News Update :
Powered by Blogger.

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை

Penulis : karthik on Friday, 20 January 2012 | 06:04

Friday, 20 January 2012

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை
விதித்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட
வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டிடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த வக்கீல்
வீரமணி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். அதில் , மத்திய
சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் மருத்துவமனையாக
மாற்ற முடியாது. ஆனால் இதற்கான கட்டிடப்பணிகளை அரசு மேற் கொண்டுள்ளது.
மருத்துவ மனையாக மற்றும் பணிக்கான டெண்டர் அறிவிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன. எனவே மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்கவேண்டும்
என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முருகேசன் , ஜனார்த்தன ராஜா ஆகியோர்
முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது , மருத்துவமனையாக மாற்ற
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா ?
கட்டிடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா ? டெண்டர் அறிவிப்பு
தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா ? என கேள்விகள் எழுப்பினர். இதற்கு
இன்று பதில் அளிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்
ஆஜராகி கூறியதாவது:-
இந்த கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா
சான்று பெறப்பட்டுள்ளது. கட்டிடத்தை மாற்ற தடையில்லா சான்றிதழ் பெற அவசிய
மில்லை. மருத்துவமனையாக மாற்றும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.
அதற்கான கடைசி நாள் வருகிற 24-ந்தேதி ஆகும். கட்டிடத்தை இடிக்கும் பணிகள்
நடை பெறவில்லை. இது அரசின் கொள்கை முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் , புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்
கால தடை விதித்தனர். நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
அரசின் கொள்கை முடிவில் நாங்கள் (கோர்ட்டு) தலையிடவில்லை. டெண்டர்
அறிவிப்புகளையும் தடை செய்யவில்லை. கட்டிடத்தை மாற்றி அமைக்கும்போது
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் தேவையா ? வேண்டாமா ?
என்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம். கட்டிடத்தை மாற்றுவதற்கு
தடையில்லா சான்றுவாங்கும் வரை புதிய தலைமை செயலககட்டிடத்தை மாற்றம்
செய்யவோ , இடிக்கவோ கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
comments | | Read More...

விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!

விஷாலின் நெடுநாள் கனவான த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற
அவரது ஆசை இப்போது சமரன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. திரு இயக்கும்
இப்படத்தில் விஷால் , த்ரிஷா ஆகியோருடன் சுனேனாவும் நடித்து வருகிறார்.
ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக சமரன் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி என்று த்ரிஷா
கூறியிருக்கிறார். அதாவது , விஷாலும் , நானும் நீண்டநாள் ‌நண்பர்கள்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சில
வருடத்திற்கு முன்பே தீர்மானித்தோம். ஆனால் இருவரும் வேறு சில படங்களில்
பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
சமரன் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது என்னால் மறுக்கமுடியவில்லை.
காரணம் சத்யம் படத்திலேயே என்னை நடிக்க விஷால் அழைத்தார்.
ஆனால்முடியவில்லை. அதனால் இந்தபடத்தை மறுக்க முடியவில்லை. மேலும் சமரன்
படத்தின் கதையும் எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் உடன் நடிக்க
ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ல் கொள்ளை.!

Penulis : karthik on Thursday, 19 January 2012 | 19:24

Thursday, 19 January 2012

தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பஸ்களில் கூடுதல்
கட்டணம் பெற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தியுள்ளது பொதுமக்களை கடுமையாக
பாதித்துள்ளது. கடந்த ஆண்டு பஸ் கட்டணத்தைவிட 50 சதவீதத்திற்குமேல்
கட்டணம் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அ‌தி‌ர்‌ப்தியை
ஏற்படுத்‌தியுள்ளது. ஒருபுறம் இப்படி இருக்க தமிழகத்தில்
அரசுபோக்குவரத்து கழகம் மறைமுகமாக மக்களை ஏமாற்றி வருவது
வேதனையானவிஷயமாகும்.
ஆம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவு பேருந்து, சொகுசு
பேருந்து இப்படி பல வகையாக பிரித்துள்ளனர். இதெல்லாம் நீண்ட தூரம்
செல்லும் பஸ்களுக்கு பொருந்தும். மற்றபடிஅனைத்து பஸ்களும் ஒன்றுதான். ஒரே
கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழகம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மக்களிடம்
கொள்ளையடித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இயக்க‌ப்பட்ட பிறகு அனைவரும் இந்த பஸ்ஸில்
சென்றால் நேரம் ‌குறைவதா‌ல் பயணிகள் இந்த பஸ்ஸில் செல்லவே
முக்கிய‌த்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பாயிண்ட்டூ பாயிண்ட் பஸ்ஸிற்காக
தனி கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட்
பெயரிலேயே எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு பயணிகளிடம் 50 சதவீதத்திற்கு மேல்
கட்டணம் வசூல் செய்வது எந்த விததத்தில் சரி என தெரிவில்லை.
உதாரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அனைத்து பஸ்களும் ரூ.26
கட்டணம் உள்ளது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்று போர்டு மட்டும் போட்டுவிட்டு
மிகவும் மோசமாக பஸ்ஸில் பயணம் செய்தால் இதே இடத்திற்கு செல்ல ரூ.35
வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத்தூர் செல்ல சாதாரண பஸ்களில்
பாயிண்ட் டூ பாயிண்ட் உட்பட ரூ.29 வசூலிக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ்
என்ற பெயரில் இதே இடத்திற்கு செல்ல ரூ.39 வசூலிக்கப்படுகிறது. (மீதம்
ஒருரூபாய் கண்டக்டர் கொடுப்பதில்லை என்பது வேறுவிஷயம்).
இந்த கட்டணம் குறித்து எக்ஸ்பிரஸ் பஸ் கண்ணாடியில் எழுதியிருந்தால் கூட
பயணிகள் கட்டணம் அதிகம் என அடுத்த பஸ்ஸில் செல்வார்கள். ஆனால் மக்களை
ஏமாற்ற அதையும் செய்வதில்லை. பஸ்ஸில் பயணிகள் ஏறி பஸ்
சென்றுகொண்டிருக்கும்போது கண்டக்டரிடம் டிக்கட் வாங்கும்போதுதான்
இந்தகூடுதல் கட்டணம் பற்றிய தகவல் தெரியவரும்.
ஆகவே அரசு பஸ்களில் பயணிகளை இப்படி ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்
என்பதை ஆட்சியாளர்கள்தான் கூறவேண்டும்.
நன்றி: வெப் துனியா
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger