிக்க மனமோ ஆவல் கொள்ளும்.எனக்கும் அவளுக்குமான இடை வெளி பெயரளவிலும் இல்லை என்பதனால் பேரழகி எனக்குப் பொருத்தமானவள் தான் என நினைத்துப் பார்ப்பேன். எனை மறந்து சிரிப்பேன். பகல் கனவில் மிதப்பேன்!
அப்போதெல்லாம் வயிற்றிலிருந்து ஏதோ ஓர் அமிலம் சுரந்து மெதுவாய் மெதுவாய் மேல் நோக்கி வந்து என் மூளையினை அசைத்துச் செல்லும். 

முதன் முதலில் அறிவியல் நகரில் அவளைப் பார்த்தேன். என்னைத் தொலைத்தேன். என்னை தொலைத்தேனா என்று தேடித் தெளிய முன்னர் என் எண்ணத்தையும் அவள் மேல் தொலைத்தேன். சிந்தையில் அவளின் சின்ன முகம் வந்து காதல் மொந்தையை கூட்டிச் செல்கிறது. மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல் அவளைப் பற்றிய நினைப்பால் என் மனமோ விந்தையாய் சுழல்கிறது என எண்ணியவாறு, கன்னியை நினைத்து என் சைக்கிளின் பெடலை இறுக்கி மிதித்தேன். இலகுவாய் உழக்கிச் சைக்கிளை செலுத்தலாம் என எண்ணினாலும், அவள் என் சைக்கிள் கரியரில் இருப்பது போன்ற நினைப்பில் டபுள்ஸ் ஏத்தியவாறு நானும் பறந்தேன். "நல்ல வேளை இப்பவே ஐயாவிற்கு றிபிள்ஸிற்கு ஆசை வரவில்லை!" என அவள் என் பின்னே இருந்து செல்லக் கடி கடிப்பது போல உணர்ந்தேன். எங்கள் முதற் சந்திப்பு, எதேச்சையாக இடம் பெற்றாலும், என் இச்சையோ அவள் மீது தான் குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி குவிந்திருந்தது.

மரியதாஸ் மாஸ்டரின் வகுப்பு முடித்து கிளிநொச்சி அறிவியல் நகரில் அவள். நானோ வெட்டியாய் சைக்கிளில் கன்னியர் மனதை கொத்திச் செல்லலாம் எனும் நினைப்பில் வீதியில். கடைக் கண்ணால் அவளைப் பார்த்தேன். காலடி ஒன்றை எடுத்து வைத்தவள் இடக் கண்ணால் எ(ன்)னைப் பார்த்தாள். நிலை கொள்ளா என் மனமோ அவள் பின்னே செல்லத் தொடங்கியது. 
"விலை கொடுத்தும் வாங்க முடியாத 
விண்ணகத் தேவதையாய் 
அவள் எனக்கு தோன்றியதால்;
மனமோ அவள் பின்னே சென்றால், 
பெற்றோர் உறவினர் என்னை கண்டால்; 
தரும அடி கிடைக்கும் பின்னால்!"  எனும் எண்ணத்தினை விட்டு, அவளைப் பற்றி அறிந்தே தீருவது எனும் ஏக்கத்தில் அலையத் தொடங்கியது. பேரைக் கேட்டேன். பேசாமல் சென்றாள். மீண்டும் ஹலோ என்று அழைத்தேன். மூக்கை சுழித்து, நாக்கை கடித்து என்னை முறைத்துப் பார்த்தாள். ஆனாலும் அப்போது அழகாய் தெரிந்தாள். இப்படிப் பல நாள் சென்று இரண்டு மாத இடை விடாத முயற்சியின் பின்னர் தான் என் ப்ரியங்கனியின் பெயரைப் ப்ரியமாய் அறிந்து கொண்டேன்.
இன்றோ, ஒரு நிமிசம் அவளைப் பார்க்கும் வழியில் தாமதித்தாலும் பொய்க் கோபம் கொள்கிறாள். கற்பனையில் மனம் பறக்க, கண்களிலே அவள் உருவம் வந்து நடனமிட, கற்பகமாய் எனக்குள் காதல் தேனூற்றும் கனியினைக் காணச் சென்றேன். அவளோ வழக்கம் போல வன்னேரிக் குளத்தின் பின் புறமாய் காத்திருந்தாள்.அக்கம் பக்கம் யாராச்சும் அன்னத்தினைக் காணச் செல்லும் அரிய செயலினைக் கண்காணிக்கிறார்களா என உற்றுப் பார்த்தேன். சற்றுத் தெளிந்தேன். மெதுவாய் குளக்கட்டிற்கு அருகே சைக்கிளை நிறுத்தினேன். அவள் அருகே சென்றேன். சீறினாள்! சினந்தாள்!பொங்கியெழுந்து பெரும் அலையாய் எனைச் சாய்க்காத குறையாக வண்டியைத் தடவினாள். "கனியன், நான் கர்ப்பமாய் இருக்கிறேன்" என்றாள். எனக்கோ நம்ப முடியவில்லை என்பதால், காரணம் நான் இல்லை என்றேன். நமக்குள்ளும் இதுவரை ஏதும் இல்லையே என நடந்தை மறந்ததாய் நடித்தேன். "அப்படீன்னா என் கற்பில் களங்கம் உண்டென சந்தேகம் வந்திட்டுதா ஐயாவிற்கு?" என்று நக்கலும், விக்கலும் கலந்த தொனியில் கேட்டாள். "இல்லை ; ஒரு பேச்சிற்கு சொன்னேன் என்றேன்."

பொருமினாள்! விம்மி அழாத குறையாக; "உன் ஆண் புத்தியை காட்டி விட்டாய் என வீ(ரி)றிட்டாள். "இல்லை! பொறுமையாக இரு என்றேன்!" "முடியாது எனச் சொல்லி, இப்பவே வீட்டிற்கு விசயம் தெரிய முன் பெருமையாக வந்து பொண்ணு கேள்" என்றாள். மாட்டேன் என்றேன். "மரணாயே, மாட்டேன் என்பதற்கான காரணம் என்ன என்றாள்?" இன்னமும் வயசாகலை என்றேன். 
"ஓகோ...ஒரு பூ...உனது புயலை அடி வயிற்றிச் சுமக்கிறதே! நீயோ புத்தி தெளிவின்றி பகிடி செய்கிறாயா?" என்றாள். மீண்டும் வண்டியைத் தடவினாள். நானோ மீண்டும் சில நிமிடங்கள் மௌனமாய் இருந்து விட்டு "வாந்திக்கு முன் கலைத்திடு" என்றேன். வைத்த கண் வாங்காது என்னைப் பார்த்தாள். "நீயும் உன் காதலும்" என அக்கினித் தீயாய் வார்த்தைகளை அனலாய் பொரி(ழி)ந்து தள்ளினாள். நானோ மேலும் பேச முடியாது நின்றேன். "கனி, என்னை மன்னிச்சிடு!" என்று கட்டி அணைக்கப் போனேன். "சனியன்" எனச் சொல்லி சற்றுத் தூரம் செல்லுமளவிற்கு தள்ளி விட்டாள். 

குளக்கட்டு மணல் புழுதியின் மேல் நான் விழுந்தும், விழி அசைக்காதவனாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ, ஆதரவாய் வந்து என்னை அணைத்து தூக்கினாள். நான் ஆச்சரியம் பொங்க அவளைப் பார்த்தேன். "எனக்கு வாந்தியும் இல்லை. வண்டியும் இல்லை. எல்லாம் உன்னை டெஸ்ட் செய்ய போட்ட நாடகம்" என்றாள். நான் சிரித்தேன். அவள் சிலாகித்து காரணம் கேட்டாள். நான் சொல்ல முடியாது செல்லம் பொங்கினேன். அப்போது சொன்னாள் ஓர் வார்த்தை! "கனியன் ஆம்பிளைங்க எப்பவுமே சேறு கண்ட இடத்தில மிதித்து தண்ணி கண்ட இடத்தில கால் கழுவிட்டு போற ஜாதி! என் காதலை நான் நேசித்தேன். ஆனால் கர்ப்பத்தை வைத்து நீ உன் கானல் நீர் குணத்தை காட்டிட்டாய்" என்றாள். ஆம்பிளையளின் அற்ப புத்தி பற்றி அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீசினாள். இனியும் அவ் இடத்தில் நின்றால் இடக்கு முடக்காகி விடும் என நினைத்து இலகுவாய் கழர வேண்டும் என முடிவெடுத்தேன். முறைத்துப் பார்த்து விட்டு, வாயை மூடும் எனச் சொல்லி விட்டு நான் அவ் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அப்போது எம் ஊரில் செல்போனும் இல்லை. காதல் மொழி அனுப்ப செல் சேதியும் இல்லை. ஆனால் சில் வண்டாய் அவள் குரல் மாத்திரம் என்னுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நினைப்பில் நாட்களை நகர்த்தினேன். நாட்கள் நகர்ந்தன. நானும் கால் போன திசையில் போர் எம் ஊரை நோக்கி வர நகரத் தொடங்கினேன்.ஒரு நாள் காலை ஈழநாதம் பேப்பரில அவள் போட்டோவினைப் பார்த்தேன். ஈழம் காணும் வேகத்துடன் அதே முகம்! ப்ரியங்கனியின் முகம் மாதுமையாக மலர்ந்திருந்தது.அதே புன்னகை நிறைந்த இதழ்கள். வரி உடுப்பு. தூக்கிக் கட்டிய பின்னல். கையில் ஓர் துப்பாக்கி! "என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பாளா?" என நினைக்கையில் விழியில் இருந்து ஓர் துளி நீர் பேப்பரில் விழுந்து அவள் நெற்றியில் தெறித்தது. அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

குறள்: 1203 - அதிகாரம்: நினைந்தவர் புலம்பல்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
பொருள் விளக்கம்: தும்மல் வருவது போலத் தோன்றும். ஆனால் சில நேரங்களில் வரமாலிருக்கும். அது போலத் தான் என் காதலனும் என்னை நினைப்பது போன்ற உணர்வுடன் வாழ்ந்து நினைக்காமலிருப்பாரோ?
comments | | Read More...

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?




பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா"ரணங்கள்".அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ"ரம்ப" காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியத்தையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல'க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது(அதனாலதான அணில்?),அப்பறம் 

அரசியல் ஆர்வம்,அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் 'தல'யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.  
comments | | Read More...

கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+


அபாய அறிவிப்பு / ஆபாச அறிவிப்பு: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. 
கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழாவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் இனிய வணக்கம், இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பல்சுவையாகவும், கொஞ்சம் ரொமான்டிக்காகவும், கொஞ்சம் காமெடியாகவும் உங்களை நாடி வரவிருக்கிறது கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா எனும் பதிவு."அண்ணன் செங்கோவி ஆரம்பித்து வைத்த ஹன்சிகா மன்றத்தினையும், பத்மினி ரசிகர் மனறத்தினையும் வாடகைக்கு எடுத்து தற்போது நான் நடாத்தும் நோக்கில் அவரது நானா யோசித்தேன் எனும் பல்சுவைப் பதிவினை அடியொற்றி கொஞ்சம் வித்தியாசமாக இப் பதிவினை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்." வாருங்கள் பதிவினுள் நுழைவோம். 

மகளை கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் மகிந்தரின் அமைச்சர்:

இலங்கை அரசியலும், நம்ம இந்திய அரசியலும் எப்போதுமே காமெடிகளுக்குப் பஞ்சமில்லாது அங்கு வாழும் நடிகர்கள் மூலமா ஐமீன் அரசியல்வாதிகள் மூலமா பார்வையாளர்களாக உள்ள மக்களுக்கு சிரிப்பிற்குப் பஞ்சமின்றி நகைச்சுவைகளை அள்ளித் தெளித்த வண்ணம் நகர்ந்திட்டு இருக்குதுங்க. அண்மையில் நம்ம சால்வை மாமாவின் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகளை முன்னாள் இராணுவத் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் வைத்து உணர்ச்சிவசப்பட்டு ரேப் பண்ணிட்டாருங்கோ. இந்த மேட்டர் ரேப் பண்ணுப்பட்ட பொண்ணோட அப்பன் கேகலிய ரம்புக்வெலவிற்கு தெரிந்ததும் பயங்கர அவமானத்திற்கு உள்ளாகிட்டார் அமைச்சர். மேட்டர் அமைச்சருக்கு தெரிந்ததோடு கொழும்பில் உள்ள ஏனைய அரசியல்வாதிகளுக்கும் பரவியதோடு, ஊடகங்கள் மூலமா அனைத்துலகிற்கும் பரவிட்டுது.

ஒழுங்கான அப்பனா இருந்தா தன்னோட பொண்ணோட மானம் பெரிது என்று நினைத்து ரேப் பண்ணினவனுக்கு பொண்ணை கட்டி வைச்சிருப்பாரு. இல்லேன்னா ரேப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுத்திருப்பாரு. ஆனால் எச்சில் இலைக்கு அலைகிற நாய் மாதிரி மகிந்த ராஜபக்ஸேவின் சொல்லைக் கேட்டு ரேப் பண்ணிய மைனர் குஞ்சை மன்னிச்சு விட்டிட்டிராம் இந்த மகராசன். அடப் பாவமே! ரேப் பண்ணினால் மன்னிப்பு கொடுத்து, உயர் பதவியும் கொடுக்கிறாங்க என்பதால் இனி பல மைனர் குஞ்சுங்க இலங்கை அரசியல்வாதிங்க வீடுகளை நோக்கிப் படையெடுத்தாலும் படையெடுப்பாங்க போலிருக்கே!

திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி தலைவராக 60 வயதுடைய ஸ்டாலின்: திமுக:

அண்மையில் இந்தியக் குடித்தொகை மதிப்பின் கணிப்பின் படி மொத்த சனத் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பின்னே என்னங்க?  50+ வயதுடைய ஸ்டாலின் ஐயாவே திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கும் போது மொத்த சனத்தொகையில் 85 வயதுடைய கலைஞர் ஐயா மாதிரி ஆட்களையும் உள்வாங்கினால் 50 வீதம் என்ன 60 வீதம் பேர் இளைஞர்கள் என்று மார்தட்டலாமில்லேங்க. 
படம் போடுறதென்றா போடுங்க- சத்தமில்லாம சீன் மட்டும் வர்ற படமா போடுங்க:

நம்ம பதிவர் ஐடியா Funny அவர்களுக்கு சின்ன வயசில இருந்து முழு நீலப் படம் பார்க்கிற ஆசை. பாழாய்ப் போன மணிக்கு யாரோ ஒருத்தன் அந்த மாதிரிப் படம் என்றால்...ச்ச்ச்ச்ச்..ஆ...உஸ்...ஆங்...அப்படி அனுங்கல் ஒலிச் சத்தம் வந்திட்டு இருக்கும் என்று சொல்லியிருக்கான். அத்தோடு சில வேளைகளில் இந்த மாதிரிப் படங்களை ஊரில வூட்டுல யாரும் இல்லாத டைம்மில பசங்க திருட்டுத் தனமாகப் பார்க்க ட்ரை பண்ணுவதால் ஊருக்கு பிட்டு படம் பார்க்கிற மேட்டர் தெரிஞ்சிடக் கூடாது என்பதற்காக சவுண்டை கம்மி பண்ணிட்டு இல்லேன்னா சவுண்டே இல்லாம படம் பார்த்து ரசிப்பாங்க யூத்துங்க. என்றும் கொசுறுத் தகவல் சொல்லியிருக்கான். ஊரில சாமத்திய வீடு, கலியாண வீடு என்றால் சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து தான் சினிமாப் படம் போட்டுப் பார்ப்பாங்க.

இப்படியான சந்தர்ப்பத்தில் கூட்டமா எல்லோரும் உட்கார்ந்திருந்து படம் பார்க்கிற டைம்மில; அடக் கறுமம்! நம்ம ஐடியா Funny என்ன பண்ணினாரு தெரியுமா? "அண்ணே படம் ஓட்டுறதென்றா ஓட்டுங்க. சத்தமில்லாத படமா ஓட்டுங்க அப்படி உணர்ச்சி வசபப்ட்டு கத்தியிருக்காரு. அப்புறம் என்ன? கூட்டமா எல்லோரும் சேர்ந்து கும்மிட்டாங்க. 

இனியும் பொறுக்க முடியாது - நயன்தாரா காட்டம்!

நம்ம நயனாம்பிகைக்கும், பிரபுதேவா சாருக்கும் 2009ம் ஆண்டில இருந்து லவ்வு பத்திக்கிச்சுங்க. பாழாய்ப் போன பிரபுதேவா ஒரே கல்லில ரண்டு மாங்காய் அடிச்சுப் பார்க்க ஆசைப்படுறாரு என்று யாரோ வதந்தியை கிளப்பியிருக்காங்க. அது எப்படீன்னா மனைவியையும் பிள்ளைகங்களையும் மறக்க முடியாம அடிக்கடி காதலி நயனாம்பிகைக்கு தெரியாம திருட்டுத் தனமாக மனைவி ரமலத்தினைச் சந்திட்டு வர்றாராம் என்று தீயை பத்த வைக்க, நயனின் மனது கோபத்தில் அனலாய் கொதிக்க ஒரே ரணகளமாய் ரெண்டு பேரும் அடிக்கடி மோதிக்கிறாங்க. இதனால சீக்கிரமே திருமணம் நடக்கனும் என ஒத்தக் காலில் நயனாம்பிகை நிற்க பிரபுதேவாவோ இழுத்தடித்துக் கொண்டிருக்காராம்.
பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!

வெள்ளி பார்த்த கேப்டனால் ஓலமிடும் இத்தாலி:

அண்மையில் 4000 பேரைக் ஏற்றிக் கொண்டு சென்ற இத்தாலியக் கப்பலான "கொர்டா கொன்கோஸிடினா" கப்பல் கப்டனின் கவனக் குறைவால் பனிபாறையுடன் மோதி விபத்திற்குள்ளாகிய. இந்த நேரத்தில கப்பல் கப்டன் செஞ்ச ரொம்ப புத்திசாலித்தனமான வேலை என்னா தெரியுமா? பாறையுடன் மோதி தாண்டு கொண்டிருக்கிற கப்பலில் இருந்து 100 பேர் வெளியேற முன்னாடியே தான் எஸ்கேப் ஆகி மக்களோடு மக்களா ஓடிட்டாரு. அப்புறம் விடுவாங்களா போலீஸ்காரங்க. வளைச்சுப் புடிச்சு ஆளை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க.

பதிவர்களையும், தமிழகத்தையும் ஏமாற்றும் ஹன்சிகா:

குட்டிக் குஷ்பூ, சின்ன நமீதா என தமிழக சினிப் பிரியர்களால் வர்ணிக்கப்படும் நம்ம ஹன்சிகா அம்மணியின் கொளு கொளு கோதுமை மா தேகத்தை அண்மைக்கால சினிமாவில் தரிசிக்க முடியலையே என்று தம் கையெடுத்துக் கும்பிடாக் குறையா கையினை நொந்து கொள்கிறார்களாம் பதிவர்கள் பலர். என்னா கொடுமைன்னா. அம்மணியை நம்மாளுங்க ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னா , ஐ மீன் தமிழ் சினிமா பீல்ட்டில அம்மணிக்கு நல்ல வாய்ப்புக்கள் இல்லைன்னா தமிழை மறந்திட்டு அம்மணி எஸ் ஆகிட வாய்ப்புக்கள் அதிகம் எனப் புலம்பிக்கிறாங்க பதிவர்களும், சினிமா ரசிகர்களும். இதனால ஹன்சிகாவிற்கு கோயில் கட்டுவதற்கு ஒரு சாராரும், இன்னும் சில பதிவர்கள் ஹன்சிகாவின் எதிர்காலம் தமிழகத்தோடு நிலைக்கனும் என்பதற்காக தேங்காய் உடைத்து அங்கப் பிரதிஷ்ட்டை செய்யும் நோக்கிலும் தயாராகிட்டாங்களாம்! 
வாழ்க ஹன்சி புகழ்! 
அடப் போங்கப்பா! ஹன்சிகா போனா என்ன அவங்க போன கையோட நமக்கு இன்னொரு ஹம்சிகா கிடைக்காமலா போவாங்க?
பதிவர் முரண்:

பொன்னான பதிவெழுதி பொல்லாத கமெண்டு போட்டு 
கண்ணாலே ஜாடை காட்டினாலும் கண்டுக்காதோர் - கண்டுக்காதோர் தான்!

பதிவர் ஜோதிடம்:

இந்த வாரம் பதிவர் ராசிக்காரருக்கு ரொம்ப மந்தமான வாரம். இதற்கான காரணங்களாக அரசியலில் சூடான திருப்பங்கள் நிகழவில்லை. சினிமாவில் பொங்கல் ரிலீஸின் பின்னர் புதிய வெளியீடுகள் வரவில்லை. இதனால் எல்லாப் பதிவர் ராசிக்காரர்களும் தமது மூளையைக் குடைந்து மூலக் கருத்துக்களை உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பரிகாரத்தினை நிவர்த்தி செய்ய விரும்புவோர் பதிவர் பகவானுக்கு வேண்டுதல் வைத்து அரசியலில் ஏதாவது அதிரடி நிகழ வேண்டும் என 1008 மந்திரம் சொல்லுவதே சிறந்த பலனைத் தரும். இல்லையேல் திமுக, அதிமுக அலுவலங்களில் வன்முறையினைத் தூண்டுவதும் நன்மையினை கொடுக்கலாம்.

பதிவர் பலிபாடல்:

இடுப்பைக் காட்டுவாள் - மனதை ஆட்டுவாள் என இலியானா படம் பார்க்க
தியேட்டருக்கு போனேன் - அவளோ மறைவாய் காட்டி எந்தன் கடுப்பை கூட்டினாள் - காசுக்கும் வேட்டு வைத்தாள் - இனி என் செய்வேன் நானோ?

கு(சு)றும்பும், குழப்பமும்:

அன்பு உறவுகளே; எல்லோரும் பதிவினைப் படிச்சீங்களா? பதிவு எப்படி இருக்கு? பதிவில் உள்ள குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டலாம் அல்லவா? முதற் பதிவில் சிறு சிறு தவறுகள் இருக்கும். ஆகவே எல்லோரும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் தான் அடுத்த பதிவினைக் கொஞ்சம் மெருகேற்ற முடியும் நண்பர்களே.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger